என் வேதனைகளுக்கு நியாயம்

என் வேதனைகளுக்கு நியாயம்

சுருக்கம்

துன்பம் என்றென்றும் நிலைத்திருக்காது. கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வேதனையையும், படைப்பாளாராகிய கடவுள் துன்மார்க்கருக்குத் தரப்போகிற இறுதி நியாயம்பற்றி அந்தப் பெண் சிந்திப்பதையும் ​​இந்தத் துண்டுப்பிரசுரம் பேசுகிறது. மாய்மாலத் தலைவர்களை இயேசு கண்டனம் செய்ததையும், அதுபோல துன்பப்படுகிறவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிப்பதாக அவர் கொடுத்துள்ள வாக்குறுதியையும்பற்றி இது விவரிக்கிறது. ஆனால் நாமே தவறுசெய்திருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் தண்டனையை ஏற்று பாடுபட்டதால், நாம் மன்னிக்கப்படுவதற்கும் ஒரு வழி இருக்கிறது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

8 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

விமலா படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் இதயம் விரைவாகத் துடித்துக்கொண் டிருந்தது. இன்னொரு கொடும் கனவு! சில நாட்களுக்கு ஒருமுறை, கொடுமையான நினைவுகள் அவள் கனவில் வந்தன: 12 வயதில் அவளைப் பலவந்தம்பண்ணின ஒரு மனிதனுடைய நினைவுகள்.

விமலாவால் அந்த நாளை மறக்க முடியவில்லை. அதை நினைத்தபோதெல்லாம், அவளுக்கு அவமானமாகவும் இழிவாகவும் இருந்தது; தனக்கு ஏற்பட்ட வேதனையை அவள் யாரிடமும் சொல்லவில்லை. விமலா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; ஆனால், கொடும் கனவுகள் அவளைத் தொடர்ந்தன. அவள் அந்த மனிதனை வெறுத்தாள்; அவனுடைய செயலுக்கு ஏற்ற தண்டனை அவனுக்குக் கிடைக்கும் என்று நம்பினாள்.

கடினமான கேள்விகள்

விமலாவின் மனத்தில் கேள்விகள் பல தொல்லை தந்தன. அவளைப் பலவந்தம் செய்தவன் கர்மத்தின் பலனைப் பெறுவானா? அவன் அவளுடைய நகரத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற புனித மனிதன். அவன் மக்களுக்குப் பல நன்மை களைச் செய்து வந்தான்; அடிக்கடி உண்ணாவிரதம் இருந் தான்; கடவுள்கள்மீது மிகுந்த பக்தி காட்டினான். அவன் செய்கிற இத்தனை நல்ல செயல்களுக்குமுன்னால் ஒரு தீய செயல் மாற்றத்தை உண்டாக்குமா? கர்மத்தின் விதிகள் எப்படி வேலைசெய்கின்றன என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவனுடைய தீமை தனக்கு எப்படிப் பாதிப்பை உண்டாக்கியது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. விமலா வால் தன்னுடைய வலியை மறக்க இயலவில்லை. 

நியாயம் நிறைவேறுதல்

விமலாவின் வகுப்புத் தோழிகளில் ஒருவரான சாய்ரா, தேவை உள்ள பெண்களுக்கு உதவுகிற ஓர் அமைப்பில் பயிற்சிநிலை ஊழியராகப் பணியாற்றினாள். கைம்பெண் கள், பாதிக்கப்பட்ட பெண்கள், பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் போன்றோருக்கு உதவுகிற அந்த மையம் ஊருக்கு வெளியில் இருக்கிறது; அங்கே வரும்படி சாய்ரா ஒருநாள் விமலாவை அழைத்தாள். விமலா பதற்றமாக இருந்தாள், தன் கொடுமையான ரகசியம் யாருக்காவது தெரிந்துவிடுமோ என்று யோசித்தாள். ஆனால், சாய்ரா மிகவும் அன்பாகப் பேசினாள். அதனால், விமலா அங்கே செல்லத் தீர்மானித்தாள். அவர்கள் அங்குப் போகிற வழியில், முந்தைய சில நாட்களில் தான் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் களில் சிலரைப்பற்றிச் சாய்ரா அவளுக்குச் சொன்னாள்.

“குரு என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பெண்கள் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா?” விமலா வெட்கத்துடன் கேட்டாள்.

“ஆமாம், சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன்” என்று பதில் சொன்னாள் சாய்ரா. “அது மிகவும் வருத்தமான விஷயம். ஒருவர் தன்னை மதவாதி என்று அழைத்துக் கொள்வதால், அவர் கடவுளுடன் இணைந்திருக்கிறார் என்று பொருள் இல்லை.”

“அது உண்மை. . . .”

“என் குரு, மகாகுரு. அவர் சொல்கிறார். நம் நாட்களில் மத உலகம் மிகவும் ஒழுக்கங்கெட்டதாக ஆகும். நாம் ஊழல் நிறைந்த மதத்திலிருந்து விலகி வரவேண்டும், நம்மை உருவாக்கிய கடவுளுடன் இணையவேண்டும். அவர் நமக்குத் தூய இதயங்களை அளிப்பார்; நம் கெட்ட செயல் களை மன்னிப்பார். அதன்பிறகு, தீய மக்கள் இல்லாத மிகச் சிறந்த இடமாக இந்த உலகத்தை கடவுள் மீண்டும் உரு வாக்கும்போது, அவரைக் காண்கிற மக்களில் நாமும் இருப் போம்.”

“இது மிகவும் ஆர்வம் ஊட்டுகிறது. உன் குரு யார்?”

“நான் இறைவன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். ஆனால், அவர் மனிதனாய் வந்த கடவுள். உனக்கு அவரைப்பற்றித் தெரியுமா?”

“நான் அவருடைய சில படங்களைக் கடைகளில் பார்த் திருக்கிறேன். ஆனால், அவரைப்பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர் வேறு என்ன சொல்கிறார்?”

பேருந்து வந்தது. “நாம் ஏறுவோம்” என்றாள் சாய்ரா, “பிறகு, நான் இன்னும் பல விஷயங்களைச் சொல்கிறேன்.”

ஆன்மிகப் போலித்தனம்

விமலாவும் சாய்ராவும் பேருந்தில் ஏறி, அருகருகே இருந்த இருக்கைகளில் உட்கார்ந்தார்கள்.

“மதப் போலித்தனத்தின் மோசமான தாக்கங்களைப்பற்றி இயேசு நிறைய பேசியிருக்கிறார்” என்றாள் சாய்ரா. அவள் தன் பையிலிருந்து இறைவன் இயேசுவின் சிறிய புத்தகம் ஒன்றை வெளியில் எடுத்து, அதைத் திறந்தாள். “இங்கு என்ன சொல்கிறது என்று பார்” என்று காட்டினாள் அவள். விமலா படித்தாள்.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவை களின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித் தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். (மத்தேயு 23:14).

“வேதபாரகர், பரிசேயர் என்பவர்கள் யார்?” என்று கேட்டாள் அவள்.

“அவர்கள் இறைவன் இயேசுவின் காலத்து மதவாதிகள்; ஆனால், அவர்கள் மிகவும் கெட்டவர்கள்” என்று சாய்ரா விளக்கினாள். விமலா தலையசைத்து, தொடர்ந்து படித்தாள்.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளை யினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது குருட னான பரிசேயனே! போஜனபான பாத்திரங்களின் வெளிப் புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலா வது சுத்தமாக்கு. (மத்தேயு 23:25-26).

நித்தியத் தீர்ப்பு

“இன்றைக்கும் நம்மிடையில் ஆன்மிகப் போலித்தனம் உள்ளதால் நாம் கவனமாக இருக்கவேண்டும் என்று நம்மை உருவாக்கிய கடவுள் நமக்குச் சொல்கிறார்” என்றாள் சாய்ரா. “நம் நாட்களில் உலகமும் மத அமைப்புகளும் மிகவும் கெட்டுப்போயிருக்கும் என்று இறைவன் இயேசுவின் புத்தகம் சொல்கிறது. ஆனால், கடவுள் உலகத்தை மீண்டும் உருவாக்கும்போது, அவர் தவறு செய்தவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்.”

“அவர் எப்படித் தீர்ப்பு வழங்குவார் என்று நீ நினைக் கிறாய்?” என்று கேட்டாள் விமலா. 

“கடவுள் ஒவ்வொருவரின் நல்ல செயல்களையும், தீய செயல்களையும் புத்தகத்தில் பதிவுசெய்கிறார் என்று இறைவன் இயேசுவின் புத்தகம் சொல்கிறது” என்று விளக்கினாள் சாய்ரா. “காலத்தின் முடிவில், இறைவன் இயேசு கிறிஸ்து மேகங்களில் வருவார். எல்லாரும் அவரைப் பார்ப்பார்கள். புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என் பதன் அடிப்படையில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு வழங்குவார்.” 

விமலாவுக்கு இதில் ஆர்வம் உண்டானது. “ஆனால், நாம் நம்முடைய தீய செயல்களைப்பற்றி என்ன செய்யவேண் டும்?” என்று கேட்டாள் அவள்.

சாய்ரா சிரித்தாள். அவர்களுடைய நிறுத்தம் வந்துவிட் டது. அவர்கள் பேருந்திலிருந்து இறங்கினார்கள். “இதுதான் மிகச் சிறந்த பகுதி. பாவநிவாரண பலியாக இறைவன் இயேசு இறந்தார். அதன்பிறகு, மீண்டும் உயிருடன் எழுந்தார். நாம் நம் பாவங்களை ஒப்புக்கொண்டு, அவரை நம்பினால் போதும், அவர் தன் உயிரைத் தியாகம்செய்த அவருடைய நற்செயல் மிகுந்த ஆற்றல்மிக்கது, அது நம் தீய செயல்கள் அனைத்தையும் அந்தப் புத்தகத்திலிருந்து அழித்துவிடும் என்று அவர் வாக்களித்துள்ளார்.”

மிகச் சிறந்த தீர்ப்பின் செய்தி

புறக்கணிக்கப்பட்ட பெண்களுடைய தேவைகளுக்குச் சேவைசெய்கிற மையத்தை அடைந்தார்கள். உணவுக்காக காத்திருக்கிற ஏழைகளையும், மெலிந்த கைம்பெண்களை யும் விமலா பார்த்தாள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் விரைவாக அங்கு நுழைந்தார். அவருடைய கண் ணுக்கருகில் காயம் பட்டிருந்தது, குளிர்கண்ணாடிக்குப் பின்னால் அதை மறைக்க முயன்றிருந்தார். அதை விமலா பார்த்தாள். விமலாவின் இதயம் கருணையால் நிரம்பியது. அவள்மட்டும் காயப்படவில்லை, இன்னும் பலர் காயப்பட்டி ருக்கிறார்கள்!

சாய்ரா அவளைக் கவனித்தாள். “நீ நன்றாக இருக்கிறாய் தானே?” என்று கேட்டாள்.

“ஆமாம், நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று பதில் சொன்னாள் விமலா. “ஆனால், இறைவன் இயேசு விரைவில் வரவேண்டும், நம் நீதிபதியாக இருக்கவேண்டும் என்று நான் சிந்திக்கத் தொடங்குகிறேன். அவர் கெட்டவர்களை அழிக்கப் போகிறார், நல்லவர்களை ஓர் அழகான இடத்துக்கு அழைத்துச்சென்று நிரந்தரமாக வாழவைக்கப்போகிறார் என்பது உண்மையானால், நான் கேட்டதுவரை மிகச் சிறந்த தீர்ப்பு இதுதான்!”

இறைவன் இயேசுவின் புத்தகத்தைப்பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து, இந்தத் தாளின் பின்பக்கத்தில் உள்ள தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover