
மன்னிப்பு பெறுதல்
சுருக்கம்
நாம் அனைவரும் வாழ்க்கையில் தவறுசெய்கிறோம். கர்மாவின் பலமான அடிக்காக நாம் காத்திருக்கவேண்டுமா? அல்லது தெய்வீக மன்னிப்பு என்று ஒன்று இருக்கிறதா? ஊதாரி மகனைப்பற்றி இயேசு சொன்ன உவமையை இந்தத் துண்டுப்பிரசுரம் நம் நாட்டுப் பாணியில் விளக்குகிறது; சிருஷ்டிகராகிய கடவுள் எவ்வாறு பாவிகளைத் திறந்த கரங்களுடன் வரவேற்கிறார் என்பதையும், வாழ்நாள்முழுவதும் செய்த பாவத்தை உடனடியாக அவரால் மன்னிக்கமுடியும் என்பதையும் காட்டுகிறது.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
8 மொழிகள்
பக்கங்கள்
6
பிரதாப் ஒரு பணக்கார ஜமீன்தாருடைய மகன். அவர்கள் ஒரு பெரிய வீட்டில் வசித்தார்கள். அவர்களுக்கு வேலைசெய்ய பல வேலைக் காரர்கள் இருந்தார்கள். பிரதாப் எப்போதும் மிகச் சிறந்த உடைகளைத்தான் உடுத்தினான்; நல்ல உணவுதான் சாப்பிட்டான்; மிகச் சிறந்த கல்வியைப் பெற்றான். அவனுடைய பெற்றோர், குறிப்பாக அவனுடைய தந்தை அவனை மிக வும் நேசித்தார் என்பது அவனுக்குத் தெரியும்.
ஆனால், பிரதாப் வளரவளர, அவன் மாறிப்போனான். பழைய வழி அவனுக்கு இப்போது ஈர்ப்பாக இல்லை. தந்தையின் வீடும் தந்தையின் வழிகளும் தன்னைக் கட்டுப்படுத்துவதாக அவன் நினைக்கத் தொடங்கினான். பிரதாப் விடுதலைக்கு ஏங்கினான்.
ஒருநாள், தன்னுடைய தந்தையிடம் ஒரு சிறப்புக் வேண்டுகோளைச் சொல்லும்படி பிரதாப் தன் தாயிடம் கெஞ்சினான். தான் விரும்பியதை அவன் தன் தாயிடம் சொன்னபோது, அம்மா அச்சத்தில் பின்வாங்கினாள். ஆனால், அவன் விடவில்லை, அவள் ஒப்புக்கொள்ளும்வரை தொடர்ந்து அவளை வற்புறுத்தினான். பல நாட்கள் ஆகின. ஆனால், இறுதியில், அவள் அழுதபடி திரும்பி வந்தாள்.
“அவர் அதைச் செய்வார்” என்றாள் அம்மா; அவளால் தன் மகனைப் பார்க்கக்கூட இயலவில்லை. “நம் உடை மைகளில் பாதியை விற்று, அவர் உன் சொத்தை உனக்குத் தருவார். ஆனால் ஏன், என் மகனே? ஏன்?”
அவள் இப்படிக் கேட்டபோது பிரதாப் சற்று வருந்தி னான்; ஆனால், அவனுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவன் திட்டத்திற்குப் பலன் கிடைத்துவிட்டது. அவன் தன் தந்தையின் பணத்தில் தன் பங்கைப் பெறுவான், அதன் மூலம் அவன் விரும்பும் வாழ்க்கையை அவன் வாழலாம்.
துன்மார்க்க வாழ்க்கை
பிரதாப் பெரிய நகரம் ஒன்றில் குடியேறினான். அவன் விலையுயர்ந்த மாளிகை ஒன்றை வாடகைக்கு எடுத்தான்; புதிய நண்பர்களை உருவாக்கிக்கொண்டான். விரைவில், அவன் விருந்துகள் வைத்தான்; பணக்காரர்களும் பிரபலமா னவர்களும் அவற்றால் ஈர்க்கப்பட்டார்கள். அவன் கார்களை வாங்கிக் குவித்தான்; அழகிய பெண்களுடன் தொடர்பு கொண்டான்; நட்சத்திர உணவகங்களில் சாப்பிட்டான். அவன் விரும்பிய அனைத்தும் அவனுக்குக் கிடைத்தன.
ஒருநாள், பிரதாப்பின் பணம் தீர்ந்துவிட்டது. சங்கடத் தோடு தன் புதிய நண்பர்களில் சிலரைச் சந்தித்து, “எனக்குக் கொஞ்சம் பணம் கடன்கொடுங்கள்” என்று கேட்டான். ஆனால், அவர்கள் அவனைக் காணாததுபோல் சென்றுவிட் டார்கள். அவனால் தன் தேவைகளுக்குப் பணம் கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், வீட்டு உரிமையாளர் அவனை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். கையில் பணம் இல்லை; நண்பர்கள் இல்லை; எங்கே செல்வது?
பிரதாப் குழப்பத்தோடும் பதற்றத்தோடும் நகரத்தில் அலைந்து திரிந்தான். சூரியன் மறையத் தொடங்கிய நேரம், அவனுக்குப் பயமாக இருந்தது. அவன் எங்கு தூங்கு வான்? அவன் என்ன சாப்பிடுவான்? பிரதாப் தன் வாழ்க்கை யில் முதன்முறையாக தெருவில் தூங்கினான்; வயிறு பசியால் துடித்தது.
தவறுக்கு வருந்துதல்
அடுத்த சில நாட்கள், பிரதாப் நகரத்தில் வேலைதேடி னான். தெருவில் தூங்கியதால், அவன் கிழிந்த ஆடை களுடன் இருந்தான்; அதனால், யாரும் அவனுக்கு வேலைதர விரும்பவில்லை. ஒருவழியாக, சுமாரான உணவகம் ஒன் றின் மேலாளர் அவனுக்கு வேலை கொடுத்தார். பிரதாப் பல மணிநேரம் வேலை செய்தான்; உணவு உண்ணுவோருக்கு உணவு கொண்டுசென்றான்; மேசைகளைத் துடைத்தான். அவனுக்கு மிகவும் பசித்தது; மிகவும் களைப்பாக இருந்தது. ஒரு பணக்கார மனிதருடைய மகனாகிய நான் எவ்வாறு உணவு பரிமாறுகிற வேலையைச் செய்ய நேர்ந்தது என்று அவன் வியந்தான்! கடைசி நபர் சாப்பிட்டுவிட்டு உண வகத்திலிருந்து கிளம்பியதும், அவன் சமையலறைக்குள் சென்றான்; பாத்திரங்களைத் தேய்க்க உதவினான். குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் ஒரு தட்டு இருந்தது. அதில் பாதி சாப்பிடப்பட்ட ஒரு ரொட்டி இருந்தது. அதை அவன் பார்த் தான். அவனுக்கு மிகவும் பசித்தது. அதை எடுத்துச் சாப் பிடலாம் என்று கை நீட்டிவிட்டான்.
எனக்கு என்ன ஆகிவிட்டது? அவன் தன்னைத்தானே திட்டிக்கொண்டான். என்னுடைய தந்தையின் வீட்டில் வேலைக்காரர்களுக்குக்கூடச் சாப்பிடப் போதுமான அளவு ரொட்டி இருக்கும்; கூடுதல் ரொட்டிகளும் இருக்கும். ஆனால் நானோ, குப்பையான இந்த மீதி உணவைச் சாப்பிடப் பார்க்கிறேன்!
அவன் அடுக்கப்பட்டிருந்த பாத்திரங்களை வெறித்துப் பார்த்தான்; நெடுநேரம் யோசித்தான்.
நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குப் புரிகிறது என்று சொல்லிக்கொண்டான். நான் என் தந்தையிடம் திரும்பிச் செல்வேன். “தந்தையே, நான் உங்களுக்கு எதி ராகவும் கடவுளுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகனாக இருக்கும் தகுதி இனிமேலும் எனக்கு இல்லை. தயவுசெய்து, உங்களுடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று அவரிடம் சொல்வேன்,
ஒரு பாத்திரத்தைக்கூடக் கழுவாமல் பிரதாப் அந்த உணவகத்திலிருந்து கிளம்பினான், தன்னுடைய வீட்டை நோக்கிப் பயணம்செய்யத் தொடங்கினான்.
வீடு திரும்புதல்
பிரதாப் வீடுசெல்லும் வழியில் பல விஷயங்களை யோசித்தான். அவனுடைய தந்தை அவனைப் பார்க்கும் போது என்ன செய்வார்? அங்குப் போனவுடன் என்ன சொல்லவேண்டும் என்று அவன் ஒத்திகை பார்த்தான். ஆனால், அது அவன் மனதில் அமைதி தரவில்லை. கடைசி யில், ஒரு நீண்ட பயணத்துக்குப்பிறகு, அவன் தன் தந்தை யின் வீட்டைத் தொலைவிலிருந்து பார்த்தான். அவன் சாலையில் மெல்லமெல்ல வீட்டைநோக்கி நடந்தான்.
திடீரென்று, அவன் ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டான். எப்போதும் மிக அமைதியாகவும் கம்பீரமாகவும் இருக்கிற அவனுடைய தந்தை வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்தார். அவர் பிரதாபிடம் வந்து, அவனை இறுக அணைத்துக் கொண்டார். பிரதாபுக்கு அவனுடைய இதயம் உடைந்து விடும்போல் இருந்தது.
“அப்பா”, அவன் திணறித்திணறிப் பேசினான், “நான் உங்களுக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனியும் உங்கள் மகனாக இருக்கும் தகுதி எனக்கு இல்லை. . . .”
அவன் சொன்ன ஒரு சொல்லைக்கூட தான் கேட்க வில்லை என்பதுபோல் அவனுடைய தந்தை நடந்துகொண் டார். அவருடைய முகத்தில் கண்ணீர்த் துளிகள் வழிந்து கொண்டிருந்தன. வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் இந்தச் சலசலப்பைக் கேட்டு ஓடிவந்தார்கள்.
“விரைவாக!” தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டார். “அவனுடைய அறையைத் தயார் செய்யுங்கள்! அவனுக்குப் புதிய ஆடைகளைத் தயார் செய்யுங்கள்! விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்கள்; நாம் இந்த நாளைக் கொண்டாடப் போகிறோம்! இதோ, என் மகன் — இவன் இறந்துபோயிருந் தான், இப்போது உயிருடன் திரும்பிவிட்டான்; இவன் தொலைந்துபோயிருந்தான், இப்போது வந்துவிட்டான்!”
மன்னிப்பு பெறுதல்
இந்தக் கதை, நம்மை உருவாக்கிய கடவுளிடம் நாம் எப்படி மன்னிப்பைப் பெறுகிறோம் என்பதை விவரிப்பதற்காக இறைவன் இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு உவமையின் அடிப்படையிலானது. வாழ்க்கையில் நாம் தவறு செய்யும் போது, அவை மிகப் பெரிய தவறுகளாக இருந்தாலும் பரவாயில்லை; பிரதாப் தன் தந்தையிடம் திரும்பியதுபோல நாம் கடவுளிடம் திரும்பிச் செல்லலாம். நாம் சிக்கலான சடங்குகளைச் செய்யவோ, பலிகளைச் செலுத்தவோ வேண்டியதில்லை. கடவுள் திறந்த கரத்துடன் நமக்காகக் காத்திருக்கிறார். மாறிய இருதயத்தைத்தான் அவர் மிகவும் மதிக்கிறார். நாம் நம் பாவங்களைப் பணிவோடு ஒப்புக் கொள்ளவேண்டும்; உண்மையாக வருந்தவேண்டும்; மன்னிப்பு கேட்கவேண்டும். கடவுளுடைய மன்னிப்பின் தெய்வீக அதிசயத்தை நீங்கள் அனுபவிக்க விரும்புகிறீர்களா? இன்றைக்கு, இந்தக் கணத்தில், நீங்கள் இதுவரை செய்துள்ள ஒவ்வொரு தவறிலிருந்தும் நீங்கள் தூய்மை ஆகலாம். நீங்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்யலாம்:
அன்புள்ள கடவுளே, நான் என் பாவங்களை எண்ணி மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்; இறைவன் இயேசு கிறிஸ்துவின் மிகப்பெரிய தியாகத் தினால் என்னை எல்லா அழுக்குகளிலிருந்தும் தூய்மை யாக்குங்கள். என்னை மனதில் ஒரு புதிய மனிதனாக மாற்றுங்கள். ஆமென்.
இறைவன் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நீங் கள் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து, இந்தத் தாளின் பின்பக்கத்தில் உள்ள தகவலைப் பயன்படுத்தி, எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
Copyright © 2023 by Sharing Hope Publications.இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications