
நீங்களே சுதந்தரமாக யோசிப்பதற்கான வழி
சுருக்கம்
“பாபிலோன்” என்கிற குறியீட்டுப்பெயரையுடைய ஓர் ஆபத்தான மார்க்க சக்தியைப்பற்றி இறைவனின் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்துள்ளனர். தீர்க்கதரிசனத்தின்படி, இந்தச் சக்தி நம்மைக் கட்டாயப்படுத்தியும், மயக்கியும் தவறான வழிபாட்டிற்குள் நடத்த முயற்சிக்கும். நாமே சிந்தித்து, இறைவன் வெளிப்படுத்தியுள்ள வார்த்தைமேல் உறுதியான பற்று வைப்பதன்மூலம்மட்டுமே நாம் பாதுகாப்பைக் காணமுடியும். உலகளாவிய நெருக்கடி நேரத்தில் நாம் ஞானமும் சிந்தனையுமிக்க விசுவாசிகளாக இருப்பதற்கு நம் மனதை எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்று இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
34 மொழிகள்
பக்கங்கள்
6
நீண்டதூர மலையேற்றத்திற்குப்பிறகு கூனுங் தாட்டுக் மலையின் உச்சியை அடைந்தோம். எனது புதிய நண்பரான அட்சாக்குடன் சேர்ந்து இயற்கைக் காட்சியை ரசிப்பதற்காக உட்கார்ந்தேன். சீக்கிரமே மார்க்க விஷயங்களைநோக்கி எங்கள் உரையாடல் திரும்பியது.
“நான் ஒரு சுதந்திரச் சிந்தனையாளன்; உலகத்தைப்பற்றி எனக்கென சில பார்வைகள் உள்ளன” என்றார் அட்சாக்.
“ஆமாம், மலேசிய இளைஞர்கள் பலர் தங்களை சுதந் திரச் சிந்தனையாளர்கள் என்று அழைத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன்” என்றேன்.
அட்சாக் சிரித்தார். “நாமே சுயமாகச் சிந்திக்கவேண்டும். இல்லையானால், அதிக குழப்பமாகிவிடும். அது உங்களைப் பைத்தியமாக்கிவிடும்” என்றார்.
“ஆனால், உங்கள் விீட்டிற்குச் சென்றபிறகு என்ன செய்வீர்கள்? இங்கே மலேசியாவில், பல இளைஞர்கள் தங்களை சுதந்திரச் சிந்தனையாளர்களென அழைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் தங்கள் வீட்டில், அவர்கள் இஸ்லாமிய சடங்குகளிலோ பௌத்த சடங்குகளிலோ பங்கேற்றுத்தானே ஆகவேண்டும். உங்கள் பெற்றோரிடம் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன்.
“நான் அவர்களிடம் சொல்லமாட்டேன். “அவர்கள் விரும்பு கிறபடி செய்வேன். நான் சுதந்திரமாகச் சிந்திக்கமுடியும்; ஆனால் அதை எனக்குள்ளேயே நான் வைத்திருக்கவேண் டும்” என்று அட்சாக் பதிலளித்தார்.
சுதந்திரமாகச் சிந்திப்பது முக்கியமா?
உலகின் சில பகுதிகளில், மற்றவர்களுக்குப் பிடிக்காத நம்பிக்கை வைத்திருப்பவரை அவரது சமுகத்தினரே ஒதுக்கிவைக்கலாம்; வேலையிலிருந்து நீக்கலாம்; அல்லது கொல்லலாம். சுதந்தரமாக தானே சிந்திப்பது ஆபத்தாகவும் முடியலாம். ஆனால், அது முக்கியமா?
நமது உலகில் நல்ல கருத்துகளும் கெட்ட கருத்துகளும் நிறைந்துள்ளன. கெட்டதிலிருந்து நல்லதைப் பிரித்தெடுப்ப தற்கான ஒரு முக்கியமான வழி, அவற்றைப்பற்றிச் சிந்திப் பதும் பேசுவதும் ஆகும். தங்கம், குங்குமப்பூ, ஐபோன் போன்ற விலையுயர்ந்த ஒன்றை நீங்கள் வாங்கினால், உடனே அதற்குப் பணம்செலுத்தி, வீட்டிற்கு எடுத்துச் சென்று விடமாட்டீர்கள். நீங்கள் வாங்குவது உண்மையிலேயே தரமானதா என்பதை உறுதிப்படுத்த, அதைப் பரிசோதித்து, போட்டியாளர்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பீர் கள். கருத்துகளையும் அதே வழியில் கையாளவேண்டும்.
உலகில் அதிக குழப்பம் நிகழ்கிறது; மக்கள் தங்களுடைய சொந்தக் குழப்பமான கருத்துகளை சமூகத்தின்மீது திணிக்க முயலும்போது, அது இன்னமும் மோசமாக மாறு கிறது. ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைப்பற்றி உங் களுக்குச் சொல்கிறேன். “இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத் தல்” என்று அழைக்கப்படும் மிகப்பழைய புத்தகம் ஒன்றில், தங்களுடைய குழப்பமான மார்க்கக் கருத்துகளை மற்றவர் கள்மீது திணிக்க முயற்சிக்கும் மக்களைப்பற்றி ஒரு தீர்க்க தரிசனம் உள்ளது. அது, “பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே!” என்று கூறுகிறது (வெளி 14:18).
இந்த அடையாள வார்த்தைகளைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. பாபிலோன் புகழ்பெற்ற ஒரு பண்டைய நகரம்; ஆனால் அந்தப் பெயருக்கு “குழப்பம்” என்று அர்த்தம். அந்த நகரம் “விழுந்தது”; அது குழப்பமடைந்ததால் அல்ல, தன் குழப்பத்தை விட்டுவிட விரும்பாததால், அது விழுந்து விட்டது. தன் ஆவிக்குரிய வேசித்தனத்தில் சேரும்படி அது பிற தேசங்களையும் மயக்குகிறது; அதாவது, பொய்த் தொழுகையையும் மெய்த்தொழுகையையும் கலந்து, இறை வனுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்கிறது. இந்தத் தவறான கருத்துகள் இயல்பான கருத்துகளாக ஆக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆன்மிகப் பொய்களை இயல்பான தாக்குவது மட்டுமல்லாமல், சத்தியத்தில் உறுதியாக இருப் போர்மீது அவற்றைத் திணிக்கவும் முயல்கிற உலகளாவிய ஆன்மிக நிறுவனம் ஒன்றை “பாபிலோன்” பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம் குறிக்கிறது.
இது நம் நாட்களில் நடக்கும் என்று இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல் முன்னறிவிக்கிறது. இது நிகழ்ந்துவரு வதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். தவறான கருத்துகளுடன் இறைவனைக் காட்டுகிறவர்கள் இருக்கிறார் களா? உங்கள் மனச்சாட்சியில் சங்கடமாக இருந்திருக்கிறதா?
ஆம், அதனால்தான் சுதந்திரமாகச் சிந்திப்பது முக்கிய மானதாக இருக்கிறது.
நீங்களே சுதந்தரமாக யோசிப்பதற்கான வழி
பெரும்பாலான மக்கள் தங்கள் சமுதாயத்தின் மார்க்கத் தைப் பின்பற்றுவதில் திருப்தி அடைகிறார்கள். தங்கள் நம்பிக்கைகள் உண்மையானவையா என்று அவர்கள் யோசிப்பதில்லை. அவர்கள் அர்த்தமற்ற, அல்லது நல்லதை விட அதிகம் தீங்கு விளைவிக்கிற மார்க்க மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். சில சமயங்களில், இறைவனுடைய பாதையை நமக்குக் காட்டவேண்டிய மார்க்கத்தலைவர்கள் கூட, சீர்கேடுகளால் நிறைந்திருக்கிறார்கள்.
நாம் எவ்வாறு சத்தியத்தைக் கண்டுபிடிக்கலாம்? தீர்க்க தரிசிகளை நம்புங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஏன்? மூன்று காரணங்கள் உள்ளன:
தீர்க்கதரிசிகளிடம் எதிர்காலத்தைப்பற்றி அற்புதமான அறிவு உள்ளது. உலகத்தை காலனித்துவப்படுத்தும் அளவிற்கு ஐரோப்பா எழும்புமென்று தானியேல் தீர்க்கதரிசி முன்னறிவித்தார். கிபி 70இல் நடந்த எருசலேமின் அழிவை இயேசு கிறிஸ்து (ஈசா அல்-மஸீஹ்) முன்னறிவித்தார். இஸ்மாயிலின் வரலாறு காலத்தின் முடிவுவரை எப்படி இருக்கும் என்பதை தீர்க்கதரிசி மோசே (மூஸா) முன்னறிவித் தார்.
தீர்க்கதரிசிகள் உடல்நலம்குறித்த அற்புதமான விஞ்ஞான அறிவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தனிமைப்படுத்தல், சுகாதாரமான வழியில் கழிவுகளை அகற்றுதல், தொற்றுநீக்கக் கொள்கைகள் ஆகியவைபற்றி சுமார் 3,500 ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த மோசே தீர்க்கதரிசி விளக்கியுள்ளார். விலங்கினங்களை சுத்தமான மிருகங்கள், அசுத்தமான மிருகங்கள் என்று பிரித்துள்ளார். மேலும் சுத்தமான இறைச்சியை உண்ணும்போது இரத்தத்தையோ கொழுப்பையோ உண்ணக்கூடாது என்று கூறியுள்ளார். இன்றும்கூட, அவரது உணவு மற்றும் சுகாதார விதிகளைப் பின்பற்றுபவர்கள் பிற மக்களைவிட 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள்.
தம்மில் நம்பிக்கைவைத்து, தம்முடைய தீர்க்கதரிசி களை நம்புகிற விசுவாசிகளின் பிரார்த்தனைகளுக்கு இறைவன் பதிலளிக்கிறார்.
தீர்க்கதரிசிகளின் எழுத்துகளில் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன; ஆனால் அவற்றால் பயனடைவதற்கு, நாம் விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், நமது நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்க்கவும், நமது நம்பிக்கைக்கான ஆதாரங் களைச் சரிபார்க்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். சிந்திப் பது மெய்யான மார்க்கத்தின் ஒரு முக்கியப் பகுதி.
ஒரு பிழையை ஆராயும்போது என்ன நடக்கிறது? ஆரம் பத்தில் அது உண்மைபோலத் தெரியலாம். ஆனால் ஆதாரங் களைத் தேடும்போது, அந்தக் கருத்தில் உள்ள சிக்கல்களைக் காண ஆரம்பிப்போம்.
உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. கவனமாகச் சரிபார்க்கும்போது அதிலிருந்து எதுவும் விடுபடாது. எவ்வளவு அதிகமாக ஆராய்கிறோமோ, அவ்வளவு அதிக மாக உண்மை நமக்கு விளங்கும்.
தம்மை நம்புகிறவர்களை இறைவன் ஞானமான வழியில் நடத்துவதால், அவர்கள்தாம் உலகத்தில் அதிக ஞானமுள்ளவர்களாக இருக்கவேண்டும். நீங்கள் சுதந்திர மாகச் சிந்திக்கவோ, கேள்விகேட்கவோ அனுமதிக்கப் படாத சூழ்நிலையில் இருந்தால், அது இறைவனிட மிருந்து வந்ததல்ல. எவ்வளவுதான் ஆராய்ந்தாலும் உண்மை நிலைத்து நிற்கும் என்பதால், நாம் கூர்ந்து ஆராயவேண்டுமென்று இறைவன் நம்மை அழைக்கி றார். ஆனால் பாபிலோன் உங்களை பொய்க்குள்ளாக மயக்கி இழுத்து, அறிவார்ந்த முயற்சியைத் தடுத்து, உங்களை அங்கேயே முடக்குகிறது.
நீங்கள் பாபிலோனில் இருப்பதுபோல் மிகவும் குழப்பமாக இருந்தால், வெளியே வாருங்கள்! இறைவனுடைய ஞானமான பாதைக்கு வாருங்கள். நீங்கள் சுதந்தரமாக யோசித்து, தீவிரமான கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள். நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications