
உங்கள் நித்திய வீட்டைக் கண்டுபிடித்தல்
சுருக்கம்
நம் சிருஷ்டிகரான தேவன் பரிபூரணமான, கறைபடாத ஓர் உலகத்தை உருவாக்கினார். ஆனால், முதல் மனிதர்கள் வேதனையான தீர்மானங்களைச் செய்தார்கள்; அதன்பிறகு பூமி பாதுகாப்பான இடமாக இல்லை. கடவுள் முன்புபோல் எல்லாவற்றையும் மீண்டும் நன்றாக மாற்றுவார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமம் உறுதியளிக்கிறது. ஆனால் அவருடைய வாக்குறுதி உண்மை என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? இந்தத் துண்டுப்பிரசுரம் தானியேல் 9 இல் உள்ள ஒரு அற்புதமான தீர்க்கதரிசனத்தை விளக்குகிறது. வேதாகமத்தில் உள்ள மற்றச் செய்திகளும் கடவுள் சொன்னதுபோலவே நடக்கும் என்று இது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது.
வகை
துண்டுப் பிரசுரம்
வெளியீட்டாளர்
Sharing Hope Publications
கிடைக்கிறது
14 மொழிகள்
பக்கங்கள்
6
வீட்டில் அன்பும் நம்பிக்கையும் சமாதானமும் இருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம். துன்பம் நிறைந்ததும், தற்காலிகமானதுமான இந்த உல கில், உண்மையான ஓய்வு கிடைக்கக்கூடிய பாதுகாப்பான வீட்டிற்காக நம் உள்ளங்கள் ஏங்குகின்றன.
முடிவில்லா அமைதி வேண்டுமென்கிற இந்த ஏக்கமா னது தேவன் நமக்குத் தந்த ஒன்று ஆகும். நித்தியகாலமும் அமைதியோடு வாழ்வதற்காக மனிதர்களை வடிவமைத்த ஒரு கடவுளைப்பற்றி கிறிஸ்தவ புனித நூலான வேதாகமம் கூறுகிறது (பிரசங்கி 3:11).
வேதாகமத்தை நாம் நம்ப முடியுமா? இந்தப் புத்தகத்தை வாசித்ததால் மகிழ்ச்சியும் அமைதியும் பெற்றதாக கோடிக் கணக்கான மக்கள் வரலாறு முழுவதிலும் சொல்லியிருக் கிறார்கள். அதன் போதனைகள் உண்மை என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது?
ஆதாரம் 1: தர்க்கரீதியான ஒரு விளக்கம்
பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு சிறந்த விளக்கத்தை ‘மாபெரும் வெடிப்புக் கொள்கை’ தருவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இருப்பினும், இந்த விளக்கத்திலுள்ள மிக முக்கியமான குறைபாட்டை விஞ்ஞானிகள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். வெடிக்கக்கூடிய ஒன்று ஏற் கனவே இல்லை என்றால், வெடிப்பு நடந்திருக்க முடியாது. ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்பதை இந்தக் குறை பாடு தெரிவிக்கிறது.
பூரணமான ஓர் உலகத்தைக் கடவுள் உண்டாக்கி, அதன் ஆட்சியாளர்களாக முதல் ஆணையும் பெண்ணையும் உரு வாக்கினார் என்று வேதாகமம் சொல்கிறது. மனிதர்கள் அங்கே எப்போதும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டுமென்று கடவுள் எண்ணினார். பாதுகாப்பாக இருப்பதற்கான விதிமுறைகளையும் தந்தார். இருப்பினும், ஆணும் பெண்ணும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவரை விட்டுப் பிரிந்தார்கள். அவர்களின் செயலால், உலகத்திற்கு மரணம் வந்தது (ரோமர் 5:12). நித்திய பாதுகாப்பும் ஓய்வும் உள்ள ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க மனிதகுலம் அப்போதி ருந்து ஏங்கிவருகிறது.
ஆனால், மனித குடும்பத்தை கடவுள் கைவிட்டுவிட வில்லை. நம் வாழ்வில் உள்ள தீமையின் சக்தியை முறிய டிக்கவும், நம் உள்ளங்களிலிருந்து ஒழுக்கமும் நன்மையும் தாமாகவே வெளிப்படுத்தச் செல்லவும் ஒரு மீட்பரை அனுப்பு வதாக கடவுள் உறுதியளித்தார். நாம் நமது சொந்த வீட் டிற்குத் திரும்புவதற்கு, அவர் வழி உண்டாக்க இருந் தார் (யோவான் 14:1–3).
ஆதாரம் 2: விடுதலை தருகிற ஒருவர்பற்றி மதங்களின் பொதுக்கருத்து
இந்த உலகத்தை மீட்டு, நித்திய வாழ்வு தரப்போகிற ஒரு மீட்பர்பற்றிய வெளிச்சமானது வெவ்வேறு நாடுகளில் வாழ் கிற வெவ்வேறு மதத்தார் மத்தியில் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறது. ஆனால், வேதாகமம்மட்டுமே அவருடைய வருகைக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் காலவரிசையை முன் னறிவித்துள்ளது. இந்தக் காலவரிசைப்படி வரலாற்றில் நடந்திருந்தால், நித்திய ஓய்வுக்கான வீடுபற்றிய வேதாகம வாக்குறுதியும் உண்மை என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆதாரம் 3: வரலாற்றின்படி சரிபார்த்தல்
கிமு 605 இல், யூததேசத்தின்மேல் படையெடுத்த பாபி லோனியப் படைகளால் யூதர்கள் அடிமைகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். இந்த நேரத்தில், யூதர்களைத் தம்மிடம் திரும்ப அழைப்பதற்காக, கடவுள் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பினார். மக்களை இரட்சிக்கப்போகிறவர்பற்றிய வாக்குறுதியை இந்தத் தீர்க்கதரிசிகளும் அக்கால மக்க ளுக்கு நினைவூட்டினார்கள்; அவர் எப்போது வருவார் என் பதையும் முன்னறிவித்தார்கள்.
இந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் தானியேல்; இரட்ச கரின் வருகை சம்பந்தமான 490 வருட காலவரிசைபற்றிய ஒரு தரிசனத்தை அவர் கண்டார். அழிக்கப்பட்ட தங்கள் தலைநகரான எருசலேமை யூதர்கள் மீண்டும் கட்டலாம் என்று ஒரு ராஜா ஆணையிடும் ஆண்டில் இந்தக் கால வரிசை தொடங்க இருந்தது. அதிலிருந்து 483 ஆண்டு களுக்குப் பிறகு, இரட்சகர் தோன்றி, மூன்றரை ஆண்டுகள் ஊழியத்திற்கும் போதனைக்கும்பிறகு, அவர் தீய எதிரி களால் கொல்லப்பட இருந்தார். அதற்கு மூன்றரை ஆண்டு களுக்குப் பிறகு, கடவுள் வாக்குறுதியளித்த சீர்திருத்தம் பற்றிய நற்செய்தி உலகம் முழுவதும் பரவ இருந்தது.
இது சிறப்பான ஒரு தீர்க்கதரிசனம்தான்! ஆனால், அதை வரலாற்றால் சரிபார்க்க முடியுமா? எருசலேம் நகரத்தை மீண்டும் கட்டுவதற்கான கட்டளை கி.மு. 457 இல் நடைமுறைக்கு வந்தது. பின்னர், சரியாக 483 ஆண்டு களுக்குப் பிறகு, சிறந்த போதகரான இயேசு தனது பொது ஊழியத்தைத் தொடங்கினார் (கி.பி. 27 இல்) வரலாற்றில் நன்கு அறியப்பட்ட ரோமானியப் பேரரசரான திபேரியு ராயனின் 15 ஆவது ஆண்டில் (லூக்கா 3:1–2) இயேசுவே இரட்சகர் என்பதற்கான அடையாளம் நிறைவேறியதை வேதாகமம் காட்டுகிறது. இதிலிருந்து இந்த வருடம் உறுதிப்படுகிறது. நேரில் கண்ட சாட்சிகள் பலரின் குறிப்பு கள் உள்ளன; அரசுகளின் குறிப்புகளும், புவியியல் அமைப்புகளின் குறிப்புகளும் உள்ளன. இவற்றை நாம் வரலாற்று ரீதியாகச் சரிபார்க்கலாம். இரட்சகர்பற்றிய தீர்க்கதரிசன காலவரிசையை இயேசு முழுவதுமாக நிறை வேற்றினார். ஆனால், இன்னும் பார்க்கவேண்டியது உள் ளது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இரட்சகர் “சங்கரிக் கப்படுவார், ஆனால் தமக்காக அல்ல” என்று தீர்க்கதரிசனம் கூறுகிறது (தானியேல் 9:26). உண்மையில், இயேசு கிபி 31இல் ரோமர்களால் சிலுவையில் அறையப்பட்டார். மரணத்தின்மீது அவர் வெற்றிபெற்றார்; ஏனெனில், அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். இயேசுவின் சீஷர்கள் முதல் மூன்றரை ஆண்டுகள் இஸ்ரவேல் தேசம்முழுவதும் மீட் பரின் நற்செய்தியைப் பிரசங்கித்தனர். ஆனால், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் உலகம் முழுவதும் நற்செய்தியை எடுத்துச்சென்றனர். இந்தக் காலக்கட் டத்தில் இயேசுவின் போதனைகள் வெகுவேகமாகப் பரவின. இதற்கான ஆதாரங்கள் பல ரோமானிய எழுத்துகளிலும் யூத புத்தகங்களிலும் உள்ளன. இந்த ஆதாரங்களால் 490-வருடத் தீர்க்கதரிசனம் உண்மை என்பது புரிகிறது.
தானியேலின் 490-வருடத் தீர்க்கதரிசனத்தின் முக்கிய தேதிகளும் நிகழ்வுகளும் கீழே உள்ள விளக்கப்படத்தில் உள்ளன.
ஆதாரம் 4: மனிதர் வாழ்வில் மாற்றங்கள்
வரலாற்றில் நிறைவேறின இந்தத் தீர்க்கதரிசனம் ஆச்சரி யமான ஒன்றாக இருக்கிறது! ஆனால், வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கு இன்னுமொரு மிகப்பெரிய சான்று உள்ளது. அதைப் படித்து, அதன் போதனைப்படி கடவுளை ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கை மாறுகிறது. குற்ற வாளிகள் தங்கள் அக்கிரமத்தை ஒப்புக்கொள்கிறார்கள். கோபம், வெறுப்பு, பொறாமை, கசப்பு ஆகியவற்றால் முன்பு நடத்தப்பட்ட மக்கள் இப்போது அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்கிறார்கள்.
இதோ, ஓர் அழைப்பு
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நிரந்தரமானதும் மகிழ்ச்சியானதுமான வீட்டைத் தேடுகிறீர்களா? வேதாகமம் அப்படிப்பட்ட வீட்டைப்பற்றி வாக்களிக்கிறது! புதுப்பிக்கப் பட்ட பூமியில் நித்திய வாழ்வுவாழ உங்களுக்கு இடம் கொடுக்குமாறு இயேசுவிடம் கேட்பீர்களா? மேலும் இது பற்றி அறிய, இந்தத் தாளின் பின்புறத்தில் உள்ள தக வலைப் பார்த்து, எங்களைத் தொடர்புகொள்ளவும்.
Copyright © 2023 by Sharing Hope Publications. தமிழ் வேதாகமத்தின் யூனியன் பதிப்பிலிருந்து வேத வசனங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் காப்புரிமை பெற்றவை.இந்தப் பிரதியை வணிக நோக்கமில்லாத தேவைகளுக்கு அனுமதி யின்றி அச்சிட்டுப் பகிர்ந்துகொள்ளலாம்.
எங்கள் செய்திமடலைப் பெற, பதிவுசெய்யுங்கள்
புதிய வெளியீடுகள் வெளியானதும் முதலில் தெரிந்துகொள்ள!

வாசகரின் மதச்சார்பு
பிரத்தியேக வெளியீடுகள்
© 2023 Sharing Hope Publications