இளைப்பாறுதல் இல்லாத உலகில் இளைப்பாறுதல்

இளைப்பாறுதல் இல்லாத உலகில் இளைப்பாறுதல்

சுருக்கம்

மன அழுத்தமும் அதிக வேலையும் பலரை அவர்களுடைய காலத்திற்குமுன்பே கல்லறைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது. ஆனால், படைப்பின்போதே, மன அழுத்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை இறைவன் ஏற்படுத்தியுள்ளார்: அது இளைப்பாற ஒரு நாள். இந்தப் புனித நாளானது மனிதர்கள் தங்கள் வேலையிலிருந்து ஓய்வெடுக்கவும், இறைவனுடன் நேரம்செலவிடவும் ஓர் ஆசீர்வாதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அந்நாளை நினைவில்வைக்கும்படி இறைவன் கட்டளையிட்டிருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலானோர் இந்த விசேஷித்த நாளை மறந்துவிட்டனர். மேலும் பலர் அதைக் கொடுத்த சிருஷ்டிகரையும் மறந்துவிட்டார்கள்.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

34 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

மிதா தூரன் இறந்துவிட்டாள். இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதே ஆன துடிப்புமிக்க அந்த நகல் எழுத்தாளி தனது மேசையில் மூர்ச்சையாகிக் கிடந்தாள். என்ன நடந்தது? 

மிதா ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்தாள்; அங்கு எதிர்பார்ப்புகளும் வேலைப்பளுவும் அதிகமாக இருந்தன. அவள் இறப்பதற்குச் சற்றுமுன், தான் மிகவும் களைத்திருப்ப தாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தாள்: “தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றிரவும் அலுவலகத்தின் சாவியை எடுத்துச்செல்கிறேன்.... எனக்கு ஜீவனே இல்லை.”

ஆசியச் சந்தையில் கிடைக்கிற ஆற்றல் பானமாகிய க்ரேட்டிங் டேங் எனப்படும் கஃபின் பானத்தையே சார்ந் திருந்தாள். அவளது கடைசி இணையப் பதிவு, “30 மணி நேரமாக வேலைசெய்கிறேன், இன்னும் களைப்பு இல்லை” என்று இருந்தது. அதன்பிறகு மேசையில் மூர்ச்சையானவள் எழுந்திருக்கவே இல்லை. 

என்ன நடந்தது? அதிக வேலைப்பளுவால் மிதா இறந்துவிட்டாள்.

இன்று, நம்மில் பலர் நேரமே இல்லாமல் பரபரப்பாக இயங்குகிறோம். அதிகமாக உழைக்கவும், அதிகமாகச் சம்பாதிக்கவும், அதிகமாகப் பொருள்வாங்கவும் சமுதா யம் நம்மைத் தூண்டுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, மனக்களைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம். 

மிதா தூரனைப்போல நாம் நம்மைக் கொல்லாமல் இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை பாரமாக இருக்கலாம். இதுதான் நம்மைப்பற்றி இறைவனுடைய திட்டமா? அவரே சமாதானம் கொடுப்பவர். நாம் அளவுக்கதிகமாக வேலை செய்யும்போது, சமாதானமாக உணர்கிறோமா? நிச்சய மாக இல்லை!

நாம் களைப்பால் முடங்கிக்கிடந்தால், நாம் நினைவில் கொள்ள இறைவன் விரும்புகிற ஒன்றை மறந்துவிட்டோம் என்று அர்த்தம். இளைப்பாறுதல்பற்றி அவர் சொல்லி யிருப்பதைக் கண்டுபிடிப்போம். 

“இடை ஓய்வு” பொத்தானை அழுத்துதல்

இறைவன் மிகுந்த கருணையும் மிகுந்த அன்பும் உள்ள வர். ஓர் அலைபேசி அல்லது மடிக்கணினிக்கு மின்னேற்றல் தேவைப்படுவதுபோல, மனிதர்களுக்கும் அவர்களது சரீர, மன, ஆன்மிக ஆற்றலைப் புதுப்பிக்க நேரம் தேவைப்படுவது இறைவனுக்குத் தெரியும். அதனால்தான், இறை தீர்க்கதரிசி யான மோசே (மூசா என்றும் அழைக்கப்படுகிறார்) இறை வனுடைய கட்டளையை இவ்வாறு பதிவுசெய்தார்:

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல் லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம் (தவ்ராத் என்றும் அழைக்கப்படுகிற வேதாகமத்தின் முதல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள் ளது: யாத்திராகமம் 20:8-10).

இறைவனுடைய மாறாத கட்டளையானது ஏழாம்நாளை நாம் நினைவுகூர வேண்டுமென்று சொல்கிறது. இளைப்பாறு தலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஏழாவது நாள், உலகின் பல மொழிகளில் “ஓய்வுநாள்” என்று அழைக்கப்படுகிறது. அதை நினைவுகூரும்படி இறைவன் ஏன் நமக்குக் கட்டளை யிட்டார்? ஏனென்றால், மறதி என்பது ஆதாமின் காலம் தொடங்கி மனிதகுலத்தில் இருந்துவருகிற பிரச்சினை என்பதை அவர் அறிந்திருக்கிறார். இறைவனுடைய கட்டளை களை நாம் மறந்துவிடக் கூடாது; ஏனென்றால் நாம் அவரை யும் அவருடைய கட்டளைகளையும் நினைவுகூரும்போது tமட்டுமே சரியான பாதையில் நடப்போம்.

ஆனால் ஓய்வுநாள் ஏன் விசேஷித்த ஒன்றாக இருக் கிறது? இறைவன் நமக்குச் சொல்கிறார்,

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார் (யாத்திராகமம் 20:11).

இறைவன் சிருஷ்டிகர் என்பதற்கு ஓய்வுநாள் ஒரு முக்கிய நினைவூட்டலாகும். இறைவன் சோர்வடைவ தில்லை என்பதால், ஏழாவது நாளில் அவர் ஓய்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் ஆட்சேபிக்கிறார் கள். ஆனால் இறைவன் சோர்வினால் ஓய்வெடுக்கவில்லை; நாம் ஓய்ந்திருக்கும்படி ஒரு பரிசுத்தமான நேரத்தை உருவாக்கவே தமது படைப்பு வேலையை நிறுத்தி ஓய்ந்திருந்தார்.

மனித குலத்திற்கு ஓய்வுநாள் நல்லது என்று இறை வன் கண்டார். அவர் ஏழாவது நாளை ஓய்வுநாளாக்கினார்; அதாவது ஓர் இடைவேளையாக அல்லது இடைநிறுத்த மாக ஆக்கினார். எனவே, ஒவ்வொரு வாரத்தின் ஏழாவது நாளும் “இடைஓய்வு” பொத்தானை அழுத்த ஒரு சிறப்பு நாளாக உள்ளது. நாம் அவரை நினைவுகூரவும், வணங்க வும் ஒரு நாள் முழுவதும் நம் வேலையையும் சாதாரண மான செயல்களையும் நிறுத்தி ஓய்வெடுக்கவேண்டும். 

உங்கள் முதலாளியோ பேராசிரியரோ அதிக ஓய்வு எடுக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டால், அற்புதமாக இருக்கும் அல்லவா? ஆனாலும் அதைத்தான் இறைவனும் கட்டளையிட்டிருக்கிறார்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவர் உண்மையிலேயே கருணையுள்ளவர்! 

இறைவனுடைய நாளைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ளுதல்

ஓய்வுநாள் என்பது உலகில் உள்ள அனைத்து மக்க ளுக்கும் உலகளாவிய ஒரு பரிசுத்த நாள். யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், இந்துக் கள் தோன்றுவதற்குமுன்பே மெய்யான படைப்பாளராகிய இறைவனைமட்டுமே நம்பினவர்கள் இந்த நாளைக் கைக்கொண்டு வந்தார்கள். உண்மையில், உலகம் படைக்கப்பட்டபோது, இது மனிதகுலம் முழுவதிற்கும் அருளப்பட்டது. ஆதாமும் ஏவாளும் (ஹவ்வா என்றும் அழைக்கப்படுபவர்) ஓய்வுநாளைக் கடைப்பிடித்தார்கள்; இறைவன் நம்மை நினைவில்கொள்ளச் சொன்னதை மறப்பதற்கு அவர் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை.

வருத்தம் என்னவென்றால், ஓய்வுநாள் பெரும்பாலும் மறக்கப்படுகிறது. ஓய்வுநாளை மறந்தால், இறைவன் அழிவைக் கொண்டுவருவார் என்று பண்டைய யூதர்களிடம் தீர்க்கதரிசிகள் எச்சரித்தார்கள். அந்த எச்சரிப்புக்கு அவர் கள் செவிசாய்க்கவில்லை; அதனால் எருசலேம் அழிக்கப் பட்டது; அவர்களது குடும்பத்தினர் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். கிறிஸ்தவர்களும் இறைவனுடைய கட்டளைக்கு எதிராக தங்கள் பரிசுத்த நாளை ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றி ஓய்வுநாளை மறந்துவிட்டார்கள். இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைசெய்கிறார் கள்; ஆனால் படைப்பாளருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ, ஏழாவது நாளில் ஓய்ந்திருக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள். 

இந்த முக்கியமான நாளை உலகம்முழுவதுமே மறப்பது போல் தோன்றுகிறதே, ஏன்? இந்தப் பரவலான மறதிக்கு தீயநோக்கம் ஏதாவது காரணமாக இருக்கிறதா?

நம்மைப் படைத்தவரிடமிருந்து நம் மனதைத் திருப்ப சாத்தான் (ஷைத்தான்) பயன்படுத்தப் போகிற உலக ளாவிய வல்லமையைப்பற்றி மேசியாவாகிய இயேசு (ஈஸா அல்-மஸீஹ்) எச்சரித்திருக்கிறார். பொய்யான ஓய்வுநாளில் ஆராதனை செய்யும்படி இலட்சக்கணக்கானோர் வஞ்சிக்கப் படுவார்கள். படைப்பாளரின் நாளை நாம் மறந்துவிட்டால், படைப்பாளரையே மறந்துவிடுவோம் என்று சாத்தான் நம்புகிறான். ஆனாலும், நாம் மெய்யான ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கும்போது, நம்மைப் படைத்தவர்மேல் மெய்ப் பற்றைக் காட்டுகிறோம்; அப்போது இளைப்பாறுதல், ஆசுவாசம், சமாதானம் ஆகிய ஈவை அனுபவிக்கிறோம்.

இறைவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தல்

“கர்த்தர் ஏழாம்நாளை ஆசீர்வதித்தார்” என்று மோசே தீர்க்கதரிசி எழுதியுள்ளார் (ஆதியாகமம் 2:3). நீங்கள் சோர்ந்தும் களைத்தும் இருக்கிறீர்களா? ஓய்வுநாளில் ஆசீர்வாதங்கள் உண்டு! 

இந்தோனேசியாவைச் சேர்ந்த நகல் எழுத்தாளரான மிதா தூரன் அதிக வேலைப்பளுவால் இறந்தாள்; ஆனால், நீங்கள் அவ்வாறு இறக்கவேண்டியதில்லை. ஒவ்வொரு வாரமும் உங்கள் வேலைகளிலிருந்து ஓய்வெடுக்குமாறும், ஓய்வுநாளின் ஆசீர்வாதங்களை அனுபவிக்குமாறும் இறைவன் உங்களை அழைக்கிறார். 

இறைவன் நமக்கு எவ்வாறு இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் சுகமாகுதலையும் கொடுக்கிறார் என் பதைப்பற்றி மேலும் அறிய விரும்பினால், இந்தத் தாளின் பின் புறத்தில் உள்ள தகவலில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover