நியாயத்தீர்ப்பில் பயமின்றி இருத்தல்

நியாயத்தீர்ப்பில் பயமின்றி இருத்தல்

சுருக்கம்

தீர்ப்பு நாளைப்பற்றி நினைக்கும்போது, பலர் உள்ளங்களில் அச்சம் ஏற்படுகிறது. தேவன் தீர்ப்புகூறுகிற அந்த இறுதிநாளை நாம் பாதுகாப்பாகக் கடந்துசெல்லலாம் என்பதை எவ்வாறு உறுதியாக நம்பலாம்? தேவன் நமக்கு ஒரு வழக்கறிஞரைத் தருவதாகக் கூறியுள்ளார். பூமிக்குரிய நீதிமன்றத்தில் நம் வழக்கில் நமக்காக ஒரு வழக்கறிஞர் வாதிடுவதுபோல, இறுதி விசாரணையில் நமக்காகப் பரிந்துபேசும் ஒருவரைத் தருகிறார். இந்தத் துண்டுப்பிரசுரம் அந்த வழக்கறிஞரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது; வரவிருக்கும் தீர்ப்பைப்பற்றி நாம் நினைக்கும்போது, நிச்சயத்துடன் இருப்பது எப்படி என்பதையும் நமக்குக் கற்பிக்கிறது.

பதிவிறக்கம்செய்

ஒரு நாள் காலை, ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நான் தங்கியிருந்த விடுதி யைவிட்டு வெளியே வந்தேன். தாமதமாகிவிட்ட தால், அனுமதிக்கப்பட்ட வேகவரம்பைவிட வேகமாக காரை ஓட்டினேன். நான் போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு பாதி தூரம் இருக்கும்போது, ஒரு காவல் அதிகாரி என்னை நிறுத்தி, காவல் நிலையத்திற்கு வரும்படி கூறினார்! என் னிடம் தவறு இருந்ததால் மிகவும் பதற்றமாக இருந்தது; என்ன செய்வதென்று தெரியவில்லை. 

காவல்துறை அதிகாரி என்மீது வழக்குப் பதிவு செய்து விட்டு, என்னை அருகிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றார். அங்கு வழக்கறிஞராகப் பணிபுரிகிற ஒரு நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. என்னைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். நான் என் நிலைமையை விளக்கியதும் என்னிடம், “கவலைப்படாதிருங்கள். நான் உங்கள் வழக்கை நடத்துகிறேன்” என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பரே எனது வழக்கறிஞரானார்!

எனது நண்பர் இடையில் நின்று எனக்காக வழக்காடி யதால், நீதிபதி குறைந்தபட்ச அபராதம் விதித்தார். நான் இறைவனைப் புகழ்ந்துகொண்டே, நீதிமன்றத்தைவிட்டு வெளியேவந்தேன்.

பூமியிலுள்ள ஒரு நீதிபதிக்குமுன் நிற்பதற்கே பயமாக இருக்கிறது. ஆனால், கணக்குக் கொடுக்கவேண்டிய மகா நாளில் இறைவனுக்கு முன்பாக நிற்கப்போகிற அனுபவத் தோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லை. அந்த நாள் நாளைக்கே வந்தால், அதை எதிர்கொள்ள ஆயத்தமா?

நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாகுதல்

சிலர் வரப்போகிற நியாத்தீர்ப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். மது அருந்துகிறார்கள்; புகை பிடிக்கிறார்கள்; சூதாடுகிறார்கள்; இரவு விடுதிகளுக்குச் செல்கிறார்கள்; மோசமான காணொளிகளைப் பார்க்கிறார் கள். இந்த விஷயங்கள் எல்லாம் பதிவுப்புத்தகத்தில் எழுதப் படுகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கலாம்; ஆனால் சாத்தானின் (ஷைத்தான் என்றும் அழைக்கப்படுபவன்) மாயைகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

வேறு சிலர் அதைக்குறித்து அதிகமாகப் பயப்படுகிறார்கள். ஜெபிப்பதை ஒருமுறைகூட விட்டுவிட மாட்டார்கள். கல்லறை யில் அல்லது நரக அக்கினியில் துன்பப்படப் போவதாக நினைத்து, அதைப்பற்றி அதிகம் யோசிப்பதால், இறைவனு டைய அன்பையும் கருணையையும் மறந்துவிடுகிறார்கள். 

ஆனால், நீதிமன்றத்தில் எனக்கு ஒரு வழக்கறிஞர் இருந் ததைப்போல, நாம் நியாயவிசாரணையைக் கடந்துசெல் வதற்கு இறைவன் ஒரு வழக்கறிஞரைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் தனியாக நிற்கவேண்டியதில்லை!

நம்முடைய வழக்கறிஞர் யார்?

வழக்கறிஞர்பற்றி எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா ஆகிய பகுதிகளிலுள்ள புனித தலங்களுக்குச் செல்கிறார்கள். பலர் பெருந்தலைவர் களின் கல்லறைகளில் பிரார்த்தனைசெய்கிறார்கள்; அவர்கள் தங்களுக்காக வாதாடுவார்கள் என்று நம்புகிறார் கள். 

அந்தப் பெரிய தலைவர்களை மதிப்பது நல்லதுதான்; ஆனால் அவர்களிடம் பிரார்த்தனை செய்வது, அல்லது அவர்கள் பரிந்துபேசும்படி அவர்களிடம் கேட்பது ஹராம் (இஸ்லாமியவிதிப்படி தடைசெய்யப்பட்டுள்ள செயல்) ஆகும். அவர்கள் இறந்துவிட்டார்கள்; உங்களுக்காக எதுவும் செய்ய முடியாது. கல்லறைகளில் இருக்கிற தீர்க்கதரிசிகள்கூட உயிர்த்தெழுதலின் நாளில்தான் எழுந்திருக்கமுடியும்.

நமக்காகப் பரிந்துபேசும்படி இறந்தவர்களிடம் கேட்பது ஹராம் என்றாலும், பரிந்துபேசுதல் என்கிற கருத்து சரியா னது. ஆனால் யாருடைய பரிந்துபேசுதல் இறைவனுக்கு ஏற்றதாக இருக்கிறது? அவர் உயிரோடு இருப்பவராக இருக்கவேண்டும்  

  1. (ஏனென்றால் நம் சார்பாக இறந்தவர்கள் பேசமுடியாது). 

  2. பாவமற்றவராக இருக்கவேண்டும் (ஏனென்றால் சட்டப்படி குற்றவாளியாக இருக்கிற ஒருவர் மற்றவர்களுக்காக வாதிடமுடியாது).

இந்தத் தகுதிகளை முழுவதும் பெற்றிருப்பவர் யார்? பரலோகத்தில் உயிரோடு இருப்பவரும், முற்றிலும் தூய்மை யானவரும், ஈசா அல்-மஸீஹ் என்று அழைக்கப்படுபவரு மான அன்பான இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் அல்ல. 

அதுபற்றிச் சிந்தித்துப் பாருங்கள் – தான் பாவமே செய்ய வில்லை என்று வேறு யாராவது சொல்லமுடியுமா? ஆதாம் தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிட்டார்; நோவா (நுஹ்) மது அருந்தினார்; ஆபிரகாம் (இப்ராஹிம்) பொய்சொன் னார்; மோசே (மூஸா) ஒரு மனிதனைக் கொலைசெய்தார்; தாவீது (தாவூத்) வேறொருவரின் மனைவியைக் களவாடி னார். எந்த ஒரு தவறும்செய்யாத, மன்னிப்புகேட்க அவசி யம் இல்லாத ஒரு தீர்க்கதரிசியை நீங்கள் காணமுடியாது.

ஆனால் இயேசு கிறிஸ்து எந்தப் பாவமும் செய்யவில்லை. அவர்தாமே தம்மைப்பற்றி, “என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவை களை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை” என்று சொன்னார் (இஞ்ஜீல் என்றும் அழைக்கப்படும் நற்செய்திப் புத்தகத்தில், யோவான் 8:29). 

நியாயவிசாரணையை சமாதானத்தோடு எதிர்கொள்ளுதல்

இயேசு கிறிஸ்து பரலோகத்தில் உயிருடன் இருக்கிறார்; அவர் முற்றிலும் பாவமற்றவர். உங்களுக்காகவும் எனக் காகவும் வாதாடுவதற்கு அவர் ஆயத்தமாக இருக்கிறார். அவர் சீக்கிரத்தில் திரும்பிவருகிறார்.

அவர் இரண்டாவது முறையாக திரும்பிவருகிறார் என்றால், இயேசு கிறிஸ்துதான் இறுதித் தீர்க்கதரிசி என்று அர்த்தம். ஆம், அவர் ஒரு தீர்க்கதரிசியைவிட மேலானவர் - அவரே நமது வழக்கறிஞர், எஜமானர், நியாயத்தீர்ப்பு நாளில் நமக்கு சமாதானம் தருகிறவர். அவர் நம்மிடம், “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை” என்று நிச்சயமாகச் சொன்னார் (நற்செய்திப் புத்தகங்கள், யோவான் 8:51). 

இயேசு மரித்த நிலையிலேயே இருந்துவிடவில்லை; அவர் உயிரோடிருக்கிறார்! அவர் இப்போதே பூமியில் தமது சமுதாயத்தை உருவாக்கிவருகிறார். அவர் சிலசமயங்களில் கனவில் வெள்ளை உடையணிந்து மனிதனாகத் தோன்ற லாம்; இறைவனுடைய பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்யும்போது அற்புதங்களைச் செய்யலாம்; ஏதோ ஒரு வழியில் மக்களை தமது குடும்பத்திற்கு அழைக்கிறார். 

கணக்குக்குக் கொடுக்கும் நாளை சமாதானமாக எதிர் கொள்ள விரும்புகிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுங்கள். மேலும், கணக்குக் கொடுக்கும் நாளில் தங்கள் நிலை என்னவென்று அறி யாத இறந்தவர்கள்மேல் நாம் ஏன் நம்பிக்கை வைக்கவேண் டும்? பரலோகத்தில் தமது நிலை என்னவென்பது இயேசு வுக்கு தெளிவாகத் தெரியும். நீதிமன்றத்தில் இருந்த வழக் கறிஞரான எனது நண்பரைப்போல, அவர் நமக்கு உதவு வார்.

இத்தகைய அற்புதமான ஏற்பாடு உண்மையாக இருக்க முடியுமா என்று நீங்கள் யோசிக்கலாம். “என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார் (நற்செய்திப் புத்தகங்கள், யோவான் 14:14). நான் சொல்வது உண்மைதானா என் பதைக் கண்டுபிடிக்க ஒரு சோதனைசெய்யுங்கள். இ்ந்த உலக வாழ்வின் அவசரநிலைகளில் உதவுகிற அளவுக்கு இயேசு வல்லமையுடையவராக இருந்தால், நிச்சயமாக அவர் நம் வழக்கறிஞராகவும் உதவமுடியும் என்று நம்ப லாம். உண்மையுள்ள இருதயத்துடன் இயேசுவின் நாமத் தில் இறைவனிடம் பிரார்த்தனைசெய்யுங்கள்; என்ன நடக் கிறதென்று பாருங்கள். நீங்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்யலாம்:

இறைவா, நியாயத்தீர்ப்பில் எங்கள் வழக்கறிஞராக உண்மையில் இயேசுவைத்தான் நீங்கள் நியமித்திருக் கிறீர்களா என்பதை அறிய விரும்புகிறேன். அது உண்மை யாக இருந்தால், தயவுசெய்து எனது பிரார்த்தனைக்கு (இந்த இடத்தில் உங்கள் தேவையைச் சொல்லவும்) பதி லளிக்கவும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை வேண்டுகிறேன். ஆமென்.

இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி மேலும் அறிய நீங்கள் விரும்பினால், இந்தத் தாளின் பின்பகுதியில் உள்ள தகவலில் எங்களை தொடர்புகொள்ள வும்.

Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover