இறுதி விடுதலை

இறுதி விடுதலை

சுருக்கம்

துன்பம் என்றென்றும் தொடருவதுபோலத் தெரியலாம்; ஆனால், அது ஒருநாளில் முடிவுக்கு வரும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். தம் மக்களை "பரலோக ராஜ்யம்" என்று அழைக்கப்படுகிற இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இந்தப் பூமிக்குத் திரும்பவும் வருவதாக உறுதியளித்துள்ளார். அந்த அற்புதமான இடத்தில் துக்கம் இல்லை; இறப்பு இல்லை; மறுபிறப்புச் சுழற்சிகள் இல்லை. படைத்த இறைவனோடு நாம் என்றும் வாழ்வோம்! இந்த இறுதி விடுதலைக்கு நாம் எவ்வாறு தயாராகலாம் என்பதை இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது.

பதிவிறக்கம்செய்

கங்கைக் கரையில், அந்த்யேஷ்டி சடங்கின் போது, இறந்துபோன ஆன்மா ஓர் உடலிலி ருந்து இன்னொன்றுக்குப் பயணம் செய் யும் என்று விளக்குகிறார் ஒரு பூசாரி, அது மோட்சம் என்கிற இறுதி இலக்கை எட்டும்வரை அது இவ்வாறு மாறிமாறிப் பயணம் செய்யும் என்கிறார். கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் ஆர்வத்துடன் இதைக் கேட்கிறான். தனக்குப் பக்கத்தில் இருந்த ஒருவரைப் பார்த்து “இது எப்போது முடிவுக்குவரும்?” என்று நேரடியாகக் கேட்கிறான். 

பலரும் சிந்திக்கிற ஒரு கேள்வியைத்தான் அவன் கேட்டிருக்கிறான். வலிமிக்க இந்தச் சுழற்சியிலிருந்து நாம் தப்புவதற்கு எத்தனை மறுபிறப்புச் சுழல்கள் தேவைப் படும்? வரலாறுமுழுவதும் இந்தக் கேள்வி எண்ணற்ற முறைகள் கேட்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதற்குத் துல்லி யமான பதில் எதையும் கொடுக்க இயலாது.

பிறப்பு, துன்பம், இறப்பு ஆகிய சுழற்சிகள் இந்த உலகில் இயல்பானவை. ஆனால், இந்த உலகைக் கடந்து, கடவுள் இருக்கிற இடத்துக்குச் செல்லும்போது, வலிமிக்க இந்தச் சுழற்சிகள் ஏதுமில்லை: நிரந்தரமான முடிவற்ற மகிழ்ச்சிமட்டும்தான். நல்லவேளையாக, வலி மற்றும் சிரமத்திலிருந்து விடுதலை பெறுவதற்குப் பல லட்சம் இறப்புகளையும் மறுபிறப்புகளையும் கடந்து செல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. மிக மகிழ்ச்சி தருகிற ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல் கிறேன்.

துன்பத்திலிருந்து என்றென்றும் தப்பித்தல்!

நெடுங்காலத்துக்குமுன்பு, இறைவனாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகுக்கு ஒரு மனிதராக வந்தார். அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; மிகச் சிறப்பான செயல்கள் பல செய்தார். “சொர்க்க ராஜ்யம்” என்கிற ஒரு சிறப்பான இடத்தைப்பற்றியும் அவர் கற்றுத்தந்தார். சொர்க்கம் என்கிற இடத்தில் நோய் இல்லை, துன்பம் இல்லை, மறுபிறப்பு அவசியம் இல்லை என்று அவர் சொன்னார். அந்த அழகான இடத்தில் உள்ள எல்லாரும் என்றென்றும் வாழ்வார்கள். 

இந்தச் சிறப்பான ராஜ்யத்தைப்பற்றி இறைவன் இயேசு கற்றுத்தந்தார், அதன்பிறகு, நம் கெட்ட செயல்களின் விளைவுகளிலிருந்து நம்மை விடுவித்து, நாம் விரும்பினால் நாம் எல்லாரும் அங்குச் செல்வதற்காக, தன் வாழ்க்கை யைத் தியாகம் செய்தார்.

அவருடைய தியாக மரணத்துக்குப்பின் மூன்று நாட்கள் கழித்து, அவர் கல்லறையிலிருந்து எழுந்து, சொர்க்க ராஜ்யத்துக்குச் சென்றார். காலத்தின் முடிவில் தான் திரும்பி வருவதாகவும், அவர்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் தன்னைப் பின்பற்று வோருக்கு வாக்களித்தார்.

இது மிகச் சிறப்பான எதிர்காலம் என்று தெரிய வில்லையா? நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெற வேண்டும், அதன்மூலம் துன்பத்திலிருந்து என்றென்றும் தப்பிக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். ஆனால், “இது எப்போது முடியும்?” என்று அந்தச் சிறுவன் கேட்டது போல், நமக்கு விடுதலை கிடைக்க எவ்வளவு நாளாகும் என்று நாமும் யோசிக்கிறோம். 

இறைவன் இயேசு கிறிஸ்து திரும்பி வருதல்

சுவாரசியம் என்ன என்றால், “இது எப்போது முடியும்?” என்று இறைவன் இயேசுவின் சீடர்களும் கேட்டார்கள். தீவிரமான நில நடுக்கங்களும் யுத்தங்களும் பட்டினியும் வியாதிகளும் கொள்ளைநோய்களும் இந்த உலகின் கடைசி நாட்களில் நிறைந்திருக்கும் என்று இறைவன் இயேசு சொன்னார். துன்பம் விரைவாகப் பெருகும்போது, அச்சத்தால் மக்களுடைய இதயங்கள் தடுமாறும். இவை தாம் இறைவன் இயேசு வருகிறார் என்பதற்கான சின்னங்கள் ஆகும். இப்போது இந்த அறிகுறிகள் நடைபெறு வதால், காலத்தின் முடிவில் நாம் வாழ்கிறோம் என்பதை உணரலாம்.

விரைவில், வாக்களித்தபடி இறைவன் இயேசு திரும்பி வருவார். இறந்தவர்கள் பூமியிலிருந்து எழுப்பப்படுவார் கள்; அவர்களுக்கு மிகச் சிறந்த புதிய உடல்கள் வழங்கப் படும், விவிலியம் சொல்வதுபோல், “கர்த்தர்தாமே ஆர வாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” (விவிலியம், 1 தெசலோனிக்கேயர் 4:16).

இப்போதுள்ள இந்த உலகம் அப்போது அழிக்கப்படும், தீமை நீக்கப்படும். நாம் சொர்க்கத்துக்குச் சென்று, ஆயிரம் ஆண்டுகள் மகிழ்ச்சியைக் காண்போம். அதன்பிறகு, இறைவன் இயேசு இந்த உலகை அழகாகவும் மிகச் சிறப்பாகவும் மீண்டும் உருவாக்குவார்; அந்த உலகில் மரணம், வலி, நோய், சோர்வு, தனிமை போன்றவை இருக் காது. தன் வழியைப் பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் அங்கு இடமுண்டு என்று அவர் உத்தரவாதம் அளித்துள் ளார். இதுதான் இயேசுவின் வழி.

இறுதி விடுதலை

தான் வரப்போகும் சரியான நாள் அல்லது மணிநேரத்தை இயேசு வெளிப்படுத்தவில்லை, ஆனால், அவர் தன்னைப் பின்பற்றுவோருக்குப் பல குறிப்பிட்ட அறிகுறிகளை தந்துள்ளார், அதன்மூலம், அவர் வரும் நாள் மிக அருகில் உள்ளது என்று நாம் அறிந்துள்ளோம். அநேகமாக, உங்களுடைய என்னுடைய வாழ்நாளுக்குள் அது இருக்க லாம். என்ன அழகான செய்தி! இறைவன் இயேசு வரும் போது, நாம் நம் தீய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுவிக்கப்படுவோம்!

சொர்க்க ராஜ்யத்துக்குள் நுழையப்போகிறவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கவிரும்பினால், இயேசுவின் வழியைப் பின்பற்ற மூன்று எளிய படிநிலைகள் உள்ளன:

  1. இறைவன் இயேசுவை நம்புங்கள். இயேசு தம்மைப் பலியிட்டபோது, நம் ஒவ்வொருவருடைய கெட்ட செயல்களுக்குமான தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். அவற்றிலிருந்து நமக்கு விடுதலை அளிப்பதற்காக அவர் இதை விரும்பிச் செய்தார். உங்கள் முழு இருதயம், ஆத்துமா, மனதோடு அதை நம்புவதன்மூலம் நீங்கள் இந்தப் பரிசைப் பெற்று க்கொள்ளலாம்.

  2. ஒரு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். மதக் கடமைகள் என்னும் சரிபார்ப்புப் பட்டியலை மட்டும் நாம் பின்பற்றவேண்டும் என்று இறைவன் இயேசு விரும்பவில்லை; அவரை நாம் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசுவதைப்போல் அவரிடம் பேசலாம்; நம் இதயங் களைத் திறக்கலாம்; நம் இரகசியங்கள் அனைத்தை யும் பகிர்ந்துகொள்ளலாம். தமது ஆவியின்மூலம், அவர் நம்முடன் எப்போதும் இருப்பதாக இறைவன் இயேசு வாக்களித்துள்ளார்; அதனால், நாம் எந்த நேரத்திலும் அவருடன் பேசலாம்.

  3. இறைவன் இயேசு கற்பித்தவற்றைப் பின்பற்றுங் கள். நாம் கவனத்துடன் இருக்கவேண்டும், அவர் வருவதற்குத் தயாராகவேண்டும் என்று இயேசு கூறினார். இறைவர் இயேசுவுக்கு அர்ப்பணம் செய்துகொண்ட ஒரு வாழ்க்கையை வாழுதல் என்றால், நாம் அவர் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும், நம் உள்ளம்முழுவதாலும் அவரை நேசிக்கவேண்டும், மேகங்களில் வருகிற அவரை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். இறைவன் இயேசுவைப் பின்பற்றுவோராக இருப் பதற்கு நமக்குத் தெரியவேண்டிய அனைத்தையும் நாம் விவிலியத்தில் காணலாம். 

இயேசுவின் வருகைக்குத் தயாராகும்வகையில் இயேசு வின் வழியைப் பின்பற்றுவது எப்படி என்பதுபற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து, இந்தத் தாளின் பின்பகுதியில் உள்ள தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover