
குடியேற்ற அழைப்பு!
சுருக்கம்
சிறப்பான ஓர் இடத்திற்காக ஏங்குகிறீர்களா? பாதுகாப்பும் மகிழ்ச்சியும் இளைப்பாறுதலும் உள்ள இடத்தை எதிர்பார்க்கிறீர்களா? நாம் ஒவ்வொருவரும் பரதீசுக்காகப் படைக்கப்பட்டிருப்பதால், இந்த உலகம் தரமுடியாத ஒன்றிற்காக ஏங்குகிறோம். இயேசுவாகிய மேசியா ஏற்கனவே அங்குச் சென்றுள்ளார். அவருக்கு வழி தெரியும்; உண்மையில், அவர் தம்மை "வழி" என்று அழைக்கிறார். இயேசுவைப்பற்றிய முக்கியமான உண்மைகளை இந்தத் துண்டுப்பிரசுரம் விவரிக்கிறது; பரதீசில் குடியுரிமைபெறுவதற்கு நாம் ஆயத்தமாக இந்த உண்மைகள் நமக்கு உதவும்.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
34 மொழிகள்
பக்கங்கள்
6
அப்துல்-மலேக் களைப்பாக இருந்த ஒரு முதி யவர். தனது மனைவியையும் குழந்தைகளை யும் இழந்தபிறகு, ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து தப்புவதற்காக ஈராக்கிலிருந்து தப்பிச்சென்றார். பிறகு ஜோர்டானில் ஓர் அகதியாக தனியாக வசித்துவந்தார்.
ஆனாலும் ஒரு நம்பிக்கையின் ஒளி தெரிந்தது. கனடா வில் வசித்துவந்த அவரது உறவினர் ஒருவர் அவருக்கு வேலைகிடைப்பதற்கு உதவ முன்வந்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்தவர், விசாவிற்கு விண்ணப்பித்தார்; இலகுவான ஒரு வாழ்க்கை வாழப்போவதாக கனவு காணத் துவங்கினார். இறுதியாக, பல வருடக் காத்திருப் புக்குப் பிறகு, கனடாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்துல்-மலேக் பரவசமடைந் தார்!
ஆனால், அவரது பரவசம் சிறிது காலமே நீடித்தது. கனடாவுக்குச் சென்றபிறகு, குடியேற்றத்திற்குப் பிறகான வாழ்க்கை எளிதானதல்ல என்பதைக் கண்டுகொண்டார். நாள் முழுவதும் அவர் நின்று வேலைசெய்ய வேண்டி யிருந்தது. அக்கம்பக்கத்தினர் கத்திக் கொண்டேயிருந் தார்கள். பொதுப் போக்குவரத்துபற்றிய விவரங்கள் எளிதில் புரியவில்லை; ஆங்கில மொழியும் புரியவில்லை!
சிறந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்பதே எப் போதும் அப்துல்-மலேக்கின் கனவாக இருந்தது; ஆனால் அப்படியொரு இடத்திற்குச் சென்றபிறகும், இருதயத்தின் வேதனை தணிந்தபாடில்லை. தன்னுடைய இருதயத்தின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்கிற இடம் பூமியில் ஏதாவது இருக்குமா? அல்லது, பரதீசுக்குச் செல்லும்மட்டும் காத்தி ருக்கவேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்தார்!
பரதீசுக்குக் குடியேறுதல்
நீங்கள் எப்போதாவது அப்துல்-மலேக்கைப்போல் உணர்ந் திருக்கிறீர்களா? சிறந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்கிற ஆசை மனித இதயத்தில் வேரூன்றியுள்ளது; நமது உண்மையான வீடாகிய பரதீசுக்குச் செல்வதால்மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். அது விரைவில் நிறைவேறப்போகிற ஓர் ஆசை! அந்த வேளை வரப்போவதற்கான அறிகுறிகள் நம் கண்களுக்கு முன்பாக நடந்துவருகின்றன; மேலும் இந்த உலகம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
பல நூற்றாண்டுகளாக, யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித புத்தகங்கள் அனைத்தும் முடிவு நாளை முன்னறிவித்துள்ளன. வரலாற்றின் அந்த உச்சக்கட்ட வேளையில்தான் இந்த உலகத்திலிருந்து அடுத்த உலகத் திற்கு “குடியேறப்” போகிறோம். இந்த மூன்று மார்க்கங்களும் இந்த இறுதி நிகழ்வுகளின் நிறைவேற்றத்திற்கு பொறுப் பான ஒரு மேசியாவைச் சுட்டிக்காட்டுகின்றன.
சுவாரசியம் என்னவென்றால், கிறிஸ்தவத்திலும் இஸ் லாத்திலும் குறிப்பிடப்படுகிற இந்த மேசியா வேறு யாரு மல்ல; ஈசா அல்-மஸீஹ் என்று அழைக்கப்படுகிற இயேசு கிறிஸ்துவே. அவர்தாம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த மேசியா; ஆனால் கடந்த 2,000 ஆண்டுகளாக பரதீசில் வாழ்ந்துவரு கிறார். கடைசியாக இறுதித் தீர்ப்புநாளில் திரும்பி வருவார்.
இயேசு கிறிஸ்துவின் மறுவருகை வேதாகமத்தில் பிர பலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் இஸ்லாமியர்களும் அவர் மீண்டும் வருவார் என்று நம்புகிறார்கள்; ஏனெனில் அது குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது: “இன்னும், நிச்சயமாக அவர், (ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திலிருந்து இறங்கு வது கொண்டு) மறுமை நாளின் (அடையாளம் நெருங்கி விட்டது என அறியப்படும் ஓர்) அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம், நீங்கள் என்னையே பின்பற்றுங்கள், இதுவே நேரான வழியாகும்” (ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:61).
ஒரு குடியேற்ற அதிகாரி விசாபெறுவதற்கான முக்கிய வழிகாட்டுதலை வழங்குவதுபோல, நாம் பரதீசுக்குச் செல் வதற்கான நேரான வழியை அறிந்துகொள்ள தம்முடைய அடையாளத்தைக் கவனிக்குமாறு இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
பரதீசு எப்படி இருக்கும் என்று இயேசு சொன்னார்?
இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறியதாக, இஞ்ஜீல் என்றும் அழைக்கப்படும் நற்செய்திப் புத்தகங்கள் பதிவுசெய்துள் ளன: “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத் தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத் தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (நற்செய்திப் புத்தகங்கள், யோவான் 14:2-3). தம்மால் நம்மை பரதீஸுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார்!
அந்த இடத்தின் சில அழகான காட்சிகளையும் அவர் வெளிப்படுத்தினார். அவர் பின்வருமாறு சொன்னார்:
இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலு மில்லை, வருத்தமுமில்லை. (வெளிப்படுத்தல் 21:4).
நமக்கு அழகான வீடுகள் இருக்கும். (யோவான் 14:2).
ஆண் பெண் இருபாலருக்கும் சமமான கண்ணியமும் உரிமைகளும் இருக்கும். (கலாத்தியர் 3:28).
அங்கு முற்றிலும் ஒளியும் நீதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். (வெளிப்படுத்தல் 21:21-25).
உண்மையாகவே, நம் இருதயங்கள் ஏங்குகிற இடம் இதுதான்!
இயேசு கிறிஸ்து ஏன் இரண்டாவது முறை வருகிறார்
இறைவன் பல தீர்க்கதரிசிகளையும் பரிசுத்த தூதுவர் களையும் அனுப்பியுள்ளார். இரண்டாவதுமுறை வருவ தற்கு இயேசு கிறிஸ்து ஏன் தெரிந்தெடுக்கப்பட்டார்? அதே குடியேற்ற உதாரணச் சம்பவத்தை வைத்து, இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது எளிது. விசா பெறுவது எளி தானதல்ல என்பதால், அதற்கான வழிதெரிந்த ஒரு குடி யேற்ற வழக்கறிஞரை பலர் நாடிச்செல்கிறார்கள். நமக்கு ஒரு வழிகாட்டி இருந்தால், அவர் நமக்கு உதவுவார் என்று நம்பலாம்.
அதேபோல, இயேசு கிறிஸ்துமட்டுமே இரண்டாவது முறை வருகிறார்; ஏனென்றால், அவர் பரதீசுக்குச் செல்லும் வழியை அறிந்திருக்கிறார், அவரால் நம்மை அங்கு அழைத்துச் செல்லமுடியும். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவர் தம்மைப்பற்றிச் சொல்லியிருக்கிறார் (யோவான் 14:6).
இறைவன் அனுப்பிவைத்த ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தூதுவரும் தவறுசெய்து, மன்னிப்புப் பெற வேண்டியதாய் இருந்தது. ஆனால் இயேசு கிறிஸ்து அப்படிப்பட்டவர் அல் லர். அவர் பூமியில் வாழ்ந்த 33 வருடங்களும் பாவமற்ற வராக இருந்தார். அதனால்தான் அவர் உடனடியாக பர தீசுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
பரதீசுக்குள் நுழைவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழியை பாவமற்றவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஒரு வழியாகமட்டுமே அங்கு நாம் செல்லமுடியுமென முழுநம்பிக்கை கொள்ளமுடியும். நல்ல வேளையாக, அவருடைய புத்தகமான வேதாகமத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாகுதல்
மிகச்சிறப்பான ஓர் இடத்திற்குக் குடியேறப்போகிற நிச்சயம் உங்களுக்கு பரவசம் கொடுக்கவில்லையா? பரதீசில் இறைவனுடைய மகிமையான ராஜ்யத்தின் குடிகளாவதற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்! அந்த அழகான இடத்திற்கு நம் அனைவரையும் அழைத்துச்செல்ல இயேசு கிறிஸ்து விரைவில் வருவார்.
அந்த நியாயத்தீர்ப்பு நாளில் தங்களுக்கு என்ன நடக்கும் என்றுகூட தெரியாத மனிதர்களை நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறதா? இயேசு கிறிஸ்து வைப் பின்பற்றினால், உங்களுக்கு அந்தச் சந்தேகம் தேவையே இல்லை. இயேசு கிறிஸ்துவின் நேரான வழி யில் உங்களை வழிநடத்தும்படி இறைவனிடம் கேளுங்கள். நீங்கள் பின்வருமாறு ஒரு வேண்டுகோளை ஏறெடுக்கலாம்:
ஆண்டவரே, மிகச்சிறந்த இடத்திற்காக என் இதயம் ஏங்குகிறது. இவ்வுலகின் கஷ்டங்களிலிருந்து என்னை யும் என் அன்புக்குரியவர்களையும் தயவுசெய்து விடுதலை செய்யுங்கள். காலம் குறைவாக இருப்பதை அறிவேன். நீங்கள் எனக்காக ஆயத்தம்செய்துள்ள அற்புதமான இடத் திற்கு நான் வரும்படி தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங் கள். ஆமென்.
நற்செய்திப் புத்தகங்களின் பிரதியைப் பெற விரும்பி னால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலில் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
தமிழில் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) மொழிபெயர்த்துள்ள குர்ஆன்.Copyright © 2023 by Sharing Hope Publications. இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications