
கடவுளின் விசேஷித்த மக்கள்
சுருக்கம்
வரவிருக்கும் காலத்தில் முழுமையான ஓர் உலகத்தை தாம் மீண்டும் உருவாக்கப் போவதைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குச் சொல்லியுள்ளார். அவருடைய விசேஷமான மக்கள் அங்கே என்றும் வாழ்வார்கள். இந்த விசேஷமான மக்கள் யார்? வேதாகமம் அவர்களை “மீதமானவர்கள்” என்று அழைக்கிறது. மீதமானவர்களைப்பற்றிய சுருக்கமான விளக்கத்தை இந்தத் துண்டுப்பிரசுரம் தருகிறது. எந்த நிகழ்வைப் பார்ப்பதற்கு, அவர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறது.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
8 மொழிகள்
பக்கங்கள்
6
நீண்ட பயணம் செல்லத் தயாரான ஒரு மனிதர் தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்துப் பேசி னதுபற்றி ஒரு கதை இருக்கிறது. முதல் வேலைக் காரரிடம் அவர் ஒரு பெரிய பை நிறைய பணம் கொடுத்தார்; இரண்டாவது வேலைக்காரரிடம் சற்றுச் சிறிய பை நிறைய பணம் கொடுத்தார்; மூன்றாவது வேலைக்காரரிடம் ஒரு மிகச் சிறிய பை நிறைய பணம் கொடுத்தார்; அவரவர் திறமையின் அடிப்படையில் இவ்வாறு கொடுத்தார். தான் இல்லாதபோது தன் சொத்தை கவனித்துக்கொள்ளுமாறு அவர்களிடம் சொன்னார். பிறகு, அவர் ஊருக்குப் புறப்பட்டார்.
முதல் வேலைக்காரர் அந்தப் பணத்தை வைத்து வணிகம் செய்தார். அதேபோல், இரண்டாவது வேலைக்காரரும் ஒரு தொழில் செய்தார். இருவரும் கடினமாக உழைத்தார்கள்; விரைவில், தங்களை நம்பி முதலாளி கொடுத்த பணத்தை இருமடங்காக்கிவிட்டார்கள்.
ஆனால், மிகச் சிறிய பையில் பணம்பெற்ற மூன்றாவது வேலைக்காரர் வேறுவிதமாகச் செயல்பட்டார். அவர் தரையில் ஒரு குழி தோண்டி, அங்கு அந்தப் பணத்தைப் பத்திரமாக ஒளித்துவைத்தார். அதன்பிறகு, முதலாளி இல்லாத ஆண்டுகளைச் சோம்பலாக ஆனால் மகிழ்ச்சியாகக் கழித்தார்.
கடைசியில், முதலாளி திரும்பி வந்தார். முதல் இரண்டு வேலைக்காரர்களும் கஷ்டப்பட்டு உழைத்து, சொத்து களை இருமடங்காக்கியிருக்கிறோம் என்பதை அவ ருக்குக் காண்பித்தார்கள். “நன்றாய்ச் செய்தீர்கள்! நீங் கள் நல்ல வேலைக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள். சிறு விஷயங்களில் நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இப்போது, நான் உங்களுக்கு இன்னும் பெரியவற்றைத் தருகிறேன்” என்று செல்லி, அவர்களுக்குப் பரிசளித்தார்.
மூன்றாவது வேலைக்காரர் அச்சத்தோடும் சங்கடத் தோடும் முன்னால் வந்தார். “ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிற வருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். எனக்கு அச்சமாக இருந்தது. அதனால், நான் உங்கள் பணத்தை நிலத்தில் ஒளித்துவைத்தேன். இதோ, உங்களுக்குச் சொந்தமான பணம். அதில் ஒரு துளியும் குறையவில்லை” என்றார். தான் வெளியூர் சென்றிருந்தபோது இந்தச் சோம்பேறி வேலைக்காரர் எதுவும் வேலை செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்ட முதலாளி அவர்மீது கோபப் பட்டார். அவர் தன்னுடைய பணத்தை வாங்கிக்கொண்டார், விசுவாசமாக உழைத்த வேலைக்காரருக்கு அதைக் கொடுத் தார், விசுவாசமற்ற வேலைக்காரனை தண்டனைக்கு அனுப்பினார்.
மிகச்சிறந்த ஒரு ராஜ்யம்
மிகச்சிறந்த ஆசிரியரும் கதைசொல்லியுமான இறை வன் இயேசு கிறிஸ்துவே இந்தக் கதையைச் சொன்னவர். ஒரு நாள் அவர் மேகங்களில் திரும்பி வருவார், தன்னுடைய சிறப்பு மக்களுக்கு, அதாவது, விசுவாசமாக இருந்த தன் வேலைக்காரர்களுக்கு மிகச் சிறந்த விருதுகளை அளிப்பார் என்று அவருடைய புத்தகமாகிய விவிலியம் சொல்கிறது. ஆனால், அவர் திரும்பிவருகிற நாளுக்குத் தயாராக இல் லாதவர்கள் மிகவும் ஏமாந்துபோவார்கள்.
கடவுளுக்கு விசுவாசமாகவுள்ள வேலைக்காரர்களுக்குக் கிடைக்கப்போகும் அற்புதமான பரிசு என்ன? இறைவன் இயேசு கிறிஸ்து நம்மைக் “கடவுளின் ராஜ்யம்” என்று அழைக்கப்படுகிற ஓர் இடத்துக்கு அழைத்துச்செல்வதாக உறுதியளித்துள்ளார். இந்த ராஜ்யம்தான் நம்மை உருவாக் கிய கடவுள் வசிக்கின்ற இடம். அது மிகச் சிறப்பான இடம்; அங்கு எல்லாரும் முழுமகிழ்ச்சியுடன் இருப்பார்கள்; மனித ருடன் கடவுள் வசிப்பார். இந்த ராஜ்யத்தின் மக்கள் கடவு ளின் விதிகளோடும், ஒருவருக்கு ஒருவரோடும் இணக்கத் தோடு வாழ்வார்கள். அங்கே வருத்தம் இல்லை, வலி இல்லை, மரணம் இல்லை. இந்தச் சிறந்த ராஜ்யத்திற்கு முடிவே இராது! ஆனால், விசுவாசம் உள்ளவர்களும் கீழ்ப் படிந்து நடக்கிறவர்களும்தான் இந்த இடத்துக்குச் செல்ல முடியும். கடவுளை நிராகரிக்கிறவர்கள் அல்லது அவருக்குச் சேவைசெய்வதில் சோம்பேறித்தனத்தோடு அக்கறையின்றி இருக்கிறவர்கள் அந்த ராஜ்யத்துக்குள் நுழையமாட்டார்கள்.
கடவுளின் ராஜ்யத்துக்குள் செல்லும் வழியை நாமாகச் சம்பாதித்துவிடமுடியாது. பல ஆயுட்காலங்களில் நற்செயல் கள் செய்தால்கூட, அந்த வழி நமக்குக் கிடைத்துவிடாது. ஆனால், நம்மை உருவாக்கிய கடவுள் அதற்கு ஓர் இலவச ஏற்பாட்டை செய்துள்ளார். யார் வேண்டுமானாலும் கடவு ளின் ராஜ்யத்துக்குச் செல்லலாம், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, அவர்களுடைய சமூக நிலை எதுவானாலும் சரி, அவர்களுடைய முந்தைய வரலாறு எப் படி இருந்தாலும் சரி. நற்செயல்களைச் செய்வதால்மட்டும் நாம் இந்த ராஜ்யத்துக்குள் செல்லமுடியாது என்றாலும், நம் செயல்கள் முக்கியமானவை. நாம் இப்படிப்பட்ட ஒரு சிறப்பான, இணக்கமான இடத்தில் மகிழ்ச்சியாக இருப் போமா என்று கடவுள் நம் செயல்களைப் பார்த்துத் தீர் மானிப்பார்.
முதல் இரண்டு வேலைக்காரர்களைப்போன்ற சிறப்பான மக்கள், அதாவது, தாங்கள் செய்கிற அனைத்திலும் உண்மை யுடன் இருக்கிறவர்களைப்பற்றி விவிலியம் விவரிக்கிறது. இந்தச் சிறப்பு மக்கள் 'மீதமானோர்' என்று அழைக்கப்படு கிறார்கள். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கடவுளுக்குக் கீழ்ப் படிகிற இவர்கள்தாம் இறைவன் இயேசு திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிற மக்கள்.
மீதமானோருடன் சேருதல்
நாம் கடவுளின் சிறப்பு மக்களில் ஒருவராக, அதாவது, கடவுளின் ராஜ்யத்துக்குள் ஒருநாள் நுழையப்போகிற விசுவாசமுள்ள வேலைக்காரர்களில் ஒருவராக ஆவது எப்படி? கடவுளுக்கு உண்மையுடன் இருப்பதற்கு இறை வன் இயேசு நமக்குக் கற்றுத்தந்துள்ளார். ஆனால், அவர் சிக்கலான விதிகள்நிறைந்த நீண்ட பட்டியல் எதையும் தரவில்லை. கடவுளை நாம் நம்முடைய முழு இருதயத் தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் நேசிக்கவேண்டும் என்றும், நாம் நம்மை நேசிப்பது போலவே பிற மனிதரை யும் நேசிக்கவேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார் (விவிலியம், மத்தேயு 22:37–40). இது எளிதாகத் தோன்ற லாம், ஆனால், நேசிக்கப்படத் தகுதி இல்லாத மக்களை நேசிப்பது நம்மில் பலருக்கு எளிய செயலாக இருக்காது. என்றாலும், நாம் நம் எதிரிகளையும் நேசிக்கவேண்டும் என்று இறைவன் இயேசு சொன்னார். (மத்தேயு 5:44). கட வுள் நம் இதயங்களை அற்புதமாக மாற்றி, இயற்கைக்கு மேலான அன்பையும் நன்மையையும் நமக்கு வழங்கு வதால்தான் இது சாத்தியமாகிறது. கடவுள்மீது அன்பு செலுத்துகிற, பிறர்மீது அன்பு செலுத்துகிற வாழ்க்கையே நாம் இறைவன் இயேசுவின் விசுவாசமான வேலைக்காரர் கள் என்பதற்குச் சான்றாகும்.
கடவுளின் ராஜ்யத்தில் நித்திய வாழ்க்கை!
முதல் இரண்டு வேலைக்காரர்களைப்போல, கடவுளை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் பொறுமையுடனும் உண்மையுடனும் இருக்கவேண்டும். நம் எஜமான் இயேசு திரும்பி வரும்போது, நம் விசுவாசத்திற்கும் உண்மைக்கும் பரிசு கிடைக்கும்; கடவுளுடைய ராஜ்யத்துக்குள் நுழைந்து, நித்தியமாக அங்கு வாழ்வதே அந்தப் பரிசு. “கடவுளின் கட்டளைகளையும், இயேசுவின் விசுவாசத்தையும் கடைப் பிடிப்பவர்களுக்கே” அந்த ராஜ்யம் உரியது. (விவிலியம், வெளிப்படுத்தல் 14:12).
கடவுளின் ராஜ்யத்தில் நித்தியமாக வாழப்போகிறவர் களுடன் நீங்கள் இணைய விரும்பினால், நீங்கள் இதுபோல் ஒரு பிரார்த்தனையைச் செய்யலாம்:
அன்புள்ள கடவுளே, நான் உங்களுடைய ராஜ்யத்தில் உங்களுடன் இருக்க விரும்புகிறேன். நீங்கள் திரும்ப வரும்வரை உண்மையோடு இருப்பதற்கு எனக்குக் கற்றுத்தந்து, உதவுங்கள். என்னை இன்னும் மேலான ஓர் இடத்துக்கு அழைத்துச்செல்கிற தங்கள் உறுதிமொழிக்கு நன்றி! ஆமென்.
கடவுளின் ராஜ்யத்தைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து, இந்தத் தாளின் பின்பக்கத்தில் உள்ள தகவலைப் பயன்படுத்தி, எங்களைத் தொடர்புகொள் ளுங்கள்.
Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications