சிறந்த எதிர்காலம்

சிறந்த எதிர்காலம்

சுருக்கம்

இந்தத் உலகில் கெட்ட விஷயங்கள் நடக்கின்றன. மக்கள் கஷ்டப்படுகிறார்கள்; எல்லோரும் இறக்கிறார்கள். ஆனால், எதிர்கால நம்பிக்கை ஒன்று இருக்கிறது! தம்மை நேசிக்கும் மக்களை சிறந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல இயேசு வருகிறார் என்று கிறிஸ்துவின் புனித நூலான வேதாகமம் கூறுகிறது. அங்கு, நோய்களும் துன்பங்களும் இல்லை. அனைவரும் என்றென்றும் அமைதியோடும் ஒற்றுமையோடும் வாழ்வார்கள். கடவுள் நமக்காக வைத்திருக்கும் அந்த அழகான எதிர்காலத்தில் பங்கேற்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது!

பதிவிறக்கம்செய்

பேரங்காடிக்குள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தபோது, லீ தனது இரண்டு சிறு மகள்களையும் இறுக்கமாகப் பிடித்திருந்தார். “கவனமாக இருங்கள்” என்று அவர் முணுமுணுத்தார். “அப்பாவின் அருகிலேயே இருங்கள்” என்றார். அவருக்குத் தலை சுற்றியது. அவர் இப்படிப்பட்ட பெரிய கடைகளுக்குப் போனதில்லை. மேலும், அவர் தனது குழந்தைகளைத் தானே தனியாக கவனித்துக்கொண்ட சூழ்நிலையும் இது வரை இல்லை.

லீ கொஞ்சம் உணவு வாங்கிக்கொண்டு, தன் மகள் களுடன் பேருந்தில் ஏறியபோது, கிட்டத்தட்ட அழுகிற நிலைக்கு வந்துவிட்டார். சில வாரங்களுக்கு முன்பு அவர் மனைவி இறந்துவிட்டாள். அவள் நினைவாகவே இருந் தார். அவளுடைய சிரித்த முகம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. அவள் செய்த சாப்பாடு இனி கிடைக்காது; அவளைப்போல இனி குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள முடியாது. தங்களுடைய குடும்ப வாழ்க்கை இப்படி சோகமாக முடியும் என்று அவர் எதிர் பார்க்கவே இல்லை. 

அவர் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? அவருடைய பிள்ளைகள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அவர் எதிர்காலம் இப்படித்தான் இருக்குமா? 

எதிர்காலத்திற்கான நம்பிக்கை

நேரம் செல்லச்செல்ல லீயின் மனதில் ஓர் எண்ணம் உண்டாயிற்று: தனக்குச் சிறந்த எதிர்காலத்தைக் கண் டறிய மதம் உதவுமா? ஆனால், ஒவ்வொரு மதமும் வெவ்வேறு விதமான தீர்வுகளைத் தருகின்றன; எல்லா மதங்களும் நல்லவை அல்ல என்பதையும் அவர் உணர்ந் தார். தமது இழப்பைப் புரிந்துகொள்வதற்கான பதில்களை அவர் எங்கே கண்டுபிடிக்க முடியும்? தமது மனைவியுடன் மீண்டும் இணைய முடியும் என்கிற நம்பிக்கையே இல்லையா? முடிவில்லாத துன்பத்திற்கு எப்போதாவது தீர்வு கிடைக்குமா? 

இந்த உலகம் கொஞ்சம்கொஞ்சமாக மேம்படும் என்று சில தத்துவங்கள் கற்பிக்கின்றன; அது சரி இல்லை என்பதை லீ தெளிவாக உணர்ந்தார். சில மதங்கள் ஒரு வகையான தப்பிக்கும் திட்டத்தைக் கூறுகின்றன. இந்த உலகம் ஒருநாள் முழுவதும் அழிந்துபோகும்; நல்லவர்கள் இறக்கும்போது, கடவுள் அவர்களைக் காப்பாற்றி, சொர்க் கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கற்பிக்கிறார்கள். சிலர் விவரிக்க முடியாத நிரந்தர நிலை ஒன்றுபற்றிப் பேசுகிறார்கள்; அதை நிர்வாணம் என்று அழைக்கிறார்கள். ஆனால், அதில் மனிதர்மேல் அக்கறை எதுவும் இல்லை. எந்தக் கருத்து சிறந்தது என்று லீ யோசித்தார்.

கிறிஸ்தவத் தீர்வு

அண்டை வீட்டிலிருந்த ஒரு கிறிஸ்தவருடன் லீ பேசத் தொடங்கினார். நம்மைப் படைத்தவருக்கு எதிராக மனிதர் கலகம்செய்ததால் இந்த உலகம் இந்தப் பிரச்சினையில் உள்ளது என்று கிறிஸ்தவப் புனித நூலான வேதாகமம் போதிக்கின்றது என்பதை அவர் விரைவில் அறிந்து கொண்டார் (ஆதியாகமம் 6:5). ஆனால், இந்தப் பூமியை அதன் முதல் பரிபூரண நிலையில் மீண்டும் உருவாக்கப் போவதாக நம்மைப் படைத்தவர் உறுதியளித்துள்ளார் (வெளிப்படுத்தல் 21:1). தங்கள் சுயநல நோக்கங்களைச் சரிசெய்ய யாரெல்லாம் கடவுளை அனுமதிக்கிறார்களோ, அவர்கள் அந்தப் புதிய பூமியில் வைக்கப்படுவார்கள்.

நம்மைப் படைத்தவராகிய கடவுள் “அவர்களுடைய கண்ணீர் யாவையும்  துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) துன்பம் முழுவதும் நீங்கிவிடும்!

“அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவி டரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5–6) உடல் குறைபாடுகள் நீங்கிவிடும்!

இயற்கை உலகமும் மீட்கப்படும். “ஓநாயும் ஆட்டுக்குட்டி யும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக் கோலைத் தின்னும்.” (ஏசாயா 65:25)

இது எப்படி நடக்கும்? எதிர்பாராத நேரத்தில் கடவுள் வருவார் என்று வேதாகமம் கூறுகிறது (மத்தேயு 24:36–42). ஆனால், எல்லோருக்கும் அவர் வருவது தெரியும்., ஏனென் றால் “மேகங்களுடனே வருவார்; கண்கள் யாவும் அவரைக் காணும்” (வெளிப்படுத்துதல் 1:7). மின்னலும் இடியும் இருக்கும்; பூமி அதிரும் (மத்தேயு 24:27; வெளிப்படுத்தல் 16:17–21). 

உரத்த எக்காளத் தொனி கேட்கும். படைத்தவரின் வாக்குறுதியை நம்பி இறந்தவர்கள் எல்லோரும் மீண்டும் உயிர்பெறுவார்கள். உயிரோடிருக்கும் விசுவாசிகளுடன் சேர்ந்து, அவர்கள் “ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட” இருப்பார் கள் (1தெசலோனிக்கேயர் 4:17). என்ன ஒரு மகிழ்ச்சி யான சந்திப்பு!

அனைவரும் புதிய பூமியில் வாழவேண்டும் என்பது கடவுளுடைய விருப்பமாக இருந்தாலும், இறுதியில் பொல்லாதவர்கள் அழிக்கப்படுவார்கள் (2பேதுரு 3:9–11). அதன்பிறகு, கடவுள் இந்த உலகத்தை மீண்டும் உரு வாக்கி, மாசும் துன்பமும் மரணமும் இல்லாத புதிய வீட்டில் நம்மை வைப்பார்.

மீண்டும் உருவாக்கப்படுகிற உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்!

வேதாகமத்தைப் படித்தபோது, அதில் விவரிக்கப்பட் டுள்ள காட்சிகளை லீ கற்பனை செய்துபார்த்தார். குளிர்ந்த புல் கம்பளத்தின்மீது, உயிர்த்தெழுந்த தன் மனைவியுடன் நடப்பதை அவர் கற்பனைசெய்து பார்க்கமுடிந்தது. அவர் களுடைய மகள்கள் ஒரு கம்பீரமான புலியுடன் விளை யாடும்போது, அவர்கள் ஒர் ஓடையின் அருகே உட்கார்ந் திருப்பார்கள். 

வாரத்திற்கு ஒருமுறை, சிம்மாசனத்தில் கடவுள் அமர்ந் திருக்கும் தலைநகருக்கு அவர்கள் பெருங்கூட்டமாகச் செல்வார்கள் (ஏசாயா 66:22–23). அவர்கள் தங்குவதற்காக தெருக்களில் நடந்துசெல்வார்கள்; அவர்களுடைய இதயங் களில் மகிழ்ச்சியும், கடவுளின் மீதுள்ள அன்பும் பொங் கிவழியும். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கடவுளைப் புகழ்ந்துபாடுவார்கள். 

யாரும் முதுமை அடையமாட்டார்கள்; நோய்வாய்ப்பட மாட்டார்கள்; இறக்கமாட்டார்கள். மகிழ்ச்சியும் அன்பும் முழுமையாக இருக்கும்!

மிகவும் நன்றாக இருக்கிறதே, உண்மையாக இருக் குமா?

கிறிஸ்தவ வேதாகமத்தில் படித்தவை எல்லாம் லீக்குப் பிடித்திருந்தது. அது உண்மையாக இருக்குமா என்கிற கேள்வி சில சமயங்களில் எழும்பினது. நன்றிசொல்லி ஜெபிப்பதுமட்டுமே அவர் செய்யக்கூடியதாகத் தெரிந் தது. அம்மா இல்லாமல் அப்பாமட்டும் குடும்பத்தைக் கவனிப்பது எளிதானது அல்ல; ஆனால், இப்போது அவ ருக்கு அமைதியும், எதிர்கால நம்பிக்கையும் இருந்தன!

துன்பம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொது வானது. பிரச்சினைகளையே யோசித்துக் கொண்டிருப் பது எளிதாக இருக்கலாம். ஆனால், ஒரு நற்செய்தி இருக்கிறது! நம் உலகத்தின் தோற்றத்தை மட்டுமல்ல, இறுதி முடிவு எப்படியிருக்கும் என்பதையும் வேதாகமம் விளக்குகிறது. உங்களுக்கும் எனக்கும் இனிமையான முடிவு காத்திருக்கிறது. நம் அன்புக்குரியவர்கள் அனை வருக்கும் அந்த இனிய முடிவு காத்திருக்கிறது!

உங்களைப்பற்றி என்ன?

கடவுள் உங்களுக்கு இனிமையான எதிர்காலத்தை வைத்திருக்கிறார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய விரும்புகிறீர்களா? உங்கள் துன்பத்தை அவர் எவ்வாறு நீக்குவார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படி யானால், பின்வருமாறு ஜெபியுங்கள்: 

எங்களைப் படைத்த கடவுளே, இந்த உலகத்தை அதன் முந்தைய நல்நிலைமைக்கு மாற்ற உம்மால் முடியும் என்று நான் நம்ப விரும்புகிறேன். நம்பமுடியாத அளவுக்கு அது நல்லதாக இருக்கிறது. நீர் உண்மையானவரா? எனக்கான உம் திட்டங்கள் என்ன? இவற்றை அறிந்து கொள்ள எனக்கு உதவுங்கள்.

நீங்கள் மேலும் அறிய விரும்பினால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலைப் பார்த்து, எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover