அற்புதங்களின் நாள்

அற்புதங்களின் நாள்

சுருக்கம்

விமலுக்கு அவரது மனைவியோடு உறவில் விரிசல் மேலும் மோசமடைந்து வந்தது. ஆனால் ஒருநாள், சிருஷ்டிகராகிய கடவுளுக்கு மரியாதைசெலுத்தும் ஒரு சிறப்புப் புனிதநாளான ஓய்வுநாளைப்பற்றி அறிந்துகொண்டார். அவர் கர்த்தராகிய இயேசுவின் புத்தகத்தைப் படிக்கவும், ஒவ்வொரு வாரமும் ஓய்வுநாளை ஆசரிக்கவும் தொடங்கினார். மெல்லமெல்ல விமலின் கோபம் கரைந்தது. அவரது குடும்ப வாழ்க்கையில் நல்லது நடக்க ஆரம்பித்தது.

வகை

துண்டுப் பிரசுரம்

வெளியீட்டாளர்

Sharing Hope Publications

கிடைக்கிறது

8 மொழிகள்

பக்கங்கள்

6

பதிவிறக்கம்செய்

விமல் தன் ஆட்டோ ரிக்‌ஷாவை சாலை ஓரமாக நிறுத்தினான். நாள்முழுவதும் அவனுக்குப் பல சவாரிகள் கிடைத்தார்கள். ஆனால், அவன் மகிழ்ச்சியாக இல்லை. அவனால் தன் திருமணத் தைப்பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெ னில், அது உடைந்துகொண்டிருந்தது.

அவன் தன் மனைவி சீமாவை நேசித்தான். ஆனால், சில நாட்களுக்கு ஒருமுறை அவளை அடித்துவிடுவான். கார ணம், அவள் அவனைக் கோபப்படுத்துவாள். அவன் அவளை அடிக்க விரும்பவில்லை, ஆனாலும், அது நடந்துவிடும். 

மதச் சடங்குகளின்போது சீமாவைப் பேய் பிடித்துக் கொள்ளும்; அவள் காட்டுத்தனமாக நடனம் ஆடுவாள்; தன் உடலின் கட்டுப்பாட்டை இழந்துவிடுவாள்; தன் உடை களைக் கிழித்துக்கொள்வாள். அவள் இப்படித் தன் கட்டுப் பாட்டை இழப்பது விமலுக்குப் பிடிக்கவில்லை. மதச்சடங்கு களுக்குச் செல்லவேண்டாம் என்று அவளிடம் சொன்னான். ஆனால், அவள் அதைக் கேட்கவில்லை. அவள் கிழிந்த உடைகளுடன், மிருகப் பலியின் இரத்தம்படிந்த முகத்துடன் வீட்டுக்கு வருவாள். அதைப் பார்த்து, விமலுக்குக் கோபம் வரும்; அவளை அடிப்பான்.

சீமா இரண்டுமுறை கருவுற்றாள். ஆனால், அவளுடைய வெறித்தனமான சடங்குகளால் அவை கலைந்துவிட்டன. அவள் மேலும் பிடிவாதம்காட்டினாள்; அதனால் விமல் கோபப்பட்டான்; மனச்சோர்வு அடைந்தான், குற்றவுணர்ச்சி யும் வந்தது.

மேன்மையான ஒரு வழி

விமல் தனது ஆட்டோ ரிக்‌ஷா வண்டியில் அமர்ந்தபடி இதற்கு இன்னும் மேன்மையான வழி ஏதாவது இருக்காதா என்று மிகவும் ஏங்கினான். திடீரென்று, சாலைக்கு அருகி லிருந்த ஒரு கட்டடத்துக்கு உள்ளேயிருந்து சில குரல்கள் கேட்டன. அந்தக் கட்டடத்துக்குள் சிறுவர்களும் பெரியவர் களும் இருந்தார்கள். அங்கு ஒருவர் கதை சொல்லிக்கொண் டிருந்தார். அதை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 

தன்னுடைய பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடிய ஒரு மனிதனைப்பற்றி அந்தக் கதை இருந்தது. அவன் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன் தன் சகோதரனை ஏமாற்றி, அவனை மிகவும் வேதனைப்படுத்தியிருந்தான். அதனால், அண்ணன் தன்னைக் கொன்றுவிடுவானோ என்று பயந் தான். அப்படி ஓடும்போது, அவன் காட்டில் படுத்துத் தூங்கி னான். அங்கு ஒரு கல்லைத் தலையணையாகப் பயன் படுத்துவதைத் தவிர தூங்குவதற்கு வசதியாக எதுவும் இல்லை. தனிமை அவனை வருத்தியது; தன் குடும்பம் உடையுமாறு தான் செய்த செயல்களை எண்ணி வருந் தினான்.

கதையை விமல் கூர்ந்து கவனித்தான். அந்த மனிதனுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

கதைசொன்னவர் தொடர்ந்து பேசினார். அந்த மனித னுக்குத் தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஓர் ஏணி வந்தது. அந்த ஏணி மேலோகம்வரை எட்டியது. தேவதூதர்கள் அந்த ஏணியில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். வேதனையோடு இருந்த அந்த மனிதனுக்கு அவர்கள் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதுபோல் தோன்றியது. தூங்கி எழுந்தபோது, அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தான் தலையணையாகப் பயன்படுத்திய கல்லை வைத்து தன் கடவுளுக்கு அவன் ஒரு நினைவுச் சின்னத் தைக் கட்டினான். கடவுளுடன் அவன் மீண்டும் இணைந் திருப்பதாக அந்த ஏணியின் தரிசனம் அவனுக்கு உணர்த் தியது; எல்லாம் சரியாகிவிடும் என்று அவனுக்குப் புரிந்தது.

ஒரு புதிய புத்தகம் 

மக்கள் அங்கிருந்து கிளம்பியபோது, விமல் அந்தக் கட்டடத்துக்குள் கூச்சத்தோடு நுழைந்தான்.

“ஓய்வுநாள் வாழ்த்துகள்” என்று சொல்லி, அந்தக் கதைசொல்லி அவனை வரவேற்றார். 

“ஓய்வுநாள் என்றால் என்ன?” விமல் ஆர்வத்துடன் கேட்டான்.

 “நம்மை உருவாக்கிய கடவுளை நாங்கள் வணங்கு கிறோம்” என்று அந்தக் கதைசொல்லி பதில் சொன்னார். “அவர் வாரத்தின் ஏழாவது நாளாகிய ஓய்வுநாளில் தம்மை வணங்குமாறு அவர் நம்மிடம் கேட்கிறார். ஏனெனில், அவர் உலகை ஆறு நாட்களில் உருவாக்கினார். அந்த மனிதனு டைய கனவில் வந்த ஏணி நம் பூமியையும் மேலோகத்தையும் இணைத்ததுபோல, ஓய்வுநாள் என்பது வாரந்தோறும் கடவுளுடன் நம்மை இணைக்கும் புனித நாளாகும். இந்த நாளில் நாம் வழிபாடு செய்யும்போது, நம்மைப் படைத்த கடவுள்மீது நமக்கு இருக்கிற பக்தியை நாம் வெளிப்படுத்து கிறோம்; அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.”

இரட்டைச் சகோதரர்களின் கதை விமலைத் தொட்டது. “இந்தக் கதை எங்கே இருக்கிறது?” 

“இது இறைவன் இயேசு கிறிஸ்துவின் புத்தகமாகிய வேதாகமத்தில் உள்ளது” என்ற கதைசொல்லி, அலமாரி யிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து விமலிடம் கொடுத்தார். “நீங்கள் அந்தக் கதையை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.” 

விமல் அந்த மனிதருக்கு நன்றிசொன்னான்; புதிய புத்தகத்துடன் வீட்டுக்குச் சென்றான். அந்தப் புத்தகத்தைப் படித்தான்; அவன் மனதில் அமைதி உண்டானது. அடுத்த சனிக்கிழமை அவன் அங்கு திரும்பி வந்தான். தேவனு டைய புனித நாளில் அமைதியாக அமர்ந்து, தன்னை உருவாக்கிய கடவுளிடம் அவன் பிரார்த்தனை செய்தான். அப்போது, அவனுடைய இருதயத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந் தது. 

மாறிய மனிதன்

ஒருநாள், விமல் தன்னுடைய புதிய புத்தகத்தைப் படித்த போது, “நீ கடவுளுடைய ஆலயம், கடவுளின் ஆவி உனக்குள் வசிக்கிறது என்பது உனக்குத் தெரியாதா?” (1 கொரிந்தியர் 3:16) எனும் வாக்கியத்தை அதில் பார்த்தான். அவனுடைய மனதில் திடீரென்று புரிதல் ஏற்பட்டது. மனிதனின் உடல் கடவுளுடைய ஆலயம் என்பதால், அதைக் கெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று அவன் நினைத்தான். இனி மனைவியை அடிக்கக்கூடாது என்று முடிவுசெய்தான்.

இதற்குமுன் அவன் தன் மனைவியை அடிக்காமல் இருக்க பலமுறை முயற்சிசெய்திருக்கிறான். ஆனால், இந்த முறை அது பலன் தந்தது. வேதாகமத்தைப் படிப்ப தும், ஓய்வுநாளில் வழிபடுவதும் தன்னைப் படைத்த கடவு ளுடன் தன்னை இணைத்திருக்கிறது என்பதும், அவர் தன் மனதை மாற்றி இருக்கிறார் என்பதும் அவனுக்குப் புரிந் தது. ஒரு புனிதக் கரம் அவனுடைய நெஞ்சிலிருந்து கல் மனதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் கனிவான ஒரு மனதை வைத்ததுபோல் இருந்தது. 

மீண்டும் இணைந்தார்கள்!

விமல் தன்னைப் படைத்த கடவுளை பல ஆண்டுகள் புனித ஓய்வுநாளில் தொடர்ந்து வழிபட்டான். மெதுவாக, சீமா தன் கணவரிடம் ஒரு மாற்றத்தைக் கவனித்தாள். அவன் இப்போதெல்லாம் அவளை அடிப்பது இல்லை. அதற்குப்பதிலாக, அவன் மரியாதையாகவும் கனிவாகவும் நடந்துகொண்டான்.

இந்தச் சமயத்தில், சீமா மனதில் சோர்வடைந்திருந்தாள். இறைவன் இயேசு கிறிஸ்துவின் புத்தகத்தைப் படித்த பின்பும், சனிக்கிழமைகளில் வழிபாட்டிலிருந்து வீடு திரும்பிய பின்பும் விமல் மிக அமைதியாக இருப்பதை அவள் கவனித்தாள். விமல் ஒருநாள் அவளிடம், “நீ என் னோடு வரவிரும்புகிறாயா?” என்று கேட்டான். அவள் சம் மதித்தாள்.

“ஓய்வுநாள் நம் குடும்பத்தின் சிறப்பான புனித நாள்” என்றான் விமல். “அந்த நாளில் அவருடன் நாம் அதிக ஐக்கியம் வைக்குமாறு கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் இவ்வாறு அவரோடு ஐக்கியம் வைத்தால், அவர் அதிசயங் கள் செய்கிறார். எங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு நாளும் சிருஷ்டி கரை வழிபட, ஓய்வுநாளில், அவரோடு அதிகநேரம் செலவிட கற்றுக்கொண்டுள்ளோம். ஓய்வுநாள் ஆசீர்வாதங்கள் நம்மைக் கடவுளுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகின்றன; நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிவருகிறோம்.

இன்று, விமலும் சீமாவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அக்கம்பக்கத்து வீட்டார் எல்லாருக்கும் ஓய்வுநாளின் ஆசீர்வாதங்களைச் சொல்கிறார்கள்.

நீங்கள் ஓய்வுநாளைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், அல்லது ஒரு வேதாகமத்தைப் பெற விரும்பி னால், தயவுசெய்து, இந்தத் தாளின் பின்பக்கத்தில் உள்ள தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.
இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.

எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்

புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

newsletter-cover