தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பு

தீய ஆவிகளிடமிருந்து பாதுகாப்பு

சுருக்கம்

தீய ஆவிகள் உண்மையில் இருக்கின்றன; மேலும் அவை மிகவும் பயமுறுத்தக்கூடியவை. ஆவிகள்மீது தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதற்குமுன்பு பணம்வசூலிக்கிறார்கள். பிசாசுகளைக் கட்டவும், துரத்தவும் இயேசு கிறிஸ்துவுக்கு வல்லமை இருந்தது; ஆனால் அவர் ஒருபோதும் பணம் கேட்கவில்லை. அவர் கருணை நிறைந்தவர் என்பதாலும், தீய சக்திகள் நம்மைத் துன்புறுத்துவதை அவர் வெறுப்பதாலும், அவர் எப்போதும் மக்களுக்கு இலவசமாக உதவினார். தீமை எங்கிருந்து வந்தது என்பதையும், பிசாசுகளிடமிருந்து விடுதலைக்காக இயேசுவிடம் எப்படி ஜெபிக்கலாம் என்பதையும் இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது.

பதிவிறக்கம்செய்

தென்கிழக்கு ஆசியாவில் ஒருநாள் காலை நேரம்; நன்றாக வெயில் அடித்துக்கொண் டிருந்தது. நான் சந்தைக்குச் செல்வதற்குப் புறப்பட்டேன். என் பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, என்னைநோக்கி, கத்திக் கொண்டே ஓடிவந்தாள். இரண்டு பெரிய கத்திகள் அவள் கைகளில் இருந்தன. அவள் கண்களில் பயம் வழிந்தது. தீய ஆவி அவளைப் பிடித்திருப்பதை உணர்ந்தேன். நான் ஒரு கிறிஸ்தவள் என்பதால், பாதுகாப்புக்காக அமைதியாக ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் ஜெபித்தபோது, ​தீய ஆவி யின் கொட்டம் அடங்கிவிட்டது; என் சிநேகிதி அமைதியாகி விட்டாள். பின்னர், அவள் தன் கைகளில் வைத்திருந்த கத்தி களை நான் எடுத்துக்கொள்ள அனுமதித்தாள். 

இயேசுவின் வல்லமை 

ஆயிரக்கணக்கானோர் இயேசுவின் இந்த வல்லமையை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் அசுத்த ஆவிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்; நோய்களிலி ருந்து குணமடைந்துள்ளார்கள்; சாபங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்; உடலுக்கு வரக்கூடிய ஆபத்தி லிருந்து காக்கப்பட்டிருக்கிறார்கள். யார் இந்த இயேசு? அவ ருடைய வல்லமை எப்படிப்பட்டது? இயேசுவின் வரலாற்றை கிறிஸ்தவப் புனித நூலான வேதாகமத்தில் பார்க்கலாம். தீய ஆவிகள்மீது அவருக்கிருந்த வல்லமைபற்றி ஒரு கதை அதில் உள்ளது.

ஒருநாள், ஒரு தந்தை தன் மகனை இயேசுவிடம் அழைத்துவந்தார். “போதகரே, என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே பிள்ளை. அவனை ஓர் ஆவி பிடித்தி ருக்கிறது. அவன் திடீரென்று கூக்குரலிடுகிறான்; அவன் வாயில் நுரைதள்ளும் அளவுக்கு அது அவனை வேதனைப் படுத்துகிறது; அது அவனைக் காயப்படுத்துகிறது. அவன் அடிக்கடி நெருப்பிலும் தண்ணீரிலும் விழுகிறான். அவனுக்கு இரக்கம்காட்டுங்கள்” என்று வேண்டினார். இயேசு அந்தச் சிறுவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தார்; ஆனால், அந்தத் தீய ஆவி அவனைத் தரையில் தள்ளியது. அவன் நுரைதள்ளிப் புரண்டான்.

அந்தத் தகப்பனையும் மகனையும் பார்த்த இயேசுவுக்கு மனது வலித்தது. “நீ விசுவாசிக்கக்கூடுமானால், விசுவாசிக் கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்று அந்தத் தகப்பனிடம் இயேசு சொன்னார்.

“நான் நம்புகிறேன்; என் அவிசுவாசம் நீங்க உதவுங்கள்” என்று அந்தத்  தகப்பன் அழுதான். 

அப்பொழுது இயேசு அந்த அசுத்த ஆவியைநோக்கி, “இவனைவிட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என அதை அதட்டினார் (லூக்கா 9:37–42; மாற்கு 9:17–27).

குடும்ப உறுப்பினர்களை ஆவிகள் தாக்குவதால், இந்தத் தகப்பனைப்போல் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் ஏராளம். சிலரால் தூங்க முடிவதில்லை; சிலர் நோய்வாய்ப் படுகின்றார்கள்; சிலர் விசித்திரமான குரல்களைக் கேட்கி றார்கள். சிலர் மனித வல்லமைக்கு அப்பாலுள்ள வலிமை யோடு, முழுக் கிராமங்களையும் பயமுறுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே உதவி வேண்டுமெனத் தீவிர மாக விரும்புகிறார்கள்! 

இதோ ஒரு நல்ல செய்தி: தீய சக்திகளிடமிருந்து பாது காப்பு வேண்டுமென்று நீங்கள் இயேசுவிடம் கேட்கலாம்.

செலவே இல்லாமல் உதவி

ஆன்மிக மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு உதவுவதற் காக பெரிய அளவில் பணம் வசூலிக்கின்றார்கள். 

இதோ, இன்னும் ஒரு நல்ல செய்தி: இயேசு இலவசமாக உதவுகிறார். 

நாம் முதலில் பார்த்த வேதாகமச் சம்பவத்தில், துன்பப்பட்ட குடும்பத்திடமிருந்து இயேசு பணம் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் தன்னை நம்பவேண்டும் என்றுமட்டுமே அவர் விரும்பினார். நல்ல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள விரும்புவதைப் போலவே, இயேசுவும் நம்மை நேசித்து, நம் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறார். 

இயேசுவே சர்வலோகத்தையும் படைத்தவர் என்று வேதாக மம் போதிக்கிறது. உலகம் அவரை நம்பவேண்டுமென்று இயேசு விரும்புகிறார்; அதற்காகவே அவர் வந்தார். அவர் படைப்பாளர்; உலகத்தை தீமை, துன்பம், மரணம் ஆகியவற் றிலிருந்து மீட்கும் வல்லமை அவருக்கு உள்ளது. எப்படி?

இந்தப் பிரபஞ்சத்தில் தீமையோ, துன்பமோ, மரணமோ இல்லாத ஒரு காலம் இருந்ததாக வேதாகமம் சொல்கிறது. எல்லாம் முற்றிலும் இசைவாக இருந்தன. ஆனால், தேவ னால் படைக்கப்பட்ட தேவதூதர்களில் ஒருவன் கலகம் செய்யத் தொடங்கியபோது, எல்லாம் மாறியது. இந்த தேவ தூதன் தன்னைப் படைத்தவர்மேல் பொறாமை கொண் டான். மற்ற தேவதூதர்களிடையே அவன் பொய்களைப் பரப்பத் தொடங்கினான்; அவர்களில் மூன்றில் ஒரு பகுதி யைத் தன்பக்கம் சேர்த்துக்கொண்டான். தேவன் அதிகார வெறி கொண்டவர் என்றும், சுயநலவாதி என்றும் எல்லோ ரும் சேர்ந்து தேவன்மேல் குற்றம்சாட்டினார்கள்.

படைத்தவர் ஒரு கடினமான முடிவுசெய்ய வேண்டியிருந் தது. அவர் அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி வற்புறுத்தி யிருந்தால், அல்லது அவர்களை அழித்திருந்தால், மற்ற தேவதூதர்களும் அந்தத் தவறான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நினைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதனால் தேவன் அப்படிச் செய்யவில்லை. கலகக்காரத் தேவதூதர் களை அழிக்காமல் விட்டுவைத்தார். அவர்களின் தீமையான தன்மை வெளிப்பட அனுமதித்தார். அவர்களுடைய தீய தன்மையானது அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரமாக இப்போது உள்ளது. சரியான நேரத்தில், இந்தக் கலகத்தை தேவன் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவார். 

கலகம் தொடங்கியபிறகு, அந்தக் கலகக்காரத் தூதன் நமது முதல் பெற்றோரை ஏமாற்றினான். அவர்கள் தேவனு டைய எச்சரிக்கைகளை மதிக்கவில்லை; இந்த உலகத்தின் மீது உரிமைகொண்டாட தீயதூதர்களை அனுமதித்து விட் டார்கள். இந்த தேவதூதர்களே இப்போதும் மனிதர்களை ஏமாற்றி, தீங்கு செய்துவருகிறார்கள். இருப்பினும், நம்மைப் படைத்தவருக்கு இந்தத் தீய தேவதூதர்களைவிட அதிக வல்லமை இருக்கிறது; நாம் கேட்கும்போது, அவர் மகிழ்ச்சி யுடன் நமக்கு உதவுகிறார். 

உங்களுடைய பாதுகாப்பான இடத்திற்கு வாருங்கள்

என்னைத் தாக்கமுயன்ற எனது அண்டை வீட்டுப் பெண்ணைப்பற்றிச் சொன்னேனே, நினைவிருக்கிறதா? அவள் கத்திகளைக் கொடுத்தபிறகு, அவளுடைய இறந்த தாயின் ஆவி என்று கூறி, ஒரு திகிலூட்டும் குரல் அவள் மூலம் பேசினது. தனக்கு காணிக்கையாக உணவு தருமாறு  அந்த தீய ஆவி கேட்டது. என்னுடன் இருந்த மற்றவர்களுடன் சேர்ந்து, அந்தத் தீய ஆவி அவளைவிட்டு விலகும்படி தேவ னிடம் வேண்டிக்கொண்டேன். இறுதியாக, ஆவி அவளை விட்டு வெளியேறியது; அவள் சரியான மனநிலைக்குத் திரும்பினாள்.

“இது மீண்டும் நடப்பதை நான் விரும்பவில்லை!” என்று அவள் கத்தினாள். நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடந்த, கண்ணுக்குத் தெரியாத ஒரு போராட்டத்தை அவள் அனுபவித்தாள்; அதிலிருந்து பாதுகாக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய விரும்பினாள். அதனால், நான் அவளுக்கு இயேசுவைப்பற்றியும், வேதாகமத்தைப்பற்றி யும் கற்பித்தேன். கடந்த காலத்தில் தன்னைக் காயப்படுத் திய ஒருவர்மேல் தனக்கிருந்த கோபத்தையும் கசப்பையும் கைவிட உதவுமாறு அவள் இயேசுவிடம் ஜெபித்தாள். மேலும், தனக்கு நல்ல உள்ளத்தைத் தருமாறும், தீமையிலி ருந்து தன்னைக் காக்கும்படியும் இயேசுவிடம் வேண்டி னாள். அவள் இதைச் செய்தபிறகு, தீய ஆவிகள் அவளைத் துன்புறுத்த வரவில்லை!

இயேசுவின் பாதுகாப்பு வல்லைமையை அனுபவிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இவ்வாறு ஜெபிக்கலாம்: 

அன்புள்ள ஆண்டவரே, எனக்கு உம்முடைய உதவி தேவை. தயவுசெய்து தீய ஆவிகளை என் வாழ்விலிருந்து விரட்டி விடுங்கள். எனக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுங்கள்; என்னைப் பாதுகாக்க பரிசுத்த தூதர்களை அனுப்புங்கள். இதை நான் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

உங்களுக்கு, அல்லது நீங்கள் நேசிக்கிறவர்களுக்கு தீய ஆவிகளிடமிருந்து விடுதலைகிடைக்க இயேசு உதவ வேண்டு மென நீங்கள் விரும்பினால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலைப் பார்த்து, எங்களுடன் தொடர்புகொள்ளுங் கள்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover