இயேசுவால் உதவ முடியுமா?

இயேசுவால் உதவ முடியுமா?

சுருக்கம்

நாமாகவே தனியாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளை நாம் அனைவருமே நம் வாழ்வில் எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் நம் வேதனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறோம், ஆனால், நம்மைப் படைத்த கடவுளுக்கு அதுபற்றி எல்லாம் தெரியும். துன்பத்திலிருந்து நாம் முற்றிலும் தப்புவதற்கு உதவுகிற திட்டத்துடன் அவர் தம் குமாரன் இயேசுவை அனுப்பினார். பின்வரும் மூன்று சம்பவங்களும் உண்மை பிரச்சினைகளோடிருந்த நிஜ மனிதர்களைப்பற்றி விவரிக்கின்றன; அவர்கள் உதவிக்காக இயேசுவிடம் வந்தார்கள். முதலில் அவர்களில் எவருக்கும் இயேசுவைப்பற்றி அதிகம் தெரியாது. ஆனால், இயேசு அவர்களுக்கு உதவினபிறகு, அவரை நன்கு தெரிந்துகொள்ள விரும்பினார்கள். எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை இந்தத் துண்டுப்பிரசுரம் கற்றுக்கொடுக்கிறது, இதனால், நம் பிரச்சினைகளை இயேசுவிடம் சொல்லமுடியும். அவரும் நமக்கு உதவுவார்!

பதிவிறக்கம்செய்

அன்புள்ள நண்பரே, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியாது, ஆனால் நாம் எல்லோருமே நம்மால் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறோம். 

வியாதி. மனவேதனை. தனிமை. போதை. வறுமை. பயம். அவமானம். இதுபோன்று நீங்கள் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், உங்களுக்கு உதவுவதற்கு ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் இயேசு கிறிஸ்து. தேவைப்படும் நேரத்தில் பலர் அவரிடம் வந்து, உதவி பெற்றுள்ளனர்.

ஆசியாவில் இயேசுவிடமிருந்து உதவிபெற்ற மக்களைப் பற்றிய மூன்று உண்மைக்கதைகள் கீழே உள்ளன.

இலங்கையில் ஓர் இளம் தாய்

ஜெயா ஒரு சிறிய இரத்தப் பரிசோதனை நிலையத்தில் வேலைசெய்தாள். அவளுடைய கணவர் அவளைவிட்டுப் பிரிந்துவிட்டார்; அந்த நேரத்தில், தன்னையும் தன் மகனையும் கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வேலை அவளுக்குக் கிடைத்தது. வேலை கிடைத்ததில் அவள் மகிழ்ச்சி அடைந்தாள். ஜெயா பௌத்த மதத்தைச் சேர்ந்தவள்; ஆனாலும், தனது கிறிஸ்தவ முதலாளியான அனாவிடம் வேலைசெய்வது அவளுக்குப் பிடித்திருந்தது. இருவரும் விரைவில் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

ஒருநாள் வேலைசெய்து கொண்டிருந்தபோது, ஜெயா வுக்கு திடீரென வலி ஏற்பட்டது. அவள் தனது முன்னங்கையில் மூன்று நீண்ட வெட்டுகளையும் இரத்தத்தையும் கண்டு, பயத்துடன் அலறினாள். அறையில் தீய ஆவிகள் இருப்பதை ஜெயாவால் உணர முடிந்தது.

அவள் அழுகையைக் கேட்டு, அனா ஓடிவந்தாள். நடந்ததை அனாவிடம் ஜெயா விளக்கினாள். ஜெயாவின் முகம் பயத்தால் வெளிறிப்போயிருந்தது. “ஜெயா, இந்தத் தீய ஆவிகளை வெளியேறும்படிக் கட்டளையிட என் தேவனுக்கு அதிகாரம் உள்ளது. இப்போதே ஜெபம்பண்ணுவோம்” என்றாள் அனா. அனா ஜெபித்தாள், ​​ஜெயாவின் மனதில் அமைதி நிலவியது. ஆவிகள் போய்விட்டன.

“ஜெபம் எவ்வளவு விரைவாக வேலைசெய்கிறது என்பதைக் கண்டபோது, எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. மேலும் எனது முதலாளியின் ஜெபத்துக்குப் பதில்தந்த அந்த இயேசுவைப்பற்றி மேலும் அறிய விரும்பு கிறேன். அவர் ஜெபத்தைக் கேட்டு, பதிலளிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது!” என்று ஜெயா சொல்கிறாள்.

பாங்காக்கில் ஒரு விற்பனையாளர்

சுசீன் பாங்காக்கில் ஒரு வெற்றிகரமான விற்பனையாளர். அவள் தனது நிறுவனத்தில் வெகுவிரைவாகப் பதவி உயர்வு பெற்றாள். ஆனால் எல்லாம் நன்றாக நடந்துவிடவில்லை. அவள் திருமணம் செய்துகொள்ள விரும்பியவர் அவளை விட்டுப் பிரிந்துவிட்டார்; அதன்பிறகு, ​​அவள் தனியாக இருந்தாள்; மனம் உடைந்துபோனாள். 

வாரங்கள் பல கடந்தன; உலகமே இருண்டு போனதுபோல இருந்தது. பயங்கரமான அவலங்களைப்பற்றிய செய்தி கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை சுசீன் கவனிக்க ஆரம்பித்தாள். வெளியாகிய பாடல் வரிகளும் திரைப்படங்களும் வாழ்க்கையின் பேரழிவுகளை மையமாகக் கொண்டுள்ளன என்பதைக் கவனித்தாள். இந்தப் பேரழிவுகளுக்குப் பின்ன ணியில் யாரோ இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தாள். ஆனால், உலகில் நன்மைகளும் நடக்கின்றன, அல்லவா? அதன் பின்னணியில் இருப்பது யார்? அவ ளுக்குத் தெரியவில்லை.

ஓர் இரவு, சுசீன் தன் அறையில் யாரோ இருப்பதை உணர்ந்து விழித்தெழுந்தாள். முதலில் தான் கனவுகாண்ப தாக நினைத்தாள், ஆனால், அவள் மீண்டும் பார்த்தபோது, தனது கால்பகுதியில் யாரோ நிற்பதைக் கண்டாள். ஆச்சரியம் என்னவென்றால், அவளுக்குப் பயம் ஏற்பட வில்லை. அங்கு நின்றவரின் முகம் கனிவாக இருந்தது; அவர் நல்லவரென்று சுசீன் புரிந்துகொண்டாள். மன அமைதியோடு, கண்களை மூடித் தூங்கிவிட்டாள்.

பொழுது விடிந்தபிறகு, இரவில் வந்தவரைப்பற்றி சுசீன் யோசித்தாள்; அவர் இயேசு என்று அவள் உறுதியாக நம்பினாள். தனது விரக்திநிலைமையை அறிந்திருப்பதால், அவர் தனக்கு உதவிசெய்ய வந்ததாக அவள் உணர்ந்தாள். அவரைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள எங்கே செல்வது என்று யோசித்தாள்; கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்கிற வலுவான எண்ணம் தோன்றியது. அவள் அங்கே சென்று வேதாகமத்தைப் படித்தாள்; ​​இயேசுவைப்பற்றியும், அவரை எப்படித் தேடுவது என்பதுபற்றியும் கற்றுக்கொண்டாள். தான் இனித் தனிமையில் இருக்கப் போவதில்லை என்பதை சுசீன் தெரிந்துகொண்டாள். 

நம்பிக்கை இழந்த மலேசியத் தந்தை

செங் சில இரவுகளாகக் காரில்தான் தூங்கினார். காரின் இருக்கையில் அசௌகரியமாக தன்னையே திருக்கி முறுக்கிக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் தனது மகனின் பக்கத்தில் இருக்க ஆசைப்பட்டார்; ஆனால், இரவில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் தங்க, பெற்றோரில் ஒருவருக்குமட்டுமே அனுமதி இருந்தது. 

உயிருக்கு ஆபத்தான இதய நோய் என் மகனுக்கு ஏன் ஏற்பட்டது? அவன் இறந்துவிட்டால் என்ன செய்வது? அவன் அவருக்கு ஒரே பிள்ளை; அவன் இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை! அவர் முகத்தில் கண்ணீர் வழிந்தது தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென்று உணர்ந்தார். முன்னோர்களை வேண்டினார்; பயனில்லை; கோவில்களுக்குச் சென்றார்; பலனில்லை. தற்போது, ​​ அறுவை சிகிச்சைமூலம் குழந்தையின் இருத யத்தைச் சரிசெய்ய முடியாது என அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.   

காரின் பக்கத்து இருக்கையைப் பார்த்தார்; சில நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவர் அவரிடம் கொடுத்த சிறிய துண்டுப்பிரசுரம் ஒன்று அதில் கிடந்தது. எதுவும் யோசிக்காமல், விளக்கைப் போட்டு, அந்தத் துண்டுத்தாளை எடுத்து, செங் படிக்கத் துவங்கினார். இந்த உலகத்தைப் படைத்த கடவுளைப்பற்றி அதில் எழுதியிருந்தார்கள். “அவர் நம்மை நேசிக்கிறவர்; நம் தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஏங்குகிறார்” என்று அதில் எழுதியிருந்தது.

தான் வாசித்தவைபற்றி செங் யோசித்தார். அவருக்கு வழி எதுவும் தெரியவில்லை. இந்தக் கடவுளால் உதவிசெய்ய முடியுமா? “கடவுளே, நீங்கள் உண்மையிலேயே இருந்தால், நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவுசெய்து என் மகனைக் குணமாக்குங்கள்! நீங்கள் அப்படிச் செய்தால், நீங்கள் என் கடவுளாக இருப்பீர்கள். நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று வாக்குக் கொடுத்தார். 

மறுநாள் காலை மருத்துவமனையில் தனது மகன் இருந்த அறைக்குள் செங் நுழைந்தார். அவருடைய மகனின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் செவிலியர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிரித்துக்கொண்டே, உற்சாகமாக அவர் மகனுடைய மருத்துவ அறிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவருடைய மகன் குண மடைந்துவிட்டான்!

இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம்

நீங்கள் உங்கள் வேலை அல்லது படிப்பில் சிரமப்படு கிறீர்களா? உங்களுக்கு அருகில் உள்ளவர்களுடன் உங்களுக்கு மோதல்கள் உள்ளனவா? நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கிறீர்களா? எதற்காவது பயப்படுகிறீர்களா? தனிமையாக உணருகிறீர்களா? போதைப்பழக்கத்தில் மாட்டியிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ஏதாவது பெலவீனம் உங்களை வாட்டிவருகிறதா? 

இயேசுவால் உங்களுக்கு உதவமுடியும்!

̋ வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்̋ என்று இயேசு அழைக்கிறார் (மத்தேயு 11:28). 

இயேசு யார் என்பதை நீங்கள் இப்போது முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அப்படி ஒருவர் உண்மை யில் இருக்கிறாரா என்றுகூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால், நீங்கள் உண்மையாகவே உண்மையை அறிய விரும்பினால், உண்மையிலேயே உதவிபெற விரும்பினால், இயேசு உங்களுக்கு உதவுவார் என்பதை உறுதியாக நம்ப லாம்.

இவ்வாறு ஜெபியுங்கள்: “இயேசுவே, நீர் உண்மையான வர் என்றும், எனக்கு உதவ முடியும் என்றும் நான் நம்ப விரும்புகிறேன். நீங்கள் உண்மையானவர் என்பதைக் காட்டி, . . . பிரச்சினையைத் தீர்க்க எனக்கு உதவுங்கள். கோடிட்ட இடத்தை நிரப்புக. . . . உம்மைப்போன்ற கடவுள் எனக்கு இப்போதே தேவை.˝

இயேசு நிச்சயம் உதவுவார். அவர் அவ்வாறு உதவி செய்யும்போது, அவரைப்பற்றி வேறொருவரிடம் சொல்லுங் கள்!

இயேசுவின் வல்லமையைப்பற்றி மேலும் அறிய நீங் கள் விரும்பினால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலைப் பார்த்து, எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover