
தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பு
சுருக்கம்
தீய ஆவிகள் சக்தி வாய்ந்தவை; ஆனால் மேசியாவான இயேசுவைப்போல் சக்தி வாய்ந்தவை அல்ல. சைத்தான்கள் துன்புறுத்தின மக்களிடமிருந்து அவற்றை இயேசு விரட்டியடித்து, அவர்கள் குணமடைய எப்படி உதவினார் என்பதை இந்தத் துண்டுப்பிரசுரம் விவரிக்கிறது. நமக்கும் இன்று அவர் அதைச் செய்யமுடியும். சைத்தானின் தொல்லைகளிலும் அடக்குமுறைகளிலுமிருந்து விடுபடுவதற்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அவருடைய புத்தகம் நமக்குக் கற்பிக்கிறது. அவர் திரும்பி வருவதற்குமுன்பு சைத்தானின் ஆட்கள் நம்மை ஏமாற்றப்பார்ப்பார்கள் என்பதையும், அதைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் இது நமக்குக் கற்பிக்கிறது.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
35 மொழிகள்
பக்கங்கள்
6
ஜின்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆவிகள், பேய்கள், பிசாசுகள் அல்லது ஜின்கள் என்று அவற்றை எப்படி அழைத்தாலும், அது திகிலாக இருக்கும். பக்கிரிகளும், சூனியக்காரர்களும், மந்திரவாதிகளும் இன்று பிரபலம்; ஆனால் அவர்களால் உண்மையிலேயே நம்மைப் பாதுகாக்கமுடியுமா?
தீய ஆவிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகளை பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்; அப்போதுதான் நீங்கள் பயப்படாமல் இருக்கமுடி யும்.
தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பு
அந்த மனிதன் நிர்வாணமாகவும், கூச்சலிட்டுக்கொண் டும் இருந்தான். அவனை பல ஜின்கள் பிடித்திருந்தன; யாரும் அவனுக்கு உதவ முடியவில்லை. கிராமத்தினர் அவனை சங்கிலிகளால் கட்டிப்போட முயன்றனர்; ஆனால் அவனிடம் மனிதர்களுக்கு மிஞ்சிய வலிமை இருந்ததால் அவற்றை உடைத்து, ஓடிப்போய் கல்லறைகளுக்கு மத்தி யில் குடியிருந்தான். அவன் பரிதாபமாக அழுதுகொண்டும், கல்லுகளினால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டும் நாட்களைக் கழித்துவந்தான்.
ஈசா அல்-மஸீஹ் என்றும் அழைக்கப்படும் இயேசு கிறிஸ்து வருகிற வரையிலும் அவனுடைய நிலை அப்படித் தான் இருந்தது.
அவன் உதவிகேட்க வாயைத் திறந்தபோது, அந்த ஜின்கள் இயேசு கிறிஸ்துவைநோக்கி அவனை அப்படியே விட்டுச் செல்லுமாறு கூச்சலிடுமளவிற்குப் பாதிக்கப்பட்டிருந் தான். ஆனால் இயேசு செல்லவில்லை. அங்கே என்ன நடந்த தென்பது அவருக்குத் தெரியும். இயேசு பயப்படவில்லை; அந்த மனிதனைவிட்டு வெளியேறும்படி ஜின்களுக்குக் கட்டளையிட்டார்.
“எங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதேயும்!” என்று ஜின்கள் கெஞ்சின. அருகிலிருந்த பன்றிக்கூட்டத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டன. அந்த மனி தனைவிட்டு அசுத்தமான மிருகங்களுக்குள் போகும்படி இயேசு அவைகளுக்குக் கட்டளையிட்டார். உடனடியாக, அந்த மனிதனின் புத்தி தெளிந்தது; அந்தப் பன்றிக்கூட்டம் முழுவதும் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்தது.
இறுதியாக, அந்த மனிதன் விடுதலையடைந்தான். மிகுந்த நன்றியுள்ளவன் ஆனான்! இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. தீய ஆவிகள்மீது இயேசு கிறிஸ்துவுக்கு மகத்தான வல்லமை இருந்தது. தாம் சென்ற இடங்களிலெல்லாம், ஜின்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மக்களை விடுவித்தார். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கும் பிசாசின்மீது அதிகாரம் அளித்தார்:
இதோ, சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (இஞ்ஜில் என்றும் அழைக்கப்படும் நற்செய்திப் புத்தகம், லூக்கா 10:19, 20).
நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, இந்த வாழ்க்கையில் பாதுகாப்பையும், வரவிருக்கும் வாழ்க்கைக் கான நிச்சயத்தையும் பெறலாம்! தீய ஆவிகளிடமிருந்து விடுதலைபெறுவதற்கான மூன்று படிகளைப் பார்ப்போம்.
படி 1: இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தின் வல்லமையை உரிமைகோருங்கள்
முதல் படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இறைவனு டைய பாதுகாப்பைத் தேடுவதாகும். நாம் தனியாக எதுவுமே செய்யமுடியாது. ஆனால், நம் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு வல்லமை உண்டு என்று சொல் லும்போது, தீய ஆவிகள் சக்தியை இழக்கின்றன! இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களைப்பற்றி, “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்று சொன்னார். (நற்செய்திப் புத்தகம், மாற்கு 16:17).
இயேசு கிறிஸ்து உங்களை விடுவிப்பார் என்று நீங்கள் முழுமனதுடன் நம்பினால், அவர் அதைச் செய்வார்! தேவ னிடம் இந்த எளிய வேண்டுகோளை ஏறெடுத்தால் போதும்: “ஆண்டவரே, நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என்னை தீய ஆவிகளிடமி ருந்து விடுவியும்!”
படி 2: உட்புறச் சுத்திகரிப்பையும், வெளிப்புறச் சுத்திகரிப்பையும் தேடுங்கள்
பிசாசு கால்வைப்பதற்கு எந்த இடமும் கொடுக்கக்கூடாது என்று இயேசு கிறிஸ்து போதித்தார். “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்று மில்லை” என்று சொன்னார். (நற்செய்திப் புத்தகம், யோவான் 14:30). எல்லாத் தீய செல்வாக்குகளிலிருந்தும் நம் வாழ்க்கையைத் தூய்மைப் படுத்த வேண்டும்.
பிசாசுக்கு “நம்மிடத்தில் ஒன்றுமில்லை” என்பதன் அர்த்தம் என்ன? நம் இதயங்களிலோ, நம் வீடுகளிலோ அவனுக்குச் சொந்தமானது எதுவுமில்லை என்று அர்த் தம். மூடநம்பிக்கையான மந்திரங்களையும் தாயத்துகளை யும் தூக்கி எறியவேண்டும். ஆபாசப்படங்கள், போதைப்பொருட் கள், மதுபானம் போன்ற பாவத் தீமைகளிலிருந்து விலகி யிருக்க வேண்டும். இறந்தவர்களுடன் பேசுவது, பில்லி சூனியம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும். இவ்வாறு, பிசாசின் செல்வாக்குகளிலிருந்து நமது வெளிப்புறச் சூழலைச் சுத்தம்செய்கிறோம். பிறகு, நம்மை மன்னித்து, நம் உள்ளத்தைச் சுத்தப்படுத்துமாறு தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.
படி 3: உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்தால் நிரப்புங்கள்
இயேசு கிறிஸ்து உங்களை ஜின்களின் வல்லமையிலி ருந்து விடுவித்தபிறகு, உங்கள் வாழ்க்கையின் பொறுப் பாளராக இருக்க அவரை அழைக்கவேண்டும். உங்கள் இதயத்தைக் காலியாக விடாதீர்கள். இயேசு கிறிஸ்து சொன்னார்,
அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: “நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன்” என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் (நற்செய்திப் புத்தகம், மத்தேயு 12:43-45).
நீங்கள் ஜின்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவு டன், உங்கள் வாழ்க்கையை இயேசுவின் புத்தகமான வேதாகமத்தின் வெளிச்சத்தால் நிரப்புங்கள். இயேசு கிறிஸ்து தம்மில் “விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, உலகத்தில் ஒளியாக வந்[தார்]” (நற்செய்திப் புத்தகம், யோவான் 12:46). இயேசுவுடைய புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்று, ஒவ்வொரு நாளும் அதைப் படியுங்கள்; அப்போது அவருடைய வெளிச்சம் இருளைப் போக்கிவிடும்.
எதிர்காலத்திற்கான பாதுகாப்பு
தீய ஆவிகள் எப்போதையும்விட அதிகமாகச் செயல் படுகிற முடிவுகாலத்தில் வாழ்கிறோம். தாம் திரும்பி வருவதற்கு முன்பு, விசுவாசிகளை வஞ்சிக்கும்படி தீய ஆவிகள் பல பொய்யான அற்புதங்களைச் செய்யும் என்று இயேசு கிறிஸ்து முன்னுரைத்தார். சிலருக்கு, ஜின்கள் பேய்கள்போல பயங்கரமான வடிவங்களில் தோற்றமளிக்கும்; மற்றவர்களுக்கு தேவதூதர்களைப் போல அல்லது இறந்த உறவினர்கள்போலத் தோற்ற மளிக்கும். பிசாசு தானே இயேசு கிறிஸ்துபோல ஆள் மாறாட்டம் செய்வான்!
ஆனால் நீங்கள் பொய்களால் வஞ்சிக்கப்படத் தேவை யில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினால், பிசாசை எதிர்ப்பதற்கான சக்தியை அவர் உங்களுக்குக் கொடுப்பார். அன்பான நண்பரே, இன்று உங்கள் போராட்டம் எதுவாக இருந்தாலும், இயேசு கிறிஸ்து உங்களை விடுவிக்கும்படி அனுமதியுங்கள்!
நீங்கள் தீய ஆவிகளிடமிருந்து விடுதலையாகும்படி, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒருவர் உங்களுக் காக ஜெபிக்க நீங்கள் விரும்பினால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலில் எங்களைத் தொடர்புகொள் ளவும்.
Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications