
கோபத்தை வெல்லுதல்
சுருக்கம்
ஒவ்வொருவருக்கும் கோபம் வரும். ஆனால், நாம் நம் கோபத்தை விடாமல் இருந்தால், அது நம்மை அழித்துவிடும். இயேசு எப்படி மற்றவர்களை மன்னித்தார், அதாவது தம்மைக் கொன்றவர்களையும் மன்னித்தார் என்பதை அறிந்துகொண்டதன்மூலம் வாழ்க்கை மாறின ஒரு மனிதனின் அனுபவத்தை இந்தத் துண்டுப்பிரசுரம் சொல்கிறது. நாம் இயேசுவைப் பின்பற்றினால், அவர் நம்மை மாற்றி, நம்மை அவரைப்போல் ஆக்குவார். நம் வாழ்க்கை தேவனுக்கு மகிமை சேர்க்கும்விதத்தில், அவர் நம் கோபத்தையும் கசப்பையும் நீக்குவார்.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
14 மொழிகள்
பக்கங்கள்
6
“எங்கள் கிராமத்தில் எவரும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவமனைக்குச் செல் வது இல்லை. இங்கேயே பார்த்துக்கொள்ள லாம்” என்று மனைவியின் அம்மா சொன்னார். “அதிக செலவு ஏற்படுத்துகின்ற மருத்துவமனை தேவையில்லை” என்று அவள் சொன்னாள்.
இதினிமித்தம் டாரா கவலைப்பட்டான். அவனுடைய மனைவி மிகவும் பலவீனமாக இருந்தாள்; அதனால், ஒரு நல்ல மருத்துவர் அருகில் இருந்தால் நல்லதென்று அவன் நினைத்தான். “மாமியாரிடம் வாக்குவாதம் செய் வதில் பயனில்லை,” என்று முணுமுணுத்தான்.
மனைவியின் பிரசவவலி தொடங்கியது; குடிசைக்கு வெளியே டாரா காத்திருக்க வேண்டியிருந்தது. அவளது அழுகை பலமாய்க் கேட்டது, பின்னர் சத்தம் எதுவும் கேட்கவில்லை. மாமியார் வெளியே வந்தார். அவனுடைய விலைமதிப்பற்ற மனைவியும் குழந்தையும் இறந்துவிட் டார்கள்; மாமியார் முகத்தைப் பார்த்தாலே, அது தெரிந் தது. அவனுடைய கனவுகள், மகிழ்ச்சி அனைத்தும் அவர்களோடு சேர்ந்து அழிந்துவிட்டன.
முதலில் அமைதியாக இருந்த அவனுக்கு மெல்ல மெல்ல கோபம் கொந்தளிக்க ஆரம்பித்தது. “மருத்துவ மனைக்குச் சென்றிருந்தால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அவள் அம்மா இவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்காவிட்டால், நன்றாக இருந்திருக்கும்!” என்று டாராவின் இதயம் கூக்குரலிட்டது.
தன் வாழ்க்கையை நாசமாக்கிய இந்தப் பெண்ணிடமி ருந்து டாரா விலகிச்செல்ல வேண்டும். எதுவும் சொல்லிக் கொள்ளாமல், அவன் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்.
கோபத்தால் ஓடுதல்
தனது சகோதரி மாலியையும், அவள் கணவர் ட்ரேயையும் பார்த்து, அவர்களுடன் தங்குவதற்காக தலைநகருக்கு டாரா சென்றான். அன்று இரவு அவன் கண்விழித்தபடியே, தனி யாகப் படுத்துக்கிடந்தான். கோபம் ஒரு கருமேகத்தைப்போல அவனைத் தொடர்ந்து வந்தது. அவனால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.
மாலை நேரங்களில் தனது சகோதரியின் குடும்பத்துடன் இருந்தபோது, டாராவுக்கு கொஞ்சம் அமைதி கிடைத்தது. ஒன்றாகச் சாப்பிட்டபிறகு, அவர்கள் இனிமையான பாடல்களைப் பாடுவார்கள்; ட்ரே கதை சொல்வார். டாரா தன் குழந்தைப் பருவத்தில் கேட்ட கட்டுக்கதைகளைவிட இந்தக் கதைகள் முற்றிலும் வேறுபட்டவை; இவை வேதா கமம் எனப்படும் கிறிஸ்தவப் புனித நூலிலிருந்து வந் தவை. உலகை ஒரு முழுமையான அமைதியான சொர்க்க மாகப் படைத்த அன்பான கடவுளின் கதையை டாரா இதற்குமுன் கேட்டதில்லை. தங்கள் சொந்த வழியைப் பின்பற்றினால் மகிழ்ச்சியாக இருக்கலாமென்று நினைத்து, முதல் மனிதர்கள் தங்களைப் படைத்தவருக்கு எதிராக எப்படிக் கலகம்செய்தார்கள் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவர்களுடைய தவறான தெரிவினால், நல்லதாயிருந்த உலகில் தீமையும் துன்பமும் மரணமும் நுழைந்தன.
தனது மாமியார் மீதிருந்த தன் கோபத்தை ட்ரேயிடம் ஒருநாள் டாரா கூறினான். கசப்பும் மனச்சோர்வும் தன்னைத் துன்புறுத்துவதை விளக்கினான். டிரே அமைதியாகக் கேட் டார். “டாரா, எனக்குப் புரிகிறது. யுத்தத்தின்போது நான் பல பயங்கரமான சம்பவங்களை அனுபவித்தேன். ஆனாலும், எனக்கு அமைதி கிடைத்தது. உன் கோபம் உன் குடும்பத்தைத் திரும்பக் கொண்டுவராது. கோபத்தை வைத்திருப்பது என்பது ஒரு கைக்குண்டை மார்பில் வைத்திருப்பது போன் றது. அது உன்னை அழித்துவிடும்!” என்று ட்ரே விளக்கி னார்.
டாரா தன் முகத்தை மூடிக்கொண்டான். “என்னால் முடிய வில்லையே,” என்று டாரா புலம்பினான். “நான் என் மனைவி யின் பெற்றோரை நேசித்தேன்; ஆனால், இப்போது நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது” என்றான்.
வெறுப்பு எனும் கண்ணிவெடி
ட்ரே தலையசைத்து ஒத்துக்கொண்டார். “மனித ரீதியாக, அது சாத்தியமற்றதுதான். ஆனால், நம்மைப் படைத்தவரால் உனக்கு உதவமுடியும்” என்றார்.
“தேவனாலா?” என்று டாரா கேட்டான். “நீங்கள் சொன்ன கதைகளைக் கேட்டேன்; ஆனால், அவை உண்மையானவை என்று எனக்கு எப்படித் தெரியும்? மேலும், கடவுள் எனக்கு என்ன உதவிசெய்ய முடியும்?” என்று டாரா கேட்டான்.
ட்ரே சிரித்தார். “இந்தப் பரிபூரண உலகத்தை மனிதர்கள் எப்படிக் கெடுத்துவிட்டார்கள் என்பதை நீ வேதாகமத் திலிருந்து கற்றுக்கொண்டாய். கடவுள் அவர்கள்மீது கோபப்பட்டிருக்கலாம், ஆனால், அவர் கோபப்படவில்லை. மாறாக, அவர் அவர்களை நேசித்தார்; அதனால், அவர் களையும் பூமியையும் மீட்டெடுக்க ஒரு திட்டத்தை ஏற் படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, நாம் ஜெபித்தால், கடவுள் நமக்கு உதவுவார். எனக்கு எப்படித் தெரியும்? நான் ஜெபித்தபோது, அவர் எனக்கு உதவிசெய்திருக்கிறார். இப்போது கோபம் என்னைத் துன்புறுத்துவது இல்லை” என்றார் ட்ரே.
ட்ரே தொடர்ந்து பேசினார். “தேவகுமாரனாகிய இயேசு பூமியில் பிறந்தார்; நம்மைப் படைத்தவரிடம் அவர் நம் இதயங்களை திருப்புகிறார். இயேசு தமது போதனை யாலும், வியாதிகளைக் குணமாக்கியதாலும் பிரபலம் அடைந்ததைப் பார்த்து, மதத்தலைவர்கள் மிகவும் பொறாமை கொண்டனர். அவரைக் கொல்ல, அவர்கள் திட்டமிட்டார்கள். அவர்மேல் அவர்கள் பொய்யாகக் குற்றஞ் சாட்டினார்கள்; வாரால் அடித்தார்கள்; சிலுவையில் அறைந் தார்கள். அங்கே அவர் இறந்துபோனார்.”
“அது கொடூரமானது!” டாரா குறுக்கிட்டான்.
“ஆம், ஆனால் இயேசு அவர்களை எதிர்த்துப் போரா டவோ, சபிக்கவோ இல்லை. மாறாக, அவர் பரலோகத்தை நோக்கிப்பார்த்து, ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார் களே’” என்றார்.
“அப்படியா!” டாரா ஆச்சரியப்பட்டான். “நான் அவ்வாறு செய்ய முடியாதென்று நினைக்கிறேன்” என்றான்.
“நான் அதை ஒப்புக்கொள்கிறேன். நானும் அப்படித்தான் நினைத்தேன். நான் ஒரு முன்கோபி. ஆனால், டாரா, இயேசு ஒன்று சொல்லியிருக்கிறார்: ‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங் கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’” (மத்தேயு 5:44). இயேசு இதைச் போதித்ததுமட்டுமல்ல, வாழ்ந்தும் காண்பித்தார். நான் இவற்றை யோசித்து, கடவுள் என்னைக் குணப்படுத்தவேண்டுமென்று ஜெபித்த போது, நான் மாறினேன்” என்று ட்ரே பதிலளித்தார்.
மன்னிப்பின் குணப்படுத்தும் வல்லமை
அடுத்த சில வாரங்கள் வேதபோதனைகளை டாரா கற்றறிந்தான்; இயேசுவின் மரணம், எதிரிகளை நேசித்தல் போன்றவைபற்றி அறிந்துகொண்டான். தனது சகோதரி யின் குடும்பம் செய்ததைப்போல, டாராவும் கடவுளிடம் தன் மனம்திறந்து ஜெபம்பண்ணினான். தன் மன வேதனையை யும் கோபத்தையும் கடவுளிடம் சொன்னான். தனது இதயத்தைக் குணப்படுத்துமாறு கடவுளிடம் அவன் வேண்டிக்கொண்டபோது, அவன் மனதை அழுத்தியிருந்த வேதனை குறைய ஆரம்பித்தது.
டாராவில் நடந்த மாற்றத்தை ட்ரே கவனித்தார். “கடவுள் உன்னை மாற்றுவதை நான் காண்கிறேன். நீ இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறாயா?” என்று டாராவிடம் ட்ரே கேட்டார்.
டாரா சிரித்துக்கொண்டே, “ஆம். கடவுள் என்னைக் குணப்படுத்தி வருகிறார். நான் அவரைப் பின்பற்ற, என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
மற்ற சீடர்களுடன் சேர்ந்து ஜெபித்து, கடவுளைப்பற்றி அறிந்துகொண்டு, வேதாகமத்தில் உள்ள கடவுளின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து, எல்லோரிடமும் அன்பாக இருப்பதே இயேசுவைப் பின்பற்றுவது என்று டாராவுக்கு ட்ரே கற்றுக்கொடுத்தார். தங்களை கடவுள் எவ்வாறு மாற்றுகிறார் என்பதை கடவுளின் மக்கள் மற்றவர்களிடம் சொல்லி, அவருடைய வல்லமையை அனுபவிக்கவருமாறு மற்றவர்களை அழைப்பார்கள். ஒருநாள் அவர் இந்த உலகத்தைச் சீர்திருத்தி அமைப்பார் என்கிற வாக்குறுதி இயேசுவின் சீடர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடவுளைப் பின்பற்ற டாரா முடிவுசெய்தான். ஒரு நாள், டாரா தனது பொருட்களைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருப்பதை ட்ரே கவனித்தார். “எங்கே போகிறாய்?” என்று ஆர்வத்தோடு கேட்டார்.
“நான் என் மனைவியின் கிராமத்திற்குச் செல்கிறேன்,” என்றான் டாரா. “நான் அவர்களை மன்னித்துவிட்டேன் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும்! மேலும், எனக்குள் இருக் கும் புதிய நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.”
கோபம், கசப்பு, மனச்சோர்வு போன்றவற்றைச் சமாளிக்க இயேசு உங்களுக்கு எப்படி உதவுவார் என்பதை அறிய விரும்பினால், இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தகவலைப் பார்த்து, எங்களுடன் தொடர்புகொள்ளவும்.
Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications