உங்களுக்கு அற்புதம் தேவையா?

உங்களுக்கு அற்புதம் தேவையா?

சுருக்கம்

தம்முடைய மக்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம், தேவன் அவர்களுக்காக அற்புதங்களைச் செய்துவருவதுபற்றி வரலாறுமுழுவதிலும் சான்றுகள் உள்ளன. நிறைவேறின தீர்க்கதரிசனங்கள், சுகமடைந்த நோயாளிகள், ஜெபத்திற்குப் பதிலளிக்கக்கூடியவிதத்தில் தேவன்மட்டும் செய்யக்கூடிய நம்பமுடியாத நிகழ்வுகள் போன்ற பல சம்பவங்களை வேதாகமம் சொல்கிறது. இறைவனின் மாறாத வார்த்தையே வேதாகமம் என்றும், நமக்குத் தேவையான அற்புதத்திற்காக இறைவனை அணுகலாம் என்றும் நாம் நம்புவதற்கு பல காரணங்களை இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்குகிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

34 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

ஒரு மிகப்பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள், வள மான வாழ்க்கையை எதிர்பார்த்து புதிதாக ஒரு நாட்டிற்குக் குடிபெயர முடிவுசெய்தார்கள். ஆனாலும் அந்தப் பயணம் எளிதாக இல்லை; அவர்கள் நடந்தே ஒரு பெரிய பாலைவனத்தைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே பாம்புகளும், தேள்களும் இருந்தன; வெப்பம் வாட்டி வதக்கி யது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது நோய்வாய்ப் பட்டு அல்லது பெலவீனமடைந்து பயணக்குழுவினரை விட்டுப் பின்தங்கினால், கொள்ளைக்காரர்களால் தாக்கப் பட்டார்கள்.

சீக்கிரமே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது; ஆனால், ஓர் அற்புதத்தைச் செய்யுமாறு இறைவனைநோக்கி அவர்களின் தலைவர் வேண்டினார். மறுநாள், மக்கள் விழித்தெழுந்த போது, பார்ப்பதற்கு அப்பம் போன்று இருந்த சிறுசிறு துண்டுகள் தரையில் சிதறிக்கிடந்ததைப் பார்த்தார்கள். தேனிட்ட அப்பம்போல அது மிகச்சுவையாக இருந்தது. ஒவ் வொருவரும் தங்கள் பசியைப் போக்க போதுமான அளவு கிடைத்தது! பாலைவனத்தைக் கடக்க பல நாட்கள் ஆனது; ஒவ்வொரு நாளும் வானத்திலிருந்து அந்த அப்ப மழை பெய் தது. இறைவனுக்கே புகழ் உண்டாகட்டும், அவர்கள் காக்கப் பட்டார்கள்!

இந்தச் சம்பவத்தைக் கேட்க ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அது உண்மையில் நடந்தது. தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல் என்ற பெயர்களில் நீங்கள் கேள்விப்பட்டுள்ள வேதாகமம் சொல்கிற பல அற்புதங்களில் இதுவும் ஒன்று, வேதாகமத் தில் நூற்றுக்கணக்கான உண்மைக் கதைகள் உள்ளன; அவற்றில் பல தமது மக்களின் வாழ்க்கையில் இறைவன் செய்த அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டவை. இன் றும் பலர் தங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் தேவைப்படு கிற நிலையில் இருக்கிறார்கள்; அவர்களுக்கு இது ஒரு முக்கியமான புத்தகம்.

நவீன கால அற்புதங்கள்

சமீப ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்கள், புரட்சிகள், பொருளாதாரச் சரிவு, வேலையின்மை, தொற்றுநோய்கள், மரணம் ஆகியவை அதிகரித்துள்ளன. இப்போது உங்கள் நிலைமை என்னவென்று எனக்குத் தெரியாது. நீங்கள் உங் கள் வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம். உங்களுக்குப் பிரிய மான ஒருவர் வாழ்வா-சாவா போராட்டத்தில் சிக்கித் தவிக்க லாம். நீங்கள் வேலைகிடைக்காமல் திண்டாடலாம். 

உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இறைவன் உங்கள்மேல் அக்கறைகாட்டுகிறார்; மேலும் பண்டைய காலத்தில் செய்ததைப் போலவே, இன்றும் உங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்ய ஆயத்தமாக இருக்கிறார். நீங்கள் கவலையாக இருக்கும்போது, அற்புதங்களின் புத்தகமான வேதாகமத்தை ஆராய்வதன்மூலம் ஊக்கம்பெறலாம்.

நம் காலத்திற்கான இறைவனுடைய வார்த்தைகள்

சிலர் வேதாகமம் எப்படியோ மாற்றப்பட்டுவிட்டது என்று கேள்விப்படுவதால், அதை வாசிப்பதற்குத் தயங்குகிறார் கள். வேதாகமத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிற பலரு டைய தவறான வாழ்க்கைமுறையின் காரணமாக இந்தத் தவறான கருத்து உருவாகியிருக்கலாம். சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் மது அருந்துவதையும், சூதாடுவதையும், கண்ணியமற்ற உடை உடுத்துவதையும், பன்றி இறைச்சி உண்பதையும், பிற மக்களை கேவலமாக நடத்துவதையும் பார்க்கிறோம். 

ஆனால் உண்மையில் இந்தத் தவறுகள் அனைத்தும் வேதாகமத்தில் கண்டனம் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்தவர் கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வதால், அது அவ ருடைய நித்திய வார்த்தையின் செல்லுபடித்தன்மையை மாற்றிவிடாது. ஏசாயா தீர்க்கதரிசி, “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” என்று எழுதியுள்ளார். (ஏசாயா 40:8). இறைவனுடைய வார்த் தையை மாற்றும் அளவுக்கு மனிதர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா, அல்லது தவறான நடத்தையால் அதை தவறாகச் சித்திரிக்க வாய்ப்பிருப்பதாக நினைக்கிறீர் களா?

தாவீது தீர்க்கதரிசியும் (தாவூத் என்றும் அழைக்கப்படு கிறார்) அவருடைய மக்களும் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச்சென்றதாக வேதாகமம் சொல்லுகிறது. பொன்னி னாலான அந்தப் பெரிய பெட்டிக்குள் பத்துக் கற்பனைகள் இருந்தன. பத்துக் கட்டளைகள் ஒழுக்கமான வாழ்க்கைக் கான தேவனுடைய சட்டங்கள்; அவை இரண்டு கற்பலகை களில் எழுதப்பட்டு, பொற்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன. ஒருமுறை அதை ஊர்வலமாகக் கொண்டுசென்றபோது, ஒருவன் தன் கையை நீட்டி, அந்தப் பெட்டியைத் தொடத் துணிந்தான்; உடனடியாகச் செத்துவிழுந்தான்!

தம்முடைய வார்த்தை அடங்கிய பரிசுத்தப் பெட்டியை துணிகரமாகத் தொடுவதற்கு மனிதர்களை இறைவன் அனுமதிக்கவில்லை என்றால், எழுதப்பட்ட தம் வார்த்தை யைக் கத்தரிக்கவும், திருத்தவும் முயற்சித்து, அதை அணுகு கிறவர்களை இறைவன் அனுமதிமாட்டார் என்பது எவ்வளவு நிச்சயம்? இறைவன் தம்முடைய வார்த்தையைப் பாதுகாக் கும் அளவுக்கு பெரியவர். 

உண்மையைச் சொன்னால், மனித வரலாற்றில் அதிகம் சரிபார்க்கப்பட்டு, நிரூபணமான புத்தகம் வேதாகமம்தான். சிறிது காலத்திற்குமுன்பு, பாலஸ்தீனாவின் பெடூவிக் பழங் குடியைச் சேர்ந்த முஹம்மது எத்-திப், ஜும்ஆ முஹம்மது, கலீல் மூசா என்ற மூன்று மேய்ப்பர்கள் தற்செயலாக சவக் கடல் சுருள்களைக் கண்டுபிடித்தார்கள். இது ஒரு முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்பு; இன்றைய வேதாகமத்தை சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்க உதவு கிறது. இரண்டுக்குமிடையேயுள்ள பொருத்தம் ஆச்சரிய மாக இருக்கிறது; இறைவனுடைய வெளிப்பாடுகளை மாற்றமுடியாது என்கிற உண்மையை இது மீண்டும் சுட்டிக் காட்டுகிறது. உங்களுக்கு ஒரு அற்புதம் தேவைப்பட்டால், அதைக் காண்பதற்கு வேதாகமம்தான் நம்பகமான இடம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்! அங்கே நோவா (நூஹ்), ஆபிரகாம் (இப்ராஹிம்), யோசேப்பு (யூசுப்), யோனா (யூனுஸ்), தானியேல், தாவீது (தாவூத்), சாலொமோன் (சுலைமான்) போன்ற தீர்க்கதரிசிகளைப்பற்றிய அற்புத மான சம்பவங்களைக் காணலாம். அவர்களைப்பற்றி ஆங் காங்கே சில தகவல்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் வேதாகமம் முழுக்கதையையும் சொல்கிறது!

வந்து, உங்கள் அற்புதத்தைக் கண்டுபிடியுங்கள்

நீங்கள் எதிர்கொள்கிற நெருக்கடி எதுவாக இருந்தா லும், வேதாகமத்தில் உங்களுக்கு ஒரு அற்புதக் கதை காத் திருக்கிறது:

  1. நீங்களோ, உங்கள் அன்புக்குரியவரோ வியாதியாக இருக்கிறீர்களா? தொழுநோயால் பாதிக்கப்பட்ட சீரிய நாட்டுத் தளபதியான நாகமான் அற்புதமாக குணமான சம்பவத்தை வாசியுங்கள். 

  2. உங்கள் குடும்பத்திற்கு உணவளிக்கச் சிரமப்படுகிறீர் களா? லெபனானிலிருந்த ஒரு விதவையையும் அவளது மகனையும்பற்றி வாசியுங்கள்; நீண்டகாலப் பஞ்சத்தின்போது அவர்களிடமிருந்த ஒரு சிறிய ஜாடி எண்ணெயும் ஒரு கைப்பிடி மாவும் வெகுகாலம் தீர்ந்துபோகாமல் இருந்ததால், தப்பிப் பிழைத்தார்கள். 

  3. உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதா? ராஜாவின் அரண்மனையில் இருந்த எதியோப்பிய அடிமையான எபெத்மெலேக்கைப்பற்றி வாசியுங்கள்; இறைவன் மேலிருந்த நம்பிக்கையின் காரணமாக போர்க்காலத் தில் அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது. 

  4. நீங்கள் புறக்கணிக்கப்பட்டவர்போல் உணர்கிறீர்களா? எகிப்திய பெண்ணான ஆகாரைப்பற்றி வாசியுங்கள்; தன் குடும்பத்தால் அவள் தள்ளப்பட்டபோது இறைவனின் அற்புதங்களைக் கண்டாள்.

  5. வாழ்க்கையின் இக்கட்டுளுக்குள் மூழ்கிக்கொண்டி ருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து தமது கரத்தை நீட்டி, ஒரு பயங்கரமான புயலை அமைதிப்படுத்தி, கப்பல் சேதத்திலிருந்து தம்முடைய சீடர்களைக் காப்பாற்றியதுபற்றி வாசியுங்கள்.

அற்புதமாகக் கிடைத்த பதில்கள்

நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, நல்ல எதிர்பார்ப் புடன் ஜெபிக்கலாம் என்கிற நம்பிக்கை நிறைகிறது. இயேசு கிறிஸ்து, “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர் கள்” என்று கூறினார். (மத்தேயு 21:22). கர்த்தரிடமிருந்து அற்புதங்களைப் பெற்ற மற்றவர்களின் அனுபவங்களை வாசிக்கும்போது, நாமும் பரலோகத்தைநோக்கி விண்ணப்பம் செய்யலாம் என்கிற நம்பிக்கை நம் இதயங்களில் ஏற்படு கிறது.

உங்களுக்கு அற்புதம் தேவையா? வேதாகமத்தில் உள்ள அற்புதங்களால் நம்பிக்கையடைந்து, உங்களுக்கும் ஓர் அற்புதம் செய்யும்படி இறைவனிடம் கேளுங்கள். அவர் நிச்சயமாக இன்று உங்கள் ஜெபத்தைக் கேட்பார்!

நீங்கள் வேதாகமத்தில் உள்ள அற்புதங்களைப்பற்றி மேலும் அறிய விரும்பினால், இந்தத் தாளின் பின்பகுதியில் உள்ள தகவலில் எங்களை தொடர்புகொள்ளவும்.

Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover