எங்களை பற்றி

வரலாறு, தீர்க்கதரிசனம் ஆகியவைமூலம் கிறிஸ்தவப் புனிதப் புத்தகம் நம்மிடம் பேசுகிறது. முன்பு நடந்ததையும், விரைவில் நடக்கப்போவதையும் நமக்குச் சொல்கிறது. ஒரு திடுக்கிடும் முன்னுரைத்தலில், உலக அழிவுக்குமுன் வருகிற கடைசி எச்சரிக்கைச் செய்தியை நாம் படிக்கலாம்.

வெளிப்படுத்துதல் 14 இல், மூன்று தேவதூதர்களால் சொல்லப்பட்ட இந்த எச்சரிக்கைச் செய்தி மூன்று பகுதிகளாக வருகிறது. இந்த எச்சரிக்கைகள் ஒவ்வொன்றையும் முழுஉலகமும் கேட்கவேண்டியது மிகமுக்கியம்.

  • வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் படைத்த சிருஷ்டிகராகிய தேவனை வணங்குமாறு முதல் தூதன் சொல்கிறான். படைத்தவரை நாம் வணங்கவேண்டும்; ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்பு நேரம் வந்துவிட்டது. இந்தத் தேவனை நாம் எவ்வாறு அறிந்துகொள்வதையும், நியாயத்தீர்ப்பைக் கடந்துசெல்ல தயாராக இருப்பதையும் பற்றி முதல் தூதன் சொல்கிறான்.

  • கடைசிக்கால தேவதுரோகத்தைப்பற்றி இரண்டாவது தூதன் நம்மை எச்சரிக்கிறான். சிருஷ்டிகரான தேவனையும், வெளிப்படுத்தப்பட்ட அவரது வார்த்தையையும் மதிக்காத மத அமைப்புகளிலிருந்து 'வெளியே வாருங்கள்' என்று அழைக்கப்படுகிறோம்.

  • தீயவன் தேவதுரோக மத அமைப்பின்மூலம் படைத்தவருக்கும் அவர் மக்களுக்கும் எதிராக ஒரு இறுதித் தாக்குதலை நடத்துவான் என்று மூன்றாவது தூதன் நம்மை எச்சரிக்கிறான். அந்தத் தீயவனைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் \"அடையாளம்\" போடப்படும்; தேவனுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு உபத்திரவம் வரும். ஆனால் இந்த மோசமான அடையாளத்தை உடையவர்கள்மீது தேவன் தமது நியாயத்தீர்ப்புகளை ஊற்றுவார். விசுவாசமும் கீழ்ப்படிதலும் உள்ள அவருடைய மக்கள், பூமியின் அழிவிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் தேவனுடன் பரலோகத்திற்குச் செல்வார்கள்; மேலும் அவர் உலகத்தை முந்தைய பரிபூரணத்தோடு மீண்டும் உருவாக்குவதைப் பார்ப்பார்கள்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover