
கருணைக்காக ஏங்குதல்
சுருக்கம்
இறைவனின் கருணை எப்படி இருக்கும்? “நான் உன்னை மன்னிக்கிறேன்” என்று அவர் வெறுமனே கூறுகிறாரா? அல்லது நம்மைப்பற்றிய கேவலமான பதிவுகளை அகற்றுவதற்கு அவர் ஒரு பதிலீடு வழங்குகிறாரா? பதிலீட்டுத் தியாகத்தின் தேவையையும், அதன் அர்த்தத்தையும் விளக்க உதவுகிற உள்நாட்டுப் பாணியிலான ஒரு கதையை இந்தத் துண்டுப்பிரசுரம் கூறுகிறது. தங்கள் பாவம் மன்னிக்கப்படும் என்பதையும், தங்கள் அவமானம் அகற்றப்படும் என்பதையும் அறிந்துகொள்வதால், வாசகர்கள் நம்பிக்கை பெறுவார்கள்.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
35 மொழிகள்
பக்கங்கள்
6
ஈத் பெருநாளில் பாத்திமா தனியாக இருந்தாள்; தாங்கமுடியாத அளவுக்கு தனிமை அவளை வாட்டியது. அந்தத் தனிமைக்கு முற்றிலும் அவள்தான் காரணம், அப்படித்தானே?
அகமதுவைத் திருமணம்செய்ய தன் அப்பாவிடம் பாத்திமா பயங்கரமாகச் சண்டைபோட்டிருந்தாள்; அது இப்போது நினைவுக்கு வந்தது. அவளுக்கு வாலிப வயது, காதலில் விழுந்தாள். அதற்கு அப்பா எவ்வாறு மறுப்பு சொல்லலாம்? அதனால் அவள் அகமதுவுடன் ஓடிப்போய் திருமணம்செய்ததால், திரும்பி தன்னிடம் வரக்கூடாது என்று அப்பா சொல்லிவிட்டார்.
அகமது மீதிருந்த அன்பால், எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள முடியும் என்று நினைத்தாள். ஆனால் சீக்கிரமே, தன் அப்பா சொன்னது சரிதான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அவள் விரும்பிய அகமதுவாக அவன் இருக்கவில்லை. இவளை விட்டுவிட்டு, வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டான்.
பாத்திமா தன்னை நினைத்து வெட்கப்பட்டாள். தன்னு டைய தவறுக்கான நியாயமான தண்டனையை இப்போது தான் அனுபவிப்பதாக நம்பினாள். எல்லாம் நியாயம்தான் என்பதை நன்கு புரிந்துகொண்டாள். ஆனால், கருணை வேண்டி அவள் உள்ளம் எவ்வளவாக ஏங்கியது!
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்
உண்மையைச் சொன்னால், நாம் அனைவருமே ஞான மான வார்த்தைகளைப் புறக்கணித்து, பெரும் தவறுகளைச் செய்திருப்போம். மற்றவர்களைப் புண்படுத்தியிருக்கி றோம். மற்றவர்கள் நம்மைப் புண்படுத்தியிருக்கிறார்கள். நமது சமுதாயங்களும் தவறுசெய்பவர்களால் ஆனவைதாம். ஒருவரையொருவர் மன்னிப்பதும், நம்மையே மன்னிப்பதும் எவ்வளவு கடினமாக இருக்கிறது!
நம் தவறுகளுக்குக் கருணை உண்டா?
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்” எனும் அர்த்தமுள்ள “பிஸ் மில்லா அல்-ரஹ்மான் அல்-ரஹீம்” எனும் சொற்றொடரை எத்தனைமுறை சொல்லியிருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கருணைபற்றி சிறப்பானது என்ன?
ஒருவேளை நமது சமுதாயங்களுக்கும், ஏன் நமது இருதயங்களுக்கும் கருணை மிகவும் தேவைப்படுவதே அதன் சிறப்பாக இருக்கலாம்.
கருணை: மிகமேலான பாதை
சில ஆண்டுகளுக்குமுன்பு, அப்துல்-ரஹ்மான் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரரான கரீமுடன் சண்டையிட்டு, அவரைக் கொன்றுவிட்டார். அதனால் அந்தச் சிறிய எகிப்திய கிராமத்தில் இரு குடும்பங்களின் வாழ்க்கையும் ஸ்தம்பித்து விட்டது. கரீமின் குடும்பத்தினர் பழிவாங்க முயன்றனர்; அதேசமயம் அப்துல்-ரஹ்மானின் குடும்பத்தினர் பயத்துடன் அவரைப் பாதுகாக்க முயன்றனர். பழிவாங்கும் சுழற்சி தொடருவதை அப்துல்-ரஹ்மான் விரும்பவில்லை. அவர் கிராமத் தலைவர்களிடம் ஆலோசனைகேட்டார்; அவர்கள் சவச்சீலைச் சடங்கு செய்யும்படி பரிந்துரைத்தார்கள்.
அப்துல்-ரஹ்மான் தன்னை அடக்கம்செய்வதற்கு வெள்ளை சவச்சீலை ஒன்றைக் கொண்டுவந்து, அதன்மேல் ஒரு கத்தியை வைத்தார். கிராமத்தினர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, சந்தைப்பகுதியில் கரீமின் குடும்பத்தைச் சந்திக்கும்படி நடந்துசென்றார். பாதிக்கப்பட்ட வரின் சகோதரரான ஹபீபுக்குமுன் அப்துல்-ரஹ்மான் மண்டியிட்டு, சவச்சீலையையும் கத்தியையும் கொடுத்தார். தன்மேல் கருணைகாட்டி, தன்னோடு ஒப்புரவாகும்படி வேண்டினார்.
அப்துல்-ரஹ்மானின் கழுத்தில் ஹபீப் அந்தக் கத்தியை வைத்தார். கிராமத் தலைவர்கள் ஓர் ஆட்டைக் கொண்டு வந்தார்கள்; ஹபீப்தான் முடிவு எடுக்க வேண்டியிருந்தது: கருணைகாட்டுவதா அல்லது பழிவாங்குவதா? அவர் அப்துல்-ரஹ்மானின் கழுத்தில் கத்தியை வைத்திருந்ததால், “இப்போது நீ என் அதிகாரத்தில் இருக்கிறாய். எல்லாரும் இதைப் பார்க்கிறார்கள்; உன்னைக் கொல்லுகிற உரிமை யும், அதைச் செய்வதற்கான பெலனும் எனக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் கருணை காட்டி, ஒப்புரவாகத் தீர்மானிக்கிறேன். பழிவாங்குகிற குடும்பப் பகைக்கு முடிவுகட்டுகிறேன்” என்பதை அவரது நடவடிக்கைகள் காட்டின.
அவர் அப்துல்-ரஹ்மானைக் கொல்லாமல், அதற்குப்பதி லாக ஆட்டைக் கொன்றார். ஒட்டுமொத்த வலியையும் கோபத்தையும் நீதியையும் அந்த ஆடு ஏற்றுக்கொண்டது; அப்துல்-ரஹ்மானை ஹபீப் தழுவிக்கொண்டார். இரு குடும்பங்களுக்கும் இடையே சமாதானம் திரும்பியது.
நீதியையும் கருணையையும் இணைப்பதற்கான ஒரு வழியை மனிதர்களால் கண்டுபிடிக்க முடிந்தால், நிச்சய மாக இறைவனாலும் அப்படிப்பட்ட ஒன்றைச் செய்யமுடியும்!
மேசியாவாகிய இயேசு: இறைவன் காட்டிய கருணை
இறைவனுடைய கருணையைப்பற்றி நாம் எங்கே கற்றுக்கொள்ளலாம்? அது மிகவும் எளிது. மேசியாவாகிய இயேசுதான் (ஈஸா அல் மஸீஹ் என்றும் அறியப்பட்டவர்) இறைவனிடமிருந்து வந்த “கருணை” என்று அழைக்கப்படு வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது அவர் முற்றிலும் கருணையே உருவானவராக இருக்கிறார். நற்செய்திப் புத்தகங்களில் உள்ள அவரது போதனைகள்தாம் அவரது வழி; அவை இஞ்ஜீல் என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த வழிதான் மன்னிப்புக்கும் ஒப்புரவாகுதலுக்குமான பாதை.
அந்த அற்புதமான பணியை மேசியாவாகிய இயேசு நிறைவேற்ற முடியும்; ஏனென்றால் இறைவன் அனுப்பி வைத்த அவர்மட்டுமே முற்றிலும் பாவமற்றவராக இருக் கிறார். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் புனித தூதுவரும் தவறுள்ளவர்கள் என்பதால், அவர்களுக்கும் மன்னிப்பு தேவையாக இருந்தது; ஆனால் மேசியாவாகியா இயேசு வுக்கு அப்படி இல்லை. அவர் நியாயத்தீர்ப்பு நாள்வரை காத்திருக்கவேண்டிய அவசியமின்றி, நேரடியாகப் பர லோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்; ஏனென்றால் அவர் ஒரு தவறுகூட, மிகச்சிறிய தவறுகூட செய்யவில்லை.
அதனால்தான் அவர் இறைவனிடமிருந்து வந்த கருணை என்று அழைக்கப்படுகிறார். தூய கருணைக்கு அவர் ஓர் உதாரணமாக இருந்தார்; இறைவனுடைய கருணையைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்தார்.
மேசியாவாகிய இயேசு எனக்கு எப்படி உதவமுடியும்?
யோவான் ஸ்நானன் (யஹ்யா என்றும் அழைக்கப்படு பவர்) ஒரு கூட்டத்தில் மேசியாவாகிய இயேசுவைக் கண்டு, இறைவனுடைய ஏவுதலால், “இதோ, உலகத்தின் பாவத் தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” என்று சொன்னார் (நற்செய்திப் புத்தகங்கள், யோவான் 1:29). அப்துல் ரஹ் மானுக்கு ஒப்புரவாகுதலுக்கான வழியாக ஆடு இருந்தது போல மேசியாவாகிய இயேசு இருக்கிறார்.
நாம் செய்த தவறுகளுக்கு நாம் தண்டனை பெற்றால், அதுதான் நீதி. ஆனால், முற்றிலும் பாவமே செய்யாதவரான மேசியாவாகிய இயேசு, நம் தவறுகளுக்குப் பொறுப்பேற்க தாமாக முன்வந்தார். யாரும் அவரை வற்புறுத்தவில்லை. நியாயத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, அவரே முழுவிருப்பத்துடன் மரணத்தை தம்மேல் ஏற்றுக்கொண்டார். பூமியில் வாழ்ந்தவர்களில் அவர்மட்டுமே முற்றிலும் பாவமற்றவர்; ஆனாலும் அப்துல்-ரஹ்மானுடைய சம்பவத் தில் வருகிற ஆட்டைப்போல, தாம் நடத்தப்பட அவர் முன்வந் தார். அதனால்தான், அவர் நமக்காகப் பாடுபட்டபிறகு, இறைவன் அவரை எழுப்பி, பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் சச்சரவுகள் இருக் கலாம். ஒருவேளை நீங்கள் பாத்திமாவைப்போல, நீங்கள் நேசித்தவர்களால் தூக்கி எறியப்பட்டிருக்கலாம். ஒருவேளை யாரோ ஒருவர் உங்களைப் புண்படுத்தியிருக்கலாம்; உங்கள் நற்பெயருக்கு அநியாயமாக களங்கம் ஏற்பட்டிருக் கலாம். ஒருவேளை நீங்கள் அப்துல்-ரஹ்மானைப்போல் குற்றவாளியாகவும், பழிவாங்கப்படுகிற பயத்திலும் இருக்கலாம்.
மேசியாவாகிய இயேசு உங்களுக்கு உதவமுடியும். இதுபோன்ற ஒரு சிறுவேண்டுகோளை ஏறெடுத்தால் போதும்:
ஆண்டவரே, என் பாவங்களுக்கு என்னால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் நீங்கள் மேசியாவாகிய இயேசுவை எங்களுக்கு உங்கள் கருணையாக அனுப்பி யதை அறிவேன். மனிதர்கள் அனைவருக்காகவும் அவர் செய்த நற்செயலை மனதில்கொண்டு, தயவுசெய்து என்னை மன்னியும். மேசியாவாகிய இயேசுவின் வழியைப் புரிந்துகொள்ள எனக்கு உதவுங்கள்; அப்போது உமது கருணையை என் வாழ்க்கையில் அனுபவிக்க முடி யும். ஆமென்.
நீங்கள் நற்செய்திப் புத்தகங்களின் பிரதி ஒன்றைப் பெற விரும்பினால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications