துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

துன்பத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

சுருக்கம்

இன்று பலர் தவறாகவும் முறைகேடாகவும் நடத்தப்படுகிறார்கள். இயேசுவும் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார். ஆனால், அவர் மற்றவர்களுக்கு உதவினார்; அவர்களைக் குணப்படுத்தினார்; சிறந்த வழியைக் காண்பித்தார். சிலர் அவரை வெறுத்து, அவரைக் கொன்றனர்; ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் உயிர்பெற்று, பரலோகத்திலுள்ள தம் பிதாவிடம் திரும்பினார். இந்தத் துண்டுப்பிரசுரம் இயேசுவின் வாழ்க்கையையும், அவர் அடைந்த துன்பங்களையும் சுருக்கமாகச் சொல்கிறது; நமது உடைந்த இதயங்களைக் குணப்படுத்துவதற்காக அவர் கொடுத்த வாக்குறுதியையும் சொல்கிறது.

பதிவிறக்கம்செய்

“இதுவும் பெண் குழந்தையா!” அவன் வெறுப் பைக் கக்கினான். அவனுக்கும் அவன் மனை விக்கும் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை கள் இருந்தார்கள். “எங்களுக்குத் தேவை ஒரு மகன், மற்றொரு மகள் அல்ல!” என்று கோபப்பட்டான். சைலை என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண் குழந்தையை அவன் தனது உறவினர்களிடம் கொடுத்துவிட்டான். அங்கே சைலைக்கு வேதனையான வாழ்க்கையே காத்திருந்தது. “நீ ஒரு முட்டாள்; அதனால் பள்ளிக்குச் சென்று படிக்க உன்னால் முடியாது” என்று அவளுடைய வளர்ப்புப் பெற்றோர் சொல்லிவிட்டார்கள். அவளை ஓர் அடிமையாக நடத்தி, வேலைவாங்கினார்கள். அன்பில்லாச் செயல்களால், சைலையின் மனதில் அவமானமும் கோபமும் பொங்கி வழிந்தன. அவளிடம் அன்புகாட்ட யாரும் இல்லை என்று தோன்றியது.

சைலையின் அனுபவம் போன்ற கதைகளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை பிறர் உங்களை தவறாக நடத்தியிருக்கலாம்; மனவேதனைக்குள் தள்ளியிருக்கலாம்.

வலி தாங்கமுடியாததாகத் தெரியும்போது, நாம் தப்பிக்க முயற்சிக்கிறோம், ஆனால், நமக்கும் மற்றவர்களுக்கும் அதிக தீங்கு விளைவிக்கிற செயல்களைச் செய்துவிடு கிறோம். நம் கடந்த காலத்தில் செய்த ஏதோ ஒரு தவறு இப்போது நமக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்று சில சமயங்களில் நாம் நினைக்கலாம். ஆனால் அந்த எண்ணம் நமக்கு ஆறுதல் தருவது இல்லை. அதனால், மேலும் பயமும் விரக்தியும் ஏற்படுகின்றன. நம் வேதனைகளும் துயரங் களும் முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கை ஏதாவது இருக் கிறதா?

சைலை உட்பட கோடிக்கணக்கான மக்கள் இயேசுவின் உண்மையான அனுதாபத்தையும் அன்பையும் உணர்ந்து, நம்பிக்கைபெற்றுள்ளனர். 

இயேசு யார்?

போதகரான இயேசு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்த சிறிது காலத்திலேயே, அவரும் அவருடைய பெற்றோரும் கொடுங்கோல் மன்னன் ஒருவனிடமிருந்து தப்பியோடி, எகிப்தில் அகதிகளைப் போல வாழநேரிட்டது. அந்தப் பொல்லாத அரசன் இறந்த பிறகு, அவர்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பி, நாசரேத்தில் குடியேறினார்கள்; அந்த ஊர் தீச்செயல்கள் நிறைந்த நகரம் ஆகும். மிகச்சிறந்த போதகருக்கு இது மிகமிக மோசமான ஒரு தொடக்கமாக இருந்தது போலத் தெரி கிறது அல்லவா? 

இயேசு என்ற பெயருக்கு “கடவுள் காப்பாற்றுகிறார்” என்று பொருள். ஒரு மீட்பர் உலகிற்கு வருவார் என்றும், அவர் யாரைக் காப்பாற்ற வந்தாரோ அவர்களைப்போல அவரும் துன்பப்படுவார் என்றும் இயேசு பிறப்பதற்கு எழுநூறு ஆண்டுகளுக்குமுன்பே செல்லப்பட்டுள்ளது. வேதனைப் படுகிறவர்களுக்கு உதவுவதும், துன்பங்களுக் கும் சாவுக்கும் முடிவுகட்டுவதே அவருடைய பணி. 

இயேசுவின் உண்மையான நட்பு

பாதிக்கப்பட்டவர்களிடம் இயேசு எவ்வளவு நெருங்கிவந் தார் என்பதை விளக்குகின்ற சம்பவங்கள் பல உண்டு. கிறிஸ் தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் அவற்றைப் பார்க் கலாம்.

ஒரு நாள், இயேசு ஓரிடத்தில் உபதேசித்துக் கொண்டிருந் தார். கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கே வந்தார். அவருடைய உடலைப் புண்கள் மூடியிருந் தன; உடலிலிருந்து துர்நாற்றம் வீசினது. எந்த நம்பிக்கை யும் இருப்பதாகத் தெரியவில்லை. அவமானம் அவர் மனதைப் பாதித்தது. ஏனெனில், அவருடைய தவறுகளுக் குத் தண்டனையாக அவருக்கு அந்த நோய் வந்திருக்க வேண்டும் என்று அவருடைய காலத்து மக்கள் நம்பினார் கள். ஆனால், இயேசு அவரை நெருங்கி, அவரைத் தொட்டார். உடனே, அந்நோயாளி குணமடைந்தார்! 

இயேசு மற்றொரு முறை, பேய் பிடித்த மனிதர்கள் இரு வரைச் சந்தித்தார்; அவர்கள் கல்லறைகளுக்கு மத்தியில் வாழ்ந்தார்கள்; தங்களைக் கற்களால் வெட்டிக்கொண்டு, கூக்குரலிட்டார்கள். இயேசுவைக் கண்டதும் அங்கிருந்து அவர் போய்விட வேண்டுமென்று அவரிடம் அந்தத் தீய ஆவி கள் கேட்டுக்கொண்டன. ஆனால், இயேசுவோ அந்த இரண்டு மனிதர்களையும்விட்டு வெளியேறும்படி அந்த ஆவிகளுக்குக் கட்டளையிட்டார். ஆவிகள் கீழ்ப்படிந்தன; மனிதர் இருவரும் உடனடியாக சுயபுத்திக்குத் திரும்பினார்கள்.

பின்னர், ஐந்து முறை திருமணம்செய்து கொண்டதால், ஊரில் அவப்பெயர் பெற்றிருந்த ஒரு பெண்ணை இயேசு அவளுடைய சொந்த ஊரில் சந்தித்தார். இயேசு அவளிடம் அன்பாகப் பேசியபோது, அது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்; தனக்கு நம்பிக்கைதந்த அந்தப் பெரிய போதகரைப் பார்ப்பதற்கு ஊரார் அனைவரையும் அழைத்து வந்தாள். 

துன்பம் அனுபவித்த நண்பர்

குணப்படுத்துகிற வல்லமையுடைய அத்தகைய அன் பான போதகரிடம் அனைவரும் அன்பாக இருந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள். அவரிடம் அனேகர் அன்பாக இருந்தது உண்மைதான். ஆனால், மதப் போதகர்கள் இயேசுவின் பிரபலத்தைக் கண்டு பொறாமைப்பட்டு, அவரை அழிக்க ஒரு திட்டம்போட்டார்கள்.

“பொய்யாகக் குற்றம்சாட்டி, என்னைக் கொன்றுவிடு வார்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். மனித துன்பங்களைத் தாமே அனுபவித்து, மக்களின் இதயங் களை மாற்றுவது கடவுளின் திட்டம் என்று அவர் விளக்கி னார். “மூன்றாம் நாள் உயிரோடு எழும்புவேன்” என்று அவர் முன்னுரைத்தார். ஆனால், தங்கள் அன்பான போத கர் மிகமோசமாகத் துன்பப்படுவார் என்பதை அவருடைய சீடர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவர்கள் அவரைப் பாதுகாக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள்.

வேதனை என்னவென்றால், இயேசு சொன்னது போலவே நடந்தது. பேராசையால் கொஞ்சம் பணத்திற் காக இயேசுவை ஒரு சீடன் காட்டிக்கொடுத்தான்; நள்ளிர வில் அவரைப் பிடிக்க ஒரு கும்பலுக்கு உதவினான். மற்ற சீடர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். அரசாங்கத்தைக் கவிழ்க்க இயேசு திட்டமிட்டதாக, பொய்ச்சாட்சிகள் குற்றம்சாட்டி னார்கள். இயேசு குற்றம்சாட்டப்பட்டு, கொடூரமாக அடிக் கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, பயங்கர வேதனை யோடு இறந்தார். 

நம் துன்பத்தில் நம்பிக்கை

இயேசுவின் தாயும் சீடர்களும் அழுது, கல்லறையில் அவருடைய உடலை வைத்தார்கள். கல்லறைக்கு வீரர்கள் முத்திரைபோட்டார்கள்; அதிகாரிகள் கல்லறைக்கு வெளியே காவலர்களை வைத்தார்கள். ஆனால் மூன்றாவது நாளில், ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது; கல்லறை திறந்தது; இயேசு உயிர்த்தெழுந்தார். 

இயேசு தம்முடைய சீடர்கள்முன் தோன்றியபோது, ​​அவர் களுடைய கண்களை அவர்களால் நம்ப முடியவில்லை! அவருக்கு அவர்கள் மிகவும் தேவைப்பட்ட நேரத்தில், ஓடிவிட்ட செயலை அவர்களுக்கு அவர் மன்னித்தார். வேதாகமத்திலிருந்து அவர்களுக்கு உண்மைகளை அவர் கற்பித்தார்; துன்பத்தையும் மரணத்தையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது இறுதித் திட்டத்தை அவர்களுக்குக் காட்டினார். தமது மீட்புப் பணியை முடிப்ப தற்காக, அவர் திரும்பி வருவார்; அதற்குத் தயாராகும்படி அனைவரிடமும் சொல்லுமாறு கட்டளையிட்டார். பின்னர், இயேசு பரலோகத்திற்குத் திரும்பினார். 

நம் வலிகளைப் புரிந்துகொள்கிற ஒரு நண்பர்

சைலை எவருக்கும் தேவைப்படாத ஒரு பெண்; இறுதி யில் அவள் ஒரு போரின்போது தப்பி ஓடி, அகதிகள் முகாமை அடைந்தாள். அங்கே பணிபுரிந்த அன்பானவர் களிடமிருந்து இயேசுவைப்பற்றி அறிந்துகொண்டாள். வேதாகமத்திலிருந்து அவர்கள் சொன்ன கதைகளை அவள் கேட்டாள், துன்பத்தையும் மரணத்தையும் முடிவுக் குக் கொண்டுவருவதற்காக, கடவுள் போட்டிருக்கிற திட்டத்தை அறிந்துகொண்டாள். தன் அவமானத்திலும் துன்பத்திலுமிருந்து தன்னைத் தப்புவிக்க கடவுளால் உதவ முடியும் என்பதை சைலை அறிந்துகொண்டாள்; அதனால் தன் இதயத்தை குணப்படுத்தும்படி அவரிடம் கேட்டாள். கடவுள் அவளுடைய வெறுப்பையும் கசப்பையும் மாற்றி னார்; மன்னிப்பும் இரக்கமும் அவள் உள்ளத்தில் நிறைந் தன. எப்படி கடவுள் சுத்தமாகத் தன்னைக் கழுவி, தன் மகள் என்று அழைக்கிறார் என்பதை இன்று மக்களிடம் சொல்லி வருகிறாள்.

உங்களைப்பற்றி என்ன? நீங்களும் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறீர்களா? நீங்கள் கடவுளிடம் இப்படிப் பேசலாம்: 

அன்புள்ள கடவுளே, நான் அனுபவித்த வேதனைகளைப் புரிந்துகொண்டதற்கு நன்றி. (உங்கள் சிரமங்களை இங்கே விளக்குங்கள்). துன்பங்களிலிருந்து எங்களைக் காப்பாற்ற இயேசுவை அனுப்பியதற்கு நன்றி. தயவு செய்து என் இதயத்தைக் குணப்படுத்தி, எனக்கு அமைதி யையும் மன்னிக்கும் ஆவியையும் கொடுங்கள். ஆமென்.

இயேசுவைப்பற்றியும், துன்பக் காலங்களில் அவர் எவ் வாறு நமக்கு உதவுவார் என்பதைப்பற்றியும் நீங்கள் மேலும் அறிய விரும்பினால், இந்தத் தாளின் பின்பகுதியில் உள்ள தகவலைப் பார்த்து, எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover