உலகத்தின் முடிவு: அதிர்ச்சியளிக்கும் ஒரு தீர்க்கதரிசனம்!

உலகத்தின் முடிவு: அதிர்ச்சியளிக்கும் ஒரு தீர்க்கதரிசனம்!

சுருக்கம்

நமது உலகின் எதிர்காலம் ஒரு மர்மம் அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புத்தகமான வேதாகமத்தில் அது முன்னறிவிக்கப்பட்டுள்ளது. முடிவு நெருங்குகிற காலத்தை நாம் தெரிந்துகொள்ள, குறிப்பிட்ட சில அடையாளங்களைக் கவனிக்கும்படி இயேசு சொன்னார். நாம் அவருடைய போதனைகளைப் பின்பற்றி, அவர்மீது நம்பிக்கை வைத்தால், எதிர்காலத்தைப்பற்றி நிச்சயமாக இருக்கலாம். உலகத்தின் முடிவை எதிர்கொள்ளவும், நித்திய வாழ்க்கையைத் தொடங்கவும் எவ்வாறு ஆயத்தமாகலாம் என்பதை இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது.

 

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

8 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

முதியவரான ரமன்தீப் தன் உடலை இன் னும் வசதியான ஓர் இடத்திற்கு நகர்த் தினார். இப்போதெல்லாம் அவருடைய மூட்டுகள் அதிகம் வலிக்கின்றன. நெல் வயல்களைப் பார்ப்பதற்காக அவர் திரும்பினால், அங்குள்ள வண்ணங் கள் ஒன்றாகச் சேர்ந்து மங்குவதுபோல் தோன்றுகின்றன. அவருடைய மருமகள் உணவு தயாரிக்கும் சத்தம் அவருக் குக் கேட்டது. தன் குடும்பம் தன்னை ஒரு சுமையாகப் பார்க்கிறதோ என்று அவர் யோசித்தார். வயது முதிர்தல் எளிது இல்லை, அவருக்கும் சரி, அவரைக் கவனித்துக் கொள்கிறவர்களுக்கும் சரி.

அவர் தன்னுடைய குருநாதர் சொன்ன ஒரு பழைய விஷயத்தை நினைத்துப்பார்த்தார். அப்போது அவர் வாலிபனாக இருந்தார், கோயிலுக்கு நடந்து செல்லக் கூடிய வலிமை உடலில் இருந்தது. நான்கு உலக யுகங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் கொஞ்சம் கொஞ்சமாக அதிக மோசமாக ஆகின்றன என்று அவருடைய குருநாதர் சொன்னார். கடைசி யுகமாகிய கலியுகம்தான் அனைத்தி லும் மிக மோசமாக இருக்கும். எங்குப் பார்த்தாலும் தீமை, துன்பம், இருள் நிரம்பியிருக்கும். ரமன்தீப் பெருமூச்சு விட்டார். கலியுகமும் முதுமைக் காலத்தைப் போன்றது தான். ஒருகாலத்தில் நன்றாக இருந்த அனைத்தும் முடிவில் கெட்டுப்போகும். நில நடுக்கங்களால், நோய் களால், கொலைகளால், போர்களால் மக்கள் இறப்பது பற்றிய செய்திகளை அவர் கேட்கிறார். உயிரோடு இருப் பவர்களோ லெளகீகவாதிகளாக, மனச்சோர்வு உள்ள வர்களாக, ஒழுக்கமற்றவர்களாக ஆகிக்கொண்டிருக் கிறார்கள்.

வருத்தம் நிறைந்த இந்த உலகம் எப்போது முடியும்? அவருடைய முதிய உடலும், அழிந்துகொண்டிருக்கும் உலகமும் மீண்டும் பிறக்க இயலுமா?

பூமியின் எதிர்காலத்தை முன்னறிந்து சொல்லுதல்

நான் உங்களுக்கு ஒரு புனித முன்னறிவிப்பாளரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்; வருங்காலத்துக்கான அவருடைய அறிகுறிகளை நான் அப்படியே நம்புகிறேன். அவர் இறைவன் இயேசு கிறிஸ்து. அவர் மனிதனாகப் பூமிக்கு வந்தார்; மக்களைக் குணப்படுத்தினார்; அவர்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் நுழைவது எப்படி என்று எல் லாரிடமும் சொன்னார். 33 வயதில், அவர் தம் உயிரைப் பலியாகத் தந்தார்; பிறகு, அவர் மரணத்திலிருந்து அற்புத மாக உயிர்த்தெழுந்தார்! நாம் அவரை நம்பினால், அவ ருக்குக் கீழ்ப்படிந்தால், அவருடைய பலி நம் அனைவருக்கும் மன்னிப்பும் விடுதலையும் பெற்றுத்தரும் என்று சொன்னார்.

இறைவன் இயேசு நம் உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினார், இப்போதைய இந்தத் தீய காலத்தை தாம் முடிவுக்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்தார். அவரு டைய புத்தகமாகிய விவிலியம், முன்னறிவிப்புகள் நிறைந்த ஒரு புத்தகமாகும். முடிவு நெருங்கிவிட்டது என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதுபற்றிய அவருடைய முன்னறிவிப்புகளை நாம் கவனிக்கவேண்டும்.

உலகத்தின் முடிவு

“நீங்கள் வருவதற்கும், உலகம் முடிவதற்கும் அடை யாளங்கள் என்னவாக இருக்கும்?” (விவிலியம், மத்தேயு 24:3). என்று ஒருநாள் இறைவன் இயேசுவின் மாணவர்கள் அவரிடம் கேட்டார்கள். உலகின் முடிவுக்கு முன்னால் சில அடையாளங்கள் தோன்றும், அந்த அடையாளங்களை வைத்து, அவர் வரப்போகும் நாள் நெருங்கிவிட்டது என் பதை நாம் தெரிந்துகொள்ளலாம் என்று இறைவன் இயேசு அவர்களுக்குச் சொன்னார். அந்த அடையாளங்களில் சில:

  1. இறைவர் இயேசு சொன்னார், “பொய்யான மீட்பர்கள் வருவார்கள். உங்களை யாரும் ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், ‘நான்தான் கிறிஸ்து’ என்று சொல்லிக்கொண்டு என் பெயரைச் சொன்னபடி பலர் வருவார்கள், பலரை ஏமாற்றுவார் கள்.” (மத்தேயு 24:4–5). தங்களை இறைவன் இயேசு என்று அழைக்கிற ஏமாற்றுக்காரர்களிடம் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அவருடைய உண்மையான வருகை உலகம்முழுவதும் காணப்படும் — “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக் கிறதுபோல” (மத்தேயு 24:27) — மேலும், கொடுமையும் வியப்புமான வாதைகளால் ஒட்டுமொத்த உலகமும் உலுக்கப்பட்டபிறகு அது நடக்கும்.

  2. போர்களும் போர்பற்றிய வதந்திகளும். “யுத்தங் களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப் படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனா லும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்” என்று இறைவன் இயேசு சொன்னார் (மத்தேயு 24:6–7). நாம் யுகத்தின் முடிவை நெருங்க நெருங்க, யுத்தங்கள் அடிக்கடி நடக்கும், இன்னும் தீவிரமாகும். 

  3. பஞ்சங்கள், நில நடுக்கங்கள், கொள்ளைநோய்கள். அவர் முன்னறிவித்த மூன்றாவது அறிகுறி, “பஞ்சங் களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” (மத்தேயு 24:7–8). இந்த நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து 20 மில்லியனுக் கும் மேற்பட்டோர் பஞ்சத்தால் துன்பப்பட்டுள்ளார்கள். நேபாளத்தில் 2015ல் வந்த நில நடுக்கமானது 8,000 பேரைக் கொன்றது, அது வரலாற்றின் மிக மோச மான நில நடுக்கங்களில் ஒன்று. நோய்கள் எண் ணற்ற உயிர்களை எடுத்துள்ளன. கண்டிப்பாக, இறைவன் இயேசு முன்னறிவித்தவற்றை நாம் பார்க்கிறோம். 

  4. ஒழுக்கச் சீரழிவு “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்று இறை வன் இயேசு சொன்னார் (மத்தேயு 24:12). இந்தியா வில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 91 பாலியல் வன்முறைகளும் 79 கொலைகளும் நடைபெறு வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களைப் பற்றிமட்டும் சிந்திக்கிறவர்களாக வளர்கிறார்கள். அதனால், தங்கள் செயல்கள் பிறரை எப்படிக் காயப்படுத்துகின்றன என்பதுபற்றி அவர்கள் அக்கறை காண்பிப்பதில்லை.

மகிமையின் மேகங்களில் அவர் திரும்பி வருவதற்கு முன் நடக்கப்போகும் இந்த அடையாளங்கள் அனைத்தை யும் இறைவன் இயேசு முன்னறிவித்தார். நாம் இந்த அடையாளங்கள் நிகழ்வதைப் பார்க்கும்போது, அவரு டைய முன்னறிவிப்புகள் உண்மையானவை என்று நாம் அறியலாம், அவர் மிக விரைவில் வரப்போகிறார் என்று தெரிந்துகொள்ளலாம்.

இறைவன் இயேசு திரும்ப வருதலுக்குத் தயாராதல்!

சுயநலம், பெருமை, ஒழுக்கமின்மையில் வாழ்கிறவர்கள் இறைவன் இயேசு வரும்போது மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் கள். உண்மையில், அவர் மேகங்களில் திரும்ப வரும்போது, அவர்களுடைய மோசமான செயல்கள் அனைத்தும் ஒரு கணத்தில் அவர்கள்மீது விழுந்து அழிக்கும். அவர்கள் அவரிடமிருந்து ஒளிந்துகொள்ள முனைவார்கள். பர்வதங் களையும் கன்மலைகளையும் நோக்கி, “நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!” என்று அலறுவார்கள் (விவிலியம், வெளிப்படுத்தல் 6:16). 

ஆனால், இறைவன் இயேசுவின் பலியை நம்புகிறவர் கள் அந்த நாளில் மறுரூபமாவார்கள், அவர்களுக்குப் புதிய, அழிவற்ற உடல்கள் வழங்கப்படும். அவர்கள் மிதந்து மேலேறி மேகங்களுக்குச் செல்வார்கள், சீரழியும் உலகிலி ருந்து நிரந்தரமாகத் தப்பித்துவிடுவார்கள். நிரந்தரமாக மகிழ்ச்சியுடன் இருக்கும் அந்தத் தனி நபர்களில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்பினால், நீங்கள் இன்று இந்த எளிய பிரார்த்தனையைச் சொல்லலாம்:

அன்புள்ள, எங்களை உருவாக்கிய கடவுளே, இறைவன் இயேசு விரைவில் திரும்ப வருகிறார் என்று நான் நம்புகிறேன். இப்போது இறைவன் இயேசுவை அறி வதும் நம்புவதும் எப்படி என்று தயவுசெய்து எனக்குக் கற்றுக்கொடுங்கள். அதன்மூலம், சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்லப்படுகிறவர்களில் நானும் இருப்பேன். ஆமென்.

நீங்கள் எதிர்காலத்தைப்பற்றிய இறைவன் இயேசுவின் முன்னறிவிப்புகளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து, இந்தத் தாளின் பின்பக்கத்தில் உள்ள தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover